திருவாசி (மாற்றுரைவரதீசுவரர்
கோயில்) சென்ற அனுபவமாக…
நானும் என் தோழிகளும் ஆகஸ்டு மாதம் 1 –
ந் தேதி வெள்ளிக் கிழமை அன்று திருச்சி மாவட்டம் நொச்சியம் அருகில் திருவாசி என்னும்
ஊரில் அமைந்துள்ள மாற்றுரைவரதீசுவரர் என்றக் கோவிலுக்கு மாலை 4.30 மணி அளவில் சென்றோம்.
கோவில் 5.00 மணிக்குத் திறந்தார்கள். மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக அமைந்துள்ளது. இந்த
நாள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் அமைந்தது.
திருவாசி
(மாற்றுரைவரதீசுவரர் கோயில்)
மாற்றுரைவரதீசுவரர்
கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவாசி என்ற ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலமாகவும், காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 62 - வது சிவதலமாகவும் உள்ளது.
இச்சிவாலயம்
அமைந்த திருவாசி ஊரானது புராண காலத்தில் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற பெயரில்
அழைக்கப்பட்டு வந்துள்ளது.
இச்சிவாலயத்தின்
மூலவரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் 7 விளக்குகளில்
இலுப்பை நெய்யூற்றித் தீபம் ஏற்றினால்
பொருளாதார சுபிட்சம் அடைவர். அத்துடன் அபிஷேக தீர்த்தத்தை
பருகினால் மூன்று நாளில் இந்த பாலதோஷம் குழந்தைகளிடமிருந்து விலகும். திருமணமாகாத
இளைஞர்களும், இளம் பெண்களும் தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமை பொய்கையில் நீராடி அம்பிகைக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்தால் திருமணம் விரைவில் நிச்சயமாகும். வலிப்பு, வயிற்றுவலி, வாதம் முதலிய நோய்கள் பாதித்தவர்கள் தொடர்ந்து
ஒரு மண்டலத்திற்கு நடராசப் பெருமானுக்கு அர்ச்சனை
செய்துவந்தால் நோயின் கடுமை குறைந்து பூரண குணமாகும்.
சுந்தரர்
தன்னுடன் சிவதல யாத்திரைக்கு வருகின்ற சிவனடியார்களுக்கு உணவு படைப்பதை வழக்கமாக
கொண்டிருந்தார். அவ்வாறு உணவு படைக்க சிவபெருமானிடம் பொன்னையும் பொருளையும்
பெற்றுக் கொள்வார். ஆனால் இத்தலத்தில் சுந்தரர் பொற் பதிகம் பாடியும் சிவபெருமான்
பொன்னைத் தரவில்லை. சுந்தரர் கோபம் கொண்டு பாடல்களைப் பாடினார். அதன்பின்பு சிவபெருமான்
பொன்னை தந்தார். பிறகு அந்தப் பொன் சுத்தமானதா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது.
அப்போது அங்கு வந்த இருவர் அந்தப் பொன்னை சோதித்து அதன் தரத்தினை உரைத்தனர்.
சிவபெருமான் தன்னை இகழ்ந்து பாடினாலும் பொன் தருவார் என்பதை சுந்தரர் அறிந்தார்.
பொன்னை உரைத்து தரத்தை உரைத்த இருவரும் மறைந்தனர். அவர்கள் சிவபெருமானும்
திருமாலும் என சுந்தரர் அறிந்தார்.
Comments
Post a Comment