Skip to main content

புத்தாண்டு வாழ்த்துகள்!

 அன்பில் தொடங்கி ஆனந்தத்தில் முடியட்டும்! புன்னகையில் தொடங்கி மகிழ்ச்சியில் முடியட்டும்! சிந்தனையில் தொடங்கி செயலில் முடியட்டும்! துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பிறக்கட்டும்!!! அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!!!

வால்பாறை சென்ற அனுபவங்களாக...

 

வால்பாறை சென்ற அனுபவங்களாக...

 

          நானும் எங்கள் சம்பந்தி குடும்பமும் மற்றும் எங்கள் அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் குடும்ப நண்பர்கள் என்று 17 பேர்  வேனில் வால்பாறைக்கு இரண்டு நாள் சுற்றுலா பயணம் சென்றோம். இந்த அனுபவம் மிகவும் புதிய அனுபவமாக இருந்தது. உறவினர்களுடன் செல்வதை விட நண்பர்களுடன் செல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மிகவும் நிதானமாகவும், அவசரம் இல்லாமலும் இந்த சுற்றுலா அனுபவம் இருந்தது.


வால்பாறை (வியாழன் – 13.11.2025)

          கோவை மாவட்டத்தில் பெருமைசேர்க்கும் முக்கிய இடங்களில் வால்பாறையும் சிறந்த இடமாகும். ஏழாவது சொர்க்கம் என்று மாவட்ட நிர்வாகத்தால் பெயர் சூட்டப்பட்ட வால்பாறையில் மரங்கள், இயற்கை வளங்கள், தேயிலை மற்றும் காபி தோட்டங்கள், அணைகள் என்று சுற்றுலா தலமாக உள்ளது.

          வால்பாறை என்ற இடம் இருப்பதை 1880 ஆம் ஆண்டில் காரல்மார்க்ஸ் என்ற ஆங்கிலேயரால் வெளி உலகுக்கு தெரிய வந்தது. 1920 – ஆண்டில் ஆதிவாசிகளின் உதவியுடன் புதர் காடுகளை அகற்றி நடைபாதைகள்  ரோடுகளாக மாற்றப்பட்டன. மலைப்பகுதிகளில் உள்ள மூலிகைகள், காடுகள், நீர்வீழ்ச்சிகள், பள்ளத்தாக்குகள், ஆலைமலை புலிகள் காப்பகங்கள் இந்த நகருக்குப் பெருமை சேர்க்கின்றன. இயற்கை எழில் மிகவும் அனைத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

குரங்கு அருவி (கவி அருவி)






கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த, ஆழியாறு, வால்பாறை, முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளது. ஆழியாறு பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில், குரங்கு அருவி உள்ளது. இந்நிலையில், குரங்கு அருவிக்கு, வனத்துறையினர், 'கவியருவி' என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.மேலும், குரங்குகளின் சிற்பங்கள் செய்து, அதில், ஐங்குறுநுாறு, அகநானுாறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் குரங்குகள் குறித்து பாடப்பட்டுள்ளதை கல்வெட்டாக வைத்துள்ளனர். அருவியின் அருகில் உடை மாற்றும் இடங்கள் இருக்கிறது.

ஆழியாறு அணை





ழியாறு அணை  தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி முதல் வால்பாறை சாலையில் அமைந்துள்ள ஒரு நீர்த்தேக்கமாகும். எப்பொழுதும் கடல் போலக் காட்சியளிக்கும் என்பதால் இதற்கு ஆழியார் என்று பெயரிடப்பட்டது. ஆழி என்பது கடலைக் குறிக்கும். கடல் போன்ற ஆறு என்பதாலேயே இதற்கு ஆழியாறு என்ற பெயர். இந்திய நீர் துறை தேக்கத்தின் பட்டியலில் இந்த அணையானது பெரிய அணைகளின் தொகுப்பின் கீழ் உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைகளான வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஆழியாறு அணை பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் மூலம் கட்டி முடிக்கப்பட்ட அணை. 1962 – ஆம் ஆண்டு தமிழக  முதல்வர் காமராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

நல்லமுடி பூஞ்சோலை (வெள்ளி – 14.11.2025)


                                          

வால்பாறையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் காட்சிமுனை, நல்லமுடி பூஞ்சோலை சுற்றியுள்ள பள்ளத்தாக்குகள் மற்றும் தேயிலை தோட்டங்களின் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது. புகைப்படம் எடுப்பதற்கும், இயற்கை நடை பயணத்துக்கும் ஏற்ற இடமாகும்.

கூழாங்கல் ஆறு




வால்பாறை கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து உற்சாகம் அடைந்தனர். வால்பாறையில் முக்கிய பொழுது போக்கு சுற்றுலா இடமாக தற்போது கூழாங்கல் ஆறு விளங்கி வருகிறது. வால்பாறை டவுனுக்கு அருகில் உள்ளதால் ஆற்றுக்கு செல்வதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பலர் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தண்ணீர் தற்போது குறைவாக உள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீரில் உற்சாக குளியல் போடுகின்றனர். முதியவர்கள் ஆற்று நீரில் கால்களை நனைத்து மகிழ்ந்து வருகின்றனர். 

நிறைவாக,

          இந்த இரண்டு நாள் பயணம் நல்லதொரு புரிதலை அளித்தது. எந்தவித சிந்தனையும் இல்லாமல், அலைபேசியில் யாரிடமும் அதிக நேரம் பேசாமல், நன்றாக மலைப்பகுதியில் உள்ள ஓட்டலில் மீன் குழம்புடன் உணவருந்தி, இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை தூங்கி மனதிற்கும், உடலிற்கும் நல்ல புத்துணர்வை ஊட்டியது. நாம் வருடத்திற்கு ஒரு முறை சென்று எந்தவித வேலைச் சுமையும் இல்லாமல் நண்பர்களுடன் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது ஒரு சுகமே.

 

 

 

         

 



Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...