Skip to main content

தமிழ் கற்பித்தலில் தகவல் தொடர்பு சாதனங்கள்


தமிழ் கற்பித்தலில் தகவல் தொடர்பு சாதனங்கள்

 தகவல் தொடர்பு 

அறிவியல் சார்ந்த வாழ்க்கைக்கு மட்டுமல்லாது, எளிமையான வாழ்க்கைக்கும்  தகவல் தொடர்பு என்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். இதில் தகவல்தொடர்பு என்ற இரண்டு சொற்கள் இணைந்துள்ளன.

·         தகவல் என்றால் பிறர் அறியும் வகையில் வெளிப்படுத்தப்படும் செய்தி என்றும்.

· தொடர்பு என்றால் இரு இடங்களை இணைப்பது; இணைப்புஎன்று பொருளாகும்.

·         அதாவது இரண்டு இடங்களை இணைத்து, அங்குள்ளவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்திகளை வெளிப்படுத்தும் வழிமுறை மற்றும் அதற்கான கருவிகளுக்குத் தகவல் தொடர்பு என்ற தொழில்நுட்பச் சொல்லைப் பயன்படுத்துகின்றோம்.

தகவல் தொடர்பு - கற்றல் - கற்பித்தல் முறைகள்

· ஆரம்பகால கட்டங்களில் கற்றல்-கற்பித்தல் என்பது ஆசிரியர்-மாணவர்கள் இடையே  வாய்வழித் தகவல் தொடர்பை சார்ந்தே அமைந்திருந்தது.

· பிற்காலத்தில் அச்சு இயந்திர உருவாக்கத்தின் விளைவாக தகவல்கள் பாடபுத்தகங்களாக வலுப்பெற்றன. அதன் தொடர்ச்சியாக செய்தித்தாள்களும் கற்றல்-கற்பித்தல் தகவல் தொடர்பு சாதனமாக உருப்பெற்றன.

·  இன்றைய அறிவியல் யுகத்தில் கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டில் படங்கள், தொலைக்காட்சி, பதிவு செய்யப்பட்ட வார்த்தைகள், திட்டமிடப்பட்ட பாடங்கள், வானொலி போன்ற மக்கள் தொடர்பு சாதனங்கள் மிகவும் பயன்பட்டு வருகின்றன.

            ”மார்சல் மெக்ரூன் என்பவர், "தகவல்கள் அல்லது அறிவின் பகுதியை தகவல் தொடர்பு சாதனங்கள் நமக்குத் தருகின்றன. தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் பெறப்படும் தகவல்கள் மனிதனின் மனதில் ஆழமான தாக்கத்தை உருவாக்குகிறது. எனவே, இச்சாதனங்களை கற்றல்-கற்பித்தலுக்கு பயன்படுத்துவதால் கற்றலில் மிகப்பெரும் பலனை நாம் அடைய முடியும்” என்று கூறுகிறார்.

     1986 தேசியக் கல்விக் கொள்கை மற்றும் 1992-ல் உருவாக்கப்பட்ட அக்கொள்கையின் திட்டம், தகவல் தொடர்பு சாதனங்கள் மாணாக்கரின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

·          தகவல் தொடர்பானது கலைத் தடையையும் (Academic Barrier), தொலைதூர நிர்வாகச் (Administrative barrier in distance mode) சிக்கலையும் தோற்றுவிக்கின்றது.

·                 ஒரு செய்தியை ஒலிபரப்புவதற்கு முன், ஒலிபரப்பும் போது மற்றும் ஒலிபரப்பிற்கு பின் என அனைத்து நிலைகளிலும் ஓர் ஆசிரியர் ஆற்ற வேண்டிய பங்கு பணிகள் மிகமிக அதிக அளவில் உள்ளன.

தகவல் தொடர்பு சாதனங்கள்

  1. இணையம்

·         இணையம் என்பது மிகப்பெரிய நூலகம்.

·         நூலகத்தில் கிடைப்பதுபோல எழுத்துக்கள் மற்றும் படங்களால் ஆன செய்திகளை மட்டுமல்லாது, பல ஊடகம் என்ற நிலையில் தேவையான எதனையும் பெற முடிகிறது.

·  ஒலி, ஒளி, சலனப்படம், செய்திகள், ஒளிப் படங்கள் என்று அனைத்தும் இணையத்தில் வலைதளப் பக்கங்கள் வழியாகக் கிடைக்கின்றன.

·         விக்கிப்பீடியா, முகப்புத்தகம், வலைப்பதிவு போன்றவை ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் பல்வேறு தகவல்களை ஒருசில நிமிடங்களில் உலகெங்கும் பரப்புவதில் இவை தனித்துவம் பெற்றும் திகழுகின்றன.

  2.  மின்னஞ்சல்

·         தொலைத் தொடர்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

·       ஒரு கடிதத்தை பல நாடுகளில் உள்ள பல்வேறு நபர்களுக்கு அனுப்பவும், பல்வேறு இடங்களிலிருந்து பெறப்பட்ட பல கடிதங்களை ஒரு நபருக்கு அனுப்பவும் வசதி உள்ளது.

·     இதன் வேகத்திற்கு முன்னால், முந்தைய கடித அஞ்சல் முறை நத்தை அஞ்சல் என்று குறிப்பிடப்படுகிறது.

·         தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் மட்டுமல்லாது, உலகளவில் ஏராளமான மொழிகளில் மின்னஞ்சல் மூலமாக கடிதங்களை அனுப்ப முடிகிறது.

3. மின்னூல்கள்

·         மின்னணு புத்தகங்கள் அல்லதுமின்னூல்கள் இன்றைய தொழில்நுட்ப உலகில் மிகவும் புகழ்பெற்று மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன.

·  இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து கணினியில் சேமித்து வைத்துத் தேவைப்படும்போது படிக்கும் நிலையில் மின்னூல்கள் உருவாக்கப்படுகின்றன.

· நூல்களை வரலாற்றுப் பதிவுகளாக ஆவணப்படுத்தும் வகையிலும் இணையவழியில் மின்னூல்களை (eBooks) உருவாக்கும் செயல்பாடு கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகின்றது.

·         மின்னூல்கள் பல்வேறு அமைப்பில் வெளியிடப்படுகின்றன.

கையாவண நூல்     -  Pdf Book

மீயுரை நூல்             -  HTML Book

புரட்டு நூல்              -  Flip Book

மென்னூல்               -  Equp Book

கிண்ணூல்               -   Mobi Book

4. இணையத்தில் மின்னிதழ்கள்

     இணையத்தின் வழி இதழ்கள் வெளிவருவதை இணைய இதழ்கள் அல்லது மின்னதழ்கள் (e – journals/ezines) என்று குறிப்பிடுவர். தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புக்களைத் தாங்கி அச்சில் வெளிவராமல் இணையத்தில் மட்டும் வெளிவருகின்ற மின்னிதழ்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளது.

·     திண்ணை, வார்ப்பு, தட்ஸ்தமிழ், மரத்தடி, தமிழம் நெட், தமிழ்க்கூடல், நிலாச்சாரல், தமிழோவியம், தமிழ்க்காவல், தமிழ்த்திணை, வானவில், ஆறாம்திணை, அம்பலம், அரும்பு போன்ற மின்னிதழ்கள் இலக்கியச் செய்திகளை வெளியிடுகின்ற இணைய இதழ்களில்  குறிப்பிடத்தக்கவையாகும்.

அச்சு இதழ்கள் 

இணையத்திலும் தம் பக்கங்களை வெளியட்டுவருகின்றன. அச்சில் வந்து கொண்டிருக்கின்ற நாளிதழ்கள், மாலை இதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், காலாண்டிதழ்கள் என அனைத்து இதழ்களும் இணைய இதழ்களாக வெளிவருகின்றன.

5. வலைப்பூவலைப்பதிவு

       டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் கூற்றின்படி ஒரு சமுதாயம் இன்றைய பணிகளை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும். இன்றைய பணியை நேற்றைய கருவிகொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலியும். இது தவிர்க்க முடியாததுஎன்று கூறுகிறார். அந்த அடிப்படையில் வலைப்பூக்கள் என்ற ஒரு தனி இலக்கிய வகையாகத் தோன்றியுள்ளது.

வலைப்பூ என்பதை ஆங்கிலத்தில் பிளாக் (Blog) என்கிறார்கள். இந்த பிளாக்கை 17 டிசம்பர் 1997 –ல் ஜார்ன் பெர்கர்  (John Berger) என்பவர்தான் வலைப்பூவிற்கு ஆங்கிலத்திற்கு  Webblog  என்ற பெயரை உருவாக்கிப் பயன்படுத்தினார்.

ஒருவரிடமிருந்து பிறருக்குத் தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்புக்கான எழுத்துக்கள், ஒலி, ஒளி வடிவக் கோப்புகள், ஓவியம், படங்கள் என்று அனைத்தையும் இணையம் வழியே தனிப்பட்ட ஒருவர் உலகில் இருக்கும் பிறருக்குத் தெரிவிக்க உதவும்  ஒரு சேவையே வலைப்பூ என்பதாகும்.

6. செயற்கை நுண்ணறிவு (AI)

செயற்கை நுண்ணறிவு இன்று கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

·         மருத்துவத் துறை: * நோய்களைக் கண்டறிதல்: AI அல்காரிதம்கள் CT ஸ்கேன், MRI, மற்றும் எக்ஸ்ரே படங்களை பகுப்பாய்வு செய்து, மனிதர்களை விட விரைவாகவும் துல்லியமாகவும் நோய்களை (உதாரணமாக, புற்றுநோய்) கண்டறிய உதவுகின்றன.

·   *மருந்து உருவாக்கம்: புதிய மருந்துகளின் மூலக்கூறுகளை வடிவமைக்கவும், அவற்றை சோதிக்கவும் AI பயன்படுத்தப்படுகிறது.

·        ரோபோடிக் அறுவை சிகிச்சை: துல்லியமான ரோபோடிக் கைகள் மூலம் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன, இது அறுவை சிகிச்சையின் அபாயங்களைக் குறைக்கிறது. *

·         போக்குவரத்து: * ஓட்டுநர் இல்லாத வாகனங்கள்: டெஸ்லா, கூகிள் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் தானியங்கி கார்கள், AI மற்றும் சென்சார்களின் உதவியுடன் தாங்களாகவே ஓட்டுகின்றன. *

·  போக்குவரத்து மேலாண்மை: AI நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்கவும், அதைத் தவிர்க்கவும் சிறந்த வழிகளைக் கண்டறிய உதவுகிறது.

·         கற்பித்தல், அறிவியல் ஆராய்ச்சி, கலை உருவாக்கம் போன்ற பல துறைகளில் பெரும் புரட்சி ஏற்படும்.

7. லிங்டின் (Linkdin)

          லிங்டின் என்பது ஒரு தொழில்முறை சமூக வலைப்பின்னல் ஆகும். இந்த வலைதளம் உங்கள் தொழில் தொடர்புகளை உருவாக்கவும், பராமரிக்கவும், வேலை வாய்ப்புக்களைக் கண்டறியவும் பயன்படுகிறது.

            வேலை தேடுபவர்கள், மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் தங்கள் துறைகளில் உள்ள மற்றவர்களுடன் இணையவும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இந்த தளம் உதவுகிறது.

        You dube – கார்ட்டூன் சேனலுக்கு புராணக் கதைகள்இராமாயணம், மகாபாரதம்

தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்கள்

·         அனைவருக்கும் ஆரம்பக்கல்வி என்ற இலக்கை அடைய முடிகிறது.

·         வயது வந்தோர் கல்வியை முழுமையாகப் பெற முடிகிறது.

·         முறைசாரா கல்வியைப் பெற முடிகிறது.

·         பள்ளிச் செயல்பாடுகள் மேம்பாடு அடைகின்றன.

·         ஓய்வு நேரத்தை ஆர்வமாகவும், பயனுள்ளதாகவும் மாற்ற முடிகிறது. மாணவரும் பங்கேற்றுக் கற்க முடிகிறது.

·         பள்ளியை விட்டு விலகிச் சென்றவர்களுக்கு (இடை நின்றவர்களுக்கு) மாற்று முறையில் கற்பிக்க முடிகிறது.

·         தர்க்க ரீதியான சிந்தனையை உருவாக்க இயலுகிறது.

·         தொழில்சார் திறமைகளை மேம்பாடு அடையச் செய்ய முடிகிறது.

·         ஆசிரியர்களுக்குப் பணியிடைப்பயிற்சி கொடுக்க முடிகிறது.

·         இன்றைய நாளில் நிகழும் செய்திகளை உடனுக்குடன் பெற முடிகிறது. தொலைதூரக் கல்வியைப் பெற முடிகிறது.

·         மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம் அதிகமாக உள்ள இடங்களிலும் சிறப்பாகக் கற்பிக்க முடிகிறது.

·         கவனச் சிதைவு தவிர்க்கப்படுகிறது.

·         உடனடி கற்றல் விளைவு ஏற்படுகிறது.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் இன்றைய  நிலை

    ஒரு தலைமுறை என்பது 30 ஆண்டுகளைக் குறிக்கும். ஆனால் தற்போதைய மின்னணுத் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு தலைமுறை என்பது பத்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தை குறிப்பது போல் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.

  கம்பிகள் மூலமாக தரைவழித் தொடர்பு, காற்றுவழித் தொடர்பு என்று வளர்ந்த தொழில்நுட்பம் இன்று பூமிக்கு வெளியே, வான்வெளியில் தனித்து நிறுத்தப்பட்டுள்ள செயற்கைக் கோள்கள் வழியே செயல்படுத்தப்படுகிறது. இதனால் நாடுவிட்டு நாடு என்பது மறைந்து கண்டம் விட்டு கண்டம் பரிமாற்றம் செய்து கொள்ளுவது மிகவும் எளிமையாகிவிட்டது.

  மனிதனுக்கு போதும் என்பது அந்த நேரத்து உணவு ஒன்றில் மட்டுமே சொல்லப்படுகிறது. வேறு எதிலும் போதும் என்ற சொல் பயன்படுத்தப்படுவதே இல்லை.  

·     தொலைபேசி போதும் என்றிருந்தால் இன்று செல்பேசி கிடைத்திருக்காது! வானொலி போதும் என்றிருந்தால் இன்று தொலைக்காட்சி கிடைத்திருக்காது! இப்படி பல கண்டுபிடிப்புகள், தங்களுக்கு அடுத்து உருவாக்கப்படும் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாகவே அமைந்துவருவது வியப்பிற்குரிய ஒன்றுதான்!

·         கத்தி என்ற கருவி, அதனை பயன்படுத்துகின்றவரைப் பொறுத்து உதவியாகவோ தொல்லையாகவோ அமைகிறது அல்லவா? அதுவேதான் இன்றைய கண்டுபிடிப்புகள் அனைத்தும்.

 

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...