Skip to main content

திருவையாறு சென்ற பயண அனுபவங்களாக...

 

திருவையாறு சென்ற பயண அனுபவங்களாக...

 

திருவையாறு ஔவை அறக்கட்டளை நடத்திய பதின்மப் பெருவிழா நிகழ்ச்சியில் ஒன்றாக நூல் வெளியீட்டு விழாவும் நடந்தது. அந்த விழாவில் என்னுடைய நூலான சங்க இலக்கியங்களில் அரசியலும் அறவாழ்க்கையும் வெளியானது. அந்நிகழ்ச்சிக்குச் செல்லும் பொழுது திருவையாறு சுற்றியுள்ள கோவில்களுக்குச் செல்லலாம் என்று முடிவு செய்தோம். அந்த வகையில் நானும், என்னுடன் பணிபுரியும் முனைவர் வா.ரா.விஜயலட்சுமி மற்றும் முனைவர் சச்சின் சார்,  முசிறி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் இணைப்பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் இணைந்து நூல் வெளியீட்டு விழாவை நாங்கள் குட்டி சுற்றுலாவாக மாற்றிவிட்டோம். மிகவும் மகிழ்ச்சியாகவும், நல்ல அனுபவமாகவும் இருந்தது.

          திருச்சியிலிருந்து காலை 7 மணிக்கு சென்றோம். அன்பில், கோவிலடி, கண்டியூர், திருஆதனூர், திருக்காட்டுப்பள்ளி, கபிஸ்தலம், திங்களூர், சுவாமிமலை போன்ற இடங்களுக்குச் சென்று சாமியைத் தரிசனம் செய்தது மிகவும் மகிழச்சியாக இருந்தது. எல்லா கோவில்களிலும் கூட்டம் இல்லாமல் இருந்ததால் அமைதியாக தரிசனம் செய்து விட்டு வந்தோம்.

அன்பில்

காவிரி ஆறு பிரியும் இடத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ள 5 வைணவ தலங்கள் பஞ்சரங்க தலங்கள் என அழைக்கப்படுகின்றன. பஞ்சரங்க தலங்களில் ஒன்று அன்பில் சுந்தரராஜப் பெருமாள் கோயில். அன்பில் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 5 வதாக இடம்பிடித்துள்ளது. பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் இருப்பதைப் போல இங்கும் திருமால் தாரக விமானத்தின் கீழ் உள்ளார்.

கோவில் தனிச்சிறப்புக்கள்

மண்டுக முனிவரின் சாபம் தீர்ந்த தலம்

இரண்டு கோலங்களில் காட்சி தரும் ஆண்டாள்

திருமண தடை நீக்கும் ஆண்டாள்

                                            
  

                                             

கோவிலடி

  •  இக்கோவில் சோழமன்னன் கரிகால் சோழனால் கட்டப்பட்டது.
  •  திருப்பேர் நகர் என்பது இத்தலத்திலன் பழம் பெயராகும். பஞ்சாங்க தலங்களில் அப்பாலரங்கம் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. 
  • இப்பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுவதால் இவர் அப்பக்குடத்தான் என்று அழைக்கப்படுகிறார்.   

                

கண்டியூர்

 கண்டியூர் சாப விமோசன பெருமாள் கோயில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு அருகே அமைந்த கண்டியூர் கிராமத்தில் அமைந்த பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயிலின் மூலவரின் பெயர் ஹர சாப விமோசர் ஆகும். இக்கோயிலின் தாயார் கமலவல்லி நாச்சியார்.

திருஆதனூர்

கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தூரத்திலும், சுவாமிமலையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள திவ்ய தேசம் திருஆதனூர். பெருமாளின் திருநாமம் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன். தாயாரின் திருநாமம் பார்க்கவி. கருவறையில் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாபிக்கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளிக்கொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி மற்றும் ஏடுடன் அருள்பாலிக்கிறார்.

திருக்காட்டுப்பள்ளி

திருக்காட்டுப்பள்ளி தீயாடியப்பர் (அக்னீஸ்வரர்) கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் அக்கினீசுவரர். இவர் தீயாடியப்பர் என்றும் அறியப்படுகிறார். அம்பாள் சௌந்தரநாயகி என்றும் அழகமர்மங்கை என்றும் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஒன்பதாவது சிவத்தலமாகும்.

                            

                            

கபிஸ்தலம்

108 வைணவ திவ்ய தேசத் தலங்களுள், தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் கோயில், 9-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டும் திருமால் முதலை, யானை ஆகிய இரண்டு விலங்கினங்களுக்கு அருட்காட்சி அளித்துள்ளார்.


பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் (திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோயில், திருக்கண்ணபுரம் நீலமேகப் பெருமாள், கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில், திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள்) இத்தலமும் ஒன்று. கும்பகோணம் - திருவையாறு சாலையில் கும்பகோணத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள இத்தலம் திருமழிசையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.     திங்களூர் 

திங்களூர் கோயில் சந்திரன் ஸ்தலம் என்று பிரபலமாக அறியப்படுகிறது. கடக ராசியில் பிறந்தவர்கள் இங்கு வந்து மூலஸ்தானக் கடவுளான கைலாசநாதரையும் சந்திரன் என்ற சந்திரனையும் வணங்கினால், அவர்களின் வாழ்க்கையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் சமாளிப்பார்கள் என்று நம்பப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் பார்கடலை கடைந்தபோது, ​​அசுரர்களில் ஒருவர் தேவர் வடிவில் மாறுவேடமிட்டு விஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்றார். இது சந்திரனால் விஷ்ணுவுக்குத் தெரியவந்தது. அவர் கோபமாக அரக்கனை இரண்டு துண்டுகளாக வெட்டியபோது, ​​அவை ஒரு பாம்பின் தலை மற்றும் வால் பகுதிகளுடன் இணைந்து ராகு பகவான் மற்றும் கேது பகவான் என பரிணமித்தன. இருவரும் சந்திரனைப் பழிவாங்க விரும்பினர், ஆனால் சிவபெருமானின் கருணையால், சந்திரன் வளர்ந்து, அளவு குறைந்து, முழு நிலவு (பௌர்ணமி) மற்றும் அமாவாசை (அமாவாசை) போன்ற வரங்களைப் பெற்றார்.

சுவாமிமலை

முருகனின் அறுபடை வீடுகளில் இத்தலமும் ஒன்றாகும். தாளமும், சந்தமும் நிறைந்த மெய்ப்பொருள் துறைப் பாடல்கள் இயற்றப் பெற்ற தலமாகும். இத்தல முருகனைப் பற்றி அருணகிரிநாதர் மற்றும் நக்கீரர் பாடிய பாடல்கள் திருப்புகழில் 4 -ஆம் திருமுறையில் காணப்படுகின்றன. கட்டு மலையாக அமைந்துள்ள குன்றின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலையுடன் கூடிய இராஜகோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தின் தல மரம் நெல்லி மரமாகும். முருகன் சன்னதிக்குச் செல்ல தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் 60 படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் கொடி மரத்தின் அருகே கண்கொடுத்த விநாயகரான நேத்திர விநாயகர் உள்ளார். உள் சுற்றில் தல விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சரஸ்வதி, நாரதர், வீரபாகு, அகத்தியர், அருணகிரிநாதர் ஆகியோர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

நிறைவாக,

          வைணவ தலங்கள், திங்களூர் சந்திரன் கோயில், திருக்காட்டுப்பள்ளி சிவன் கோயில் என்று அனைத்து கோயில்களுக்கும் சென்று பின் திருச்சிக்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தோம். இன்றைய நாள் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக அமைந்தது.

 





Comments

  1. வாழ்த்துக்கள் மேம்🎉 ஒரே நாளில் இத்தனை கோயில்களாக? கோவிலடி அப்பக்குடத்தானையும் சேர்த்து தரிசித்திருக்கலாம்☺️

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் அந்தக் கோவிலுக்குச் சென்றோம். எழுதுவதற்கு மறந்துவிட்டேன் பா, நினைவுபடுத்தியதற்கு நன்றி. 🙏🏼

      Delete

Post a Comment

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...