Skip to main content

தமிழ் கற்பித்தலில் அவசியமும் தகவல் தொடர்பியலின் பன்முகபார்வையும்

 

தமிழ் கற்பித்தலில் அவசியமும் தகவல் தொடர்பியலின் பன்முகபார்வையும்

          பண்டைக் காலத்தில் மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்றும் தேவைப்பட்டன. விஞ்ஞான உலகத்திலோ இம்மூன்றுடன் தொடர்பியல் சாதனமும் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்பியல், உலகின் ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்தி, உலக நாடுகளை எல்லாம் ஒரு நாடு என்ற அளவில் சுருக்கி நெருங்க வைத்துள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் பரிமாறிக் கொள்ள தொடர்பியல் கருவிகள் பயன்படுகிறது.

            காசிநகர்ப் புலவர் பேசுமுறைதான்

             காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவி செய்வோம்

என்றார் பாரதியார். ஆனால், தீர்க்கதரிசியான அவர் நினைத்ததைவிட இன்று தொடர்பியல் பன்மடங்கு வளர்ச்சிப் பெற்றுள்ளது.

தகவல் தொடர்பு

            ஒருவர் மற்றவரோடு பல்வேறு மூலங்கள் அல்லது ஊடகங்கள் வழியாகத் தகவல்களைப் பறிமாறிக் கொள்வதைத் தகவல் தொடர்பு (Communication) என்கின்றோம். தகவல் தொடர்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரியதன்று. விலங்குகளும், பறவைகளும் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. தேனீக்கள் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதைத் தேனீ மொழி(Bee- Language) என்று அழைக்கின்றனர். யானைகளின் மொழிகளைக் கற்றுத் தேர்ந்த யானைப் பாகர்கள் அவற்றை வழிநடத்துகின்றனர். சங்க இலக்கியமாகிய முல்லைப்பாட்டில், போர்க்களத்தில் புண்பட்ட யானைகளுக்கு ஆறுதல் மொழிகள் சொல்லி, அவ் யானைகளுக்கு உணவுகளைப் பாகர்கள் தந்தனர் என்பதை,

            கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றி

             கல்லா இளைஞர் கவளம் கைப்ப” (முல்லைப்பாட்டு, வரி 35-36)

முல்லைப்பாட்டு வரிகளால் அறியமுடிகின்றது.

தகவல் தொடர்பின் வகைகள்

            தகவல் தொடர்பினை ,

1.   ஒருவர் தமக்குத்தாமே கொள்ளும் தொடர்பு

2.   இருவர் தொடர்பு

3.   குழுத்தொடர்பு

4.   வெகுதிரள் தொடர்பு

என நான்கு வகைகளாகப் பகுக்கலாம்.

1.   ஒருவர் தமக்குத்தாமே கொள்ளும் தொடர்பு (Intra personal Communication)

ஒருவர் தமக்குத் தாமே கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதை ஒருவர் தமக்குத் தாமே கொள்ளும் தொடர்பு’ (அல்லது) உள்மன தொடர்பு என்கின்றனர். பகவான் இராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், ரமணமகரிஷி போன்ற அருளாளர்கள் தங்களின் உள்மனத் தொடர்பால் எண்ணற்ற கருத்துக்களை இவ்வுலக மக்களுக்காக வழங்கியுள்ள நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். 

2.   இருவர் தொடர்பு (Interpersonal Communication)

இரண்டு நபர்கள் முகமுகமாய்ச் (Face to Face communication) சந்தித்துப் பேசிக் கொள்வதை இருவர் தொடர்பு என்கின்றனர். ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கின்ற நண்பர்கள், உயர் அலுவலர்கள் போன்றவர்களோடு நாம் பேசுகின்ற கருத்துக்களையும், தகவல்களையும் இவற்றிற்குச் சான்றாகக் குறிப்பிடலாம்.

3.   குழுத் தொடர்பு (Group Communication)

மக்கள் குழுக்களாக இணைந்து உறவாடி, கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்வதைக் குழுத்தொடர்பு என்கின்றனர். ஒரு வகுப்பு மாணவர்கள் அல்லது குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் தங்களுக்குள் கருத்துப் பரிமாறிக் கொள்வதை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம்.

4.    வெகுதிரள் தொடர்பு (Mass Communication)

மிகப்பெரிய அளவில் மக்களுக்குள் நடைபெறும் தொடர்பினை வெகுதிரள் தொடர்பு என்கின்றனர். இவ்வகைத் தொடர்புமுறையில் அச்சுவழி ஊடகங்கள் (இதழ்கள், நூல்கள்) வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள், கணினி, இணையதளங்கள், வலைப்பூக்கள், மின்னஞ்சல் முதலான தகவல் தொடர்பு ஊடகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

தகவல் தொடர்பியலின் ஊடகங்கள்

    ஊடகங்கள் என அழைக்கப்படும் மீடியாக்கள் (Media) அதாவது பத்திரிக்கைகள், புத்தகங்கள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள், கணினி, இணையதளங்கள், வலைப்பூக்கள், மின்னஞ்சல்கள் முதலான தகவல் தொழல் நுட்பங்கள் மக்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. மக்கள் எதிர்பார்க்கும் அறநெறி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் வெளிப்படுத்த வேண்டியது ஊடகங்களின் கடமையாகும். ஊடக வகைகளாக,

·         மரபுவழி ஊடகங்கள்

·         அச்சுவழி ஊடகங்கள்

·         மின்வழி ஊடகங்கள்

·         மின்னணுவழி ஊடகங்கள்

நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

·         மரபுவழி ஊடகங்கள்

      புராண நாடகங்கள், தெருக்கூத்து, பொம்மலாட்டம் முதலானவை மரபு வழி ஊடகங்களாகக் கருதப்படுகின்றன. மரபு என்பது கருத்துக்கள், அர்த்தங்கள், பொருள்கள், சாயல்கள் இவற்றைப் பற்றி மனத்திலும், சிந்தனையிலும் தீர்மானமான சில கருதுகோள்களை வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் சித்தரிப்பது. இதையே மீண்டும் மீண்டும் பல்வேறு நிலைகளில் வலியுறுத்தி, அதை மக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளுமாறு தூண்டுவது அல்லது செய்வது மரபுவழி ஊடகங்களின் செயலாகும்.

        எடுத்துக்காட்டாக, செய்தித்தாள் படிப்பது, புகை பிடிப்பது, அதிகமாக வீட்டு வேலைகளில் பங்கு கொள்ளாமல் இருப்பது, கிரிக்கெட் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ஆண்கள் என்பது போலச் சித்திரிப்பது, குழந்தைகள் மீது பரிவு காட்டுவது, வீட்டு வேலைகளைப் பொறுப்பாக செய்வது, பிரச்சனைகள் வரும் போது அழுவது பெண்கள் என்பது போல சித்திரிப்பது, ஏழைகள், வேலைக்காரர்கள் போன்றவர்கள் எதையும் சிந்திக்கத் தெரியாதவர்களாகவும், அதிகாரம் படைத்தவர்களைக் கண்டு அடங்கிச் செல்பவர்களாகவும், எதிர்கால வாழ்வு பற்றி சிந்திக்காமல் செலவு செய்பவர்களாகவும் சித்திரிப்பது. இவ்வாறு பழங்காலம் முதல் நம் முன்னோர்கள் பழக்கப்பட்ட வழக்கங்களை மட்டும் சித்தரிப்பது மரபுவழி ஊடகங்களின் தலைசிறந்த பணியாக உள்ளது.

·         அச்சுவழி ஊடகங்கள்

நாளிதழ்களும், பருவ இதழ்களும் அச்சுவழி ஊடகங்களாகக் கருதப்படுகின்றன. தற்கால மனிதவாழ்வில் அச்சுவழி ஊடகங்களின் பங்கு இன்றியமையாததாக விளங்குகின்றது. ஒவ்வொருவரிடமும் நல்ல எண்ணங்களும், தீய எண்ணங்களும் இணைந்தே குடிகொண்டுள்ளன. தூய்மையான நல்ல கருத்தினை அல்லது செய்திகளை விட தீமையான கருத்துக்களும் அல்லது செய்திகளும் மக்களை எளிமையாக கவருகின்றன. வணிகநோக்குடைய நாளிதழ்களும், வார இதழ்களும் மக்களிடையே தீமையான கருத்துக்களை அல்லது செய்திகளைப் பரப்பி அவர்களது தீய எண்ணங்களையும் தீய உணர்வுகளையும் தூண்டிவிட்டு ஆதாயம் தேடுகின்றன. அறிவை வளர்க்கும் நாளிதழ்களும், வார இதழ்களும் மக்களின் போதுமான ஆதரவின்றி அற்ப ஆயுளில் மடிந்து போகின்றன. மக்களிடையே மறைமகமாக பாலுண்ர்வைத் தூண்டும் வார இதழ்களும், மாத இதழ்களும் இலட்சக்கணக்கில் விற்பனையாகின்றன.

·         மின்வழி ஊடகங்கள்

வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் முதலானவை மின்வழி ஊடகங்களாகக் கருதப்படுகின்றன.

வானொலி மின்வழி ஊடகங்களில் வானொலிதான் பெருதிரளான மக்களைச் சென்றடைந்துள்ளது. வானொலி கேட்பவர்களின் கற்பனையைத் தூண்டி, அவர்களின் சிந்தனையை வலுப்பெறச் செய்கின்றது. வீடுகள் முதல் தெருவோரக் கடைகள் வரை, வானொலி கேட்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். உழைப்போடு மட்டும் உறவாடிக் கொண்டிருக்கும் தொழிலாளர் வர்க்கம் பெரும்பாலும் வானொலியைத் தான் விரும்புகிறார்கள்.

தொலைக்காட்சிமக்களிடத்தில் இன்று அதிக செல்வாக்கையும், வரவேற்பையும் பெற்றுள்ள ஊடகம் தொலைக்காட்சி. தொலைக்காட்சி திரைப்பட நவீன உத்திகளைத் தன் நிகழ்ச்சிகளில், நெடுந்தொடர்களில் பெருமளவு கையாளுகின்றது. செயற்கையோள் வழியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பட்டு, நமது வீட்டிற்குள்ளே உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் உடனுக்குடன் கொண்டுவந்து தருகின்றது. செய்தி, நகைச்சுவை, இசை, விளையாட்டு, திரைப்படம் என தொலைக்காட்சி நிறுவனமே பல அலைவரிசைகளை ஒளிப்பரப்பி வருகின்றது.

திரைப்படம்திரைப்படம் சக்திவாய்ந்த தொடர்பு ஊடகம் ஆகும். வெகுதிரளான மக்களை இரண்டரை அல்லது மூன்று மணிநேரம் கவனம் சிதறாமல் பார்க்க வைக்கக்கூடிய சகதி திரைப்படத்திற்கு இருக்கின்றது. திரைப்படங்களின் மூலமாக உலகிற்குத் தங்களை வெளிப்படுத்திக் கொண்டவர்கள் பலர் அரசியல் தலைவர்களாகவும், தலைவிகளாகவும் பொறுப்பேற்று பணியாற்றி இருக்கின்றனர். மக்கள் இயக்கங்கள் மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தகவலை, வெகுசீக்கிரத்தில் நாடுமுழுவதும் மக்கள் மனதில் பதியச் செய்வதில் திரைப்படத்திற்கு இணையாக வேறெங்கும் இல்லை.

·         மின்னணுவழி ஊடகங்கள்

கணினி, இணையதளங்கள், வலைப்பூக்கள், மின்னஞ்சல்கள் முதலானவை மின்னணுவழி ஊடகங்களாகக் கருதப்படுகின்றன.

கணினி கணிப்பொறி வழங்கப்படும் தரவுகளை ஏற்று, கொடுக்கப்பட்ட ஆணைகளின் படி தேவையான தகவல்களை மாற்றித் தரும் திறனுடையது. கணினி மனிதனின் செயல்பாட்டுடன் ஒப்பீடு செய்யும் அளவிற்கு ஒத்த தன்மைகளை உடையதாக உள்ளது. இதன் செயல்வேகம் நாளுக்குநாள் வளர்ந்துவரும் நல்ல நட்பினைப் போல் திகழ்கின்றது.

இணையதளங்கள்இண்டர்நெட்வொர்க் (Intermet work)என்பது சுருக்கமாக இண்டர்நெட் என வழங்கப்படுகிறது. இதனைத் தமிழில் இணையதளம் என்றும் வலைப்பின்னல் என்றும் வழங்கின்றனர். இணையதளங்கள் மூலம் நொடிப்பொழுதில் உலகின் எந்த மூலையில் உள்ளவரோடும் தொடர்புக் கொண்டு செய்திகளைப் பரிமாறிக் கொள்ள முடியும். இது கணினித் தொழில்நுட்பமும், தொலைபேசி அமைப்பில் உண்டான முன்னேற்றமும் இணைந்து உருவாகியுள்ள ஓர் ஊடகமாகும்.

வலைப்பூக்கள்அடிக்கடி மாறுகின்ற உள்ளடக்கம் கொண்ட இணையதளங்களைப் பிளாக்ஸ் (BLOG) என்று ஆங்கிலத்திலும், வலைப்பூக்கள் என்று தமிழிலும் வழங்குகின்றோம். தமிழில் வலைப்பூ சேவையை கட்டணமின்றி www.blogger.com . www.wordpress.com போன்றவை வழங்குகின்றன. ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானே மாறிக்கொள்ளும். NHM writer என்ற இதற்கான கட்டமில்லாத மென்பொருளை நிறுவிக்கொள்ள வேண்டும்.

தனக்குத் தெரிந்த விவரங்களைச் சேமித்து வைத்துக் கொள்ள, பாடங்கள் கற்றுத்தர, அரசியல் விவாதங்களைப் பதிவு செய்ய, தன் குழந்தைகளின் சுட்டித்தனத்தை எல்லோரும் ரசிக்கும்படிச் செய்ய என இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான வலைப்பூவினை வைத்திருக்கின்றனர்.

மின்னஞ்சல்கள் மின்னணுதொழில்நுட்ப முறையில் இணையதளம் மூலம் அனுப்பப்படும் தபாலுக்கு மின்னஞ்சல் என்று பெயர். இணையதளத்தில் மிகப்பெரிய பயன்பாடும் செயல்பாடும் மின்னஞ்சலாகும். தொலைப்பேசி க் கட்டணத்தைக் காட்டிலும் மின்னஞ்சல் கட்டணம் குறைவானது என்பதால் மின்னஞ்சல் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.

நிறைவாக,

    தகவல் தொடர்பியல் நம் சமுதாயத்திற்குப் பலவிதமான கற்பித்தல் பணிகளைச் செய்கின்றன. பொதுவாக ஊடகங்கள் சமுதாயம், சமயம், அரசியல், பொருளாதாரம், அறிவியல், கலை, பண்பாடு, தேசியம், உலகம் ஆகியவை தொடர்பாக நடைபெறும் நடவடிக்கைகளையும் சேகரித்து, சேமித்து, தகுந்தமுறையில் வடிவமைத்து பரவச் செய்கின்றன. மக்கள் சரியான முடிவெடுக்கவும், மக்களின் வாழ்க்கை மாற்றங்களைச் சிறப்பாக மேற்கொள்வதற்குரிய சிந்தனைகளைத் தூண்டவும் உதவுகின்றன.

·   ஊடகங்கள் மக்களுக்கு உற்சாகமூட்டி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மகிழ்வூட்டுகின்றன.

·          சமுதாய இறுக்கங்களைக் குறைப்பதற்காக தொடர்ந்து மகிழ்வூட்டும் பணியைத் தொடர்ந்து செய்துவருகின்றன.

·         ஊடகங்கள் நம்மைச்சுற்றி நடப்பனவற்றைத் தெரிவிப்பது மட்டுமல்லாமல் அந்நிகழ்வுகள் ஏன் நடந்தன? எதற்காக நடந்தன? எதற்காக நடந்தன? என்ற காரண காரியங்களையும் எடுத்துரைக்கின்றன.

----

 

துணைநூற் பட்டியல்

1.    இராஜா. பேரா.டாக்டர், அருணாசலம். பேரா.டாக்டர்மக்கள் தகவல் தொடர்பியல், ஆரா பதிப்பகம், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம். முதற் பதிப்பு – 2016, முதற்பதிப்பு.

2.    ஞானம் . முனைவர்ஊடகவியல், சாரதா பதிப்பகம், சென்னை -600 014. முதற்பதிப்பு – 2021.

 

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...