திருவையாறு சென்ற அனுபவங்கள் ( நூல் வெளியீட்டு விழா ) திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் , ஔவை அறக்கட்டளை நடத்திய உலகத் தாய்மொழி நாள் – 2026 (21.02.2026) நாளை முன்னிட்டு நடத்திய நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் என்னுடைய நூல் ‘ சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள் ’ எனும் தலைப்பில் வெளியானது . அந்த நாளில் நடந்த நினைவைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் . திருச்சியிலிருந்து நானும் , முசிறி , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற இணைப்பேராசிரியர் முனைவர் பாக்கியரதி அவர்கள் , மற்றும் அவர்களின் மூத்தச் சகோதரி அவர்களும் திருவையாறு (21.02.2026) சனிக்கிழமை சென்றோம் . நூல் வெளியீட்டு விழா காலை 11.00 மணிக்கு என்பதால் நாங்கள் செல்லும் வழியில் உள்ள கோயில்களுக்குச் சென்று பார்த்து விட்டு சென்றோம் . திருமழப்பாடி தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் , கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருமழப்பாடி வைத்தி...
விடுகதை யில் காணலாகும் சமுதாயச் சிந்தனைகள் வாழ்க்கையின் உயிர்ப் பண்புகளாகிய உணர்வுப் பண்புகள் இலக்கியங்களின் கருவாக அமைகின்றபோது அவை படைப்போனின் உணர்ச்சிக்குத் தக்க உருவம் பெற்றுச் சாவாப் பேற்றினைப் பெறுவதுண்டு . அத்தகைய சாவாமையும் மூவாமையும் பெற்ற கருவூலமே விடுகதைகளாகும் . மானுடத்தின் சிந்தனைத் திறனையும் , பண்பாட்டுப் படிநிலைகளையும் அறிந்துகொள்ளும் வரலாற்றுப் பெட்டகமாகவும் , இலக்கியத்தின் கூறுகள் படிந்து விளங்குவதாகவும் உள்ளதால் விடுகதைகள் ‘ இலக்கியம் ’ எனும் பெருமை அடைகின்றன . அறியாமையால் உடனுக்குடன் மனிதனை வெட்கப்பட வைக்கும் இலக்கியம் விடுகதை ஒன்றேயாகும் . இலக்கியங்களில் விடுகதை தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் விடுகதையைப் ‘ பிசி ’ என்று குறிப்பிடுவதைக் காணலாம் . தொல்காப்பியர் பிசிக்குரிய இலக்கணத்தைக் கூறும் போது , ” ஒப்பொடு புணர்ந்த வுவமத் தானும் ...