‘சங்க
இலக்கியங்களில் அரசியலும் அறவாழ்க்கையும்’
நூல் வெளியீட்டு
விழா
திருவையாறு ஔவை அறக்கட்டளை நடத்திய
பதின்மப் பெருவிழா நிகழ்ச்சியில் ஒன்றாக நூல் வெளியீட்டு விழாவும் நடந்தது.
அந்த விழாவில் என்னுடைய நூலான சங்க இலக்கியங்களில் அரசியலும் அறவாழ்க்கையும்
வெளியானது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை என்னுடைய வெளியிட்ட பத்து நூல்களும் இதுபோல் வெளியிட்டதில்லை. பதினொன்றாவது
நூலான தமிழ் இலக்கிய வரலாறு - சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் வெளியானது.
சங்க இலக்கியங்களில் அரசியலும் அறவாழ்க்கையும் என்ற நூல் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வு நூலாகும். முனைவர் பட்டத்தில் சங்க இலக்கியத்தில் வரலாற்றுக் கூறுகள் என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டேன். அந்தத் தலைப்பினை சிறிது மாற்றம் செய்து சங்க இலக்கியங்களில் அரசியலும் அறவாழ்க்கையும் என்னும் தலைப்பில் இந்த பதின்மப் பெருவிழாவில் வெளியிடப்பட்டது. மேலும் மனதிற்கு நெகிழ்வை ஏற்படுத்தும் நிகழ்வாக எனக்குச் சிறந்த நூலாசிரியர் விருதினை வழங்கிக் கௌரவப்படுத்தினார்கள். நூலினை வெளியிட்டு விருதினையும் வழங்கி சிறப்பு செய்த ஔவை அடிபொடி முனைவர் மு. கலைவேந்தன் ஐயா அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்விழாவை கலைவேந்தன் ஐயா அவர்கள் மிகச் சிறந்த முறையில் நடத்தினார்கள். இதுவரை நான் அவர்களை நேரில் பார்த்ததில்லை. அன்று தான் முதன் முதலில் பார்த்தேன். நிகழ்ச்சியை நேரம் தாமதிக்காமல் தேனீ போல் சுறுசுறுப்பாக, மிக நேர்த்தியாகவும் மிகவும் அழகாகவும் நடத்தினார்கள். அயல்நாட்டில் உள்ளவர்களும் இணையவழியில் பங்காற்றி சிறப்பு செய்தார்கள். ஔவை கோட்ட அறக்கட்டளையில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் ஐயா அவர்களின் தமிழ்ப்பற்று வெளிபட்டது. ஔவையில் கொன்றைவேந்தன் பாடல் வரிகள், ஔவைக்குக் கோவில், ஔவை பிராட்டியின் சிலை என்று அந்த கட்டிடத்தின் ஒவ்வொரு கோணத்திலும் தமிழின் பற்று வெளிபடுத்தி நிற்கிறது. அதைப் பார்ப்பதற்கு மனநிறைவாக இருந்தது.
Comments
Post a Comment