திருவானைக்கோயில் சென்ற அனுபவங்களாக…
ஞாயிற்றுக் கிழமை (17.08.2025) இன்று ஆவணி மாதம்
1- ந் தேதி என்பதால் மாதப் பிறப்பு என்பதால் திருவானைக்கோவில் கோவிலுக்குச் சென்றோம்.
நானும், என்னுடன் பணியாற்றும் முனைவர் வா.ரா.விஜயலட்சுமியும் காலை 8.30 மணிக்குக் கிளம்பினோம்.
திருவானைக்கோவில் அருகில் உள்ள பார்த்தசாரதி ஓட்டலில் காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டுச்
சென்றோம்.
இன்று ஆவணி மாதப் பிறப்பு என்பதால் கோவிலில் ஓரளவு கூட்டம் இருந்தது. காலையில் கோவிலுக்குச் சென்றது
மிகவும் மனமகிழ்ச்சியாக இருந்தது. அங்கு பரதம் பயிலும் மாணவிகள் வந்து அங்கு நடனம்
ஆடினார்கள். இன்று நாங்கள் முதன் முதலாக மாணவிகள் பரதம் நாட்டியம் ஆடியதைப் பார்த்தோம்.
சாமி தரிசனம் தரிசித்து விட்டு காலை 10 மணிக்குக் கோவிலிருந்து கிளம்பிவிட்டோம். இந்த
நாள் நன்றாக அமைந்தது.

திருவானைக்கோவில்
திருச்சி
மாநகரில் காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவிலாகும்.
இதனைத் திருவானைக்காவல் என்றும் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். இக்கோவிலில் அப்பர்,
திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள், காடவர்கோன் ஆகியோரால்
பாடல் பெற்ற தலம் ஆகும். இச்சிவாலயம் சிவனின் பஞ்ச பூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது.
சோழநாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 60 வது சிவன் தலமாகும்.
நிறைவாக,
இன்று
திருவானைக்கோவில் சென்றது மிகவும் மனநிறைவாக அமைந்தது.
Comments
Post a Comment