Skip to main content

கவியரசர் கண்ணதாசன் திரைப்படப் பாடல்களில் இறையிசைப் பாடல்கள்

  கவியரசர் கண்ணதாசன் திரைப்படப்   பாடல்களில் இறையிசைப் பாடல்கள் ஆய்வுச் சுருக்கம்             பக்தியையும் பக்தியின் பயன்களையும் இனிமையாகவும் எளிமையாகவும் எடுத்துத் தந்த பாங்கிளைக் கவியரசர் கண்ணதாசனின்   திரையிசைப் பாடல்களில் காணலாம் . ஆழ்வார்களும் நாயன்மார்களும் , வேதாந்திகளும் , சித்தாந்திகளும் , ஞானிகளும் , சான்றோர்களும் ஆற்றிய சமயப் பணியைக் கவியரசர் தன் தனிப் பாடல்கள் மூலமாகவும் , திரையிசைப் பாடல்கள் மூலமாகவும் செய்துள்ளார் என்றால் மிகையில்லை . இறையிசைப் பாடல்கள் வழி உலக மக்களை ஒரு குலமாகக் கருதி ஒருதாய் மக்களாகச் சமரச சகவாழ்வு வாழ்வதற்குத் தாய்மொழிப் பற்றும் , தாய்நாட்டுப் பற்றும் தடையில்லை என்ற அரிய செய்தியை அற்புதமாகப் பாடுகின்றார் . திரைப்படப் பாடல்கள் பக்தி பாடலாக உயரும் தகுதியை ஊட்டியவர் கவியரசர் என்றால் மிகையில்லை . குறிப்புச் சொற்கள் அணு , சமயம் , சமரசம் , சித்தாந்தம் , தத்துவம் , ஆணவம் , கலைகள் , இயக்கம் , வேதம் , சத்தியம் , அடியவன் , மதம் , சமுதாய புரட்சி முன்னுரை     ...

இப்படிக்கு அன்புடன் மனசு (புத்தக மதிப்புரை)

 

இப்படிக்கு அன்புடன் மனசு (புத்தக மதிப்புரை) 

இன்று புத்தக மதிப்புரையில் காம்கேர் கே.புவனேஸ்வரி அவர்கள் எழுதிய இப்படிக்கு அன்புடன் மனசு என்ற  புத்தகத்தைப் பார்ப்போம். இந்தப் புத்தகத்தை நவம்பர் 2016 -ஆம் ஆண்டு, சென்னை, பாவை பிரிண்டர்ஸ் (பி) விமிடேட், வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 140, விலை 100 ரூபாய்.

·    இந்நூலின் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி  ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், ஆவணப்பட இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், மேடை பேச்சாளர்  என பன்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர்.

·         இவர் கடந்த 30 ஆண்டுகளாக (Since 1992) இயங்கிவரும் Compcare Software என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் Founder, CEO & MD.

·         தொழில்நுட்பத்தில் இரட்டைப் பட்டம் பெற்று, சுயமாக சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கியதால் நம் நாட்டில் மென்பொருள் நிறுவனம் தொடங்கிய முதல் பெண் தொழில்நுட்ப வல்லுநர் என்ற சிறப்பையும் அங்கீகாரத்தையும் பெற்றார்.

·         கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் தொழில்நுட்பம் சார்ந்த சாஃப்ட்வேர், ஹார்டுவேர், இன்டர்நெட், மொபைல் ஆப்ஸ் சம்பந்தமான 100-க்கும் மேற்பட்ட நூல்களையும், வாழ்வியலுக்காக 25-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

·         கம்ப்யூட்டர் தவிர, குழந்தைகள், பக்தி, இலக்கியம், ஆன்மிகம், மனிதவள மேம்பாடு பற்றிப் பல முன்னணிப் பத்திரிகைகளில் எழுதிவருகிறார். அவை சம்மந்தப்பட்ட சுயமுன்னேற்றப் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டு வருகிறார்.  12-வயதில் இருந்தே எழுதத் தொடங்கியவர்.

·         தன் பெற்றோரின் பெயரில் ஸ்ரீபத்மகிருஷ்என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக உதவிவரும் இந்த அமைப்பின் வாயிலாக சூழலுக்கு ஏற்ப பல்வேறுதரப்பு மக்களுக்கும் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.

·         ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தரப்பினரில் திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து ஸ்ரீபத்மகிருஷ்விருதளித்தும் கெளரவிக்கிறார்.

இத்தகைய சிறப்புகளைப் பெற்ற நூலாசிரியர் அவர்கள் எழுதிய இந்நூலுக்கு மகுடம் சூட்டியது போல் சிறப்பானதொரு அணிந்துரையை ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர் அவர்கள் எழுதியுள்ளார்.

            இந்நூலில் நூலாசிரியர் அவர்கள்  1. பகுத்தறிவின் பயன் என்ன? 2. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு 3. பெண்களின் பலமும் பலவீனமும் 4. வேலையை சுலபமாக்கும் மந்திரம் 6. உடலும் மனமும்  5. தன்னம்பிக்கை 6. நில்! எதிர்த்து நில்! வெற்றிக் கொள்! 7. மனதை ஒருமுகப்படுத்துவோம் 8.  இருளும் வெளிச்சமும் என்று 20 தலைப்புகளில் தன்னுடைய அனுபவங்களையும், சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளையும் மிக அழகாக ஒருங்கிணைத்துக் கட்டுரைகளாகத் தொகுத்து அளித்துள்ளார்.

1.   பகுத்தறிவின் பயன் என்ன?  எனும் தலைப்பில்,

அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!’ என்று ஔவையார் கூறியுள்ளார். மற்ற உயிரினங்களிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டப் பகுத்தறியும் பண்பாகிய ஆறாவது அறிவைப் பெற்ற மனிதன் இவ்வுலகில் ஜனித்துள்ள எல்லா உயிரினங்களை விடவும், மிக உயரிய நிலையில் இருக்கிறான். உடல், நாவு, மூக்கு, கண், செவி என்கின்ற ஐம்புலன்களோடு சேர்த்துச் சிந்திக்கவும், மனம் என்ற அற்புதமான புலமையும் பெற்றிருக்கிறான்.

எது நல்லது, எது கெட்டது என ஆராய்ந்து நல்லதைத் தேர்ந்தெடுத்துத் தீயவற்றை ஒதுக்கி நமது சுய அறிவாகிய பகுத்தறியும் குணத்தினால் வாழ்க்கையில் செம்மையாக்கிக் கொண்டு தானும் வளம் பெற்று, தம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தையும் வளம்பெறச் செய்து வாழ்வதே மனிதர்களின் தலையாயக் கடமையாகும்.

யானை இருந்தாலும் ஆயிரம்பொன், இறந்தாலும் ஆயிரம் பொள்!’ என்பதைப் போல நாம் வாழும் போதும், வாழ்ந்த பிறகும், நம்முடைய வாழ்க்கையை பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள, இன்று ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

வாழும் போது நாம் மகிழ்ச்சியாக இருக்கின்ற ஒவ்வொரு பண்டிகை தினத்தையும், இல்லாதவர்களோடும், ஏழைகளோடும், ஆதரவற்றோர்களோடும் இணைத்து கொண்டாடுவதன் மூலம், நம் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். சிந்திப்போம், செயல்படுவோம்.

2.   மக்கள் தொண்டே மகேசன் தொண்டு  எனும் தலைப்பில்,

தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவதிலும் ஒரு நாகரிகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் தொடர்பு கொள்ளும் நபர், தொடர்பில் கிடைத்தவுடன், சில நிமிடங்கள் பேச இயலுமா? என்று கேட்டுப் பேச ஆரம்பித்தால், அவர் பேசக்கூடிய நிலையில் இருக்கிறாரா? இல்லையா எனபது தெளிவாகத் தெரிந்து அதற்குத் தகுந்தாற் போல் தெளிவாகவும், சுருக்கமாகவும் பேசி முடித்துக் கொள்ளலாம். இதன்மூலம் தொடர்ச்சியாக நிறையத் தொலைபேசி அழைப்பு வருபவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படாமல் இருக்கும்.

நூலாசிரியர் தமது 12 வது வயதில் எழுதியசெய்யும் தொழிலே தெய்வம்என்ற கதை கோகுலம் என்ற சிறுவர் பத்திரிக்கையில் பிருந்தாவனக் கதையரங்கம் என்ற பகுதியில் பிரசுரம் ஆனது.

அக்கதை சிறுவர்களுக்கான கதையாக இருந்தாலும், நாம் அனைவரும் உணரவேண்டிய உன்னதக் கருத்துப் பொதிந்த கதை இது.

இக்கதையில் மருத்துவமனையில் பணியாற்றும் நர்சு வேலைப் பார்க்கும் பெண், மற்றும் மகன் இவர்களைப் பற்றியது. அம்மா வீட்டிற்கு லேட்டாக வருவதால் அவன் தன் அம்மாவிடம் நர்சு வேலைக்குப் போவது எனக்குப் பிடிக்கவில்லை. அப்பாவும் இல்லை என்று வருத்தப்பட்டான். அடுத்த நாள் தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.  மருத்துவமனையில் அம்மா நோயாளிகளைக் கவனிக்கும் விதத்தை அச்சிறுவன் கவனித்துக் கொண்டிருந்தான்.   பணியாற்றும் விதத்தையும், அப்பணிக்கு இலவசமாகக் கிடைக்கும் வெகுமதிகளாக வாழ்த்துகளையும், நன்றிகளையும் பார்த்தான்.  பின் அந்த பையன் தன் அம்மாவின் நிலையைப் புரிந்து கொள்வதாகக் கதை அமைந்துள்ளது. செய்யும் தொழிலே தெய்வம் என்பதைப் புரிந்து கொண்டான்.

3. பெண்களின் பலமும் பலவீனமும்

          பெண்கள் எதற்கெடுத்தாலும் அழத் தொடங்கி விடுகிறார்கள். இதுவரை அப்படித்தான் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. வீர உணர்வை போதிக்க வேண்டும். இந்த காலத்தில் தற்காப்பு முறைகளை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பெண்கள் வீரமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார், சுவாமி விவேகானந்தர்.

          தேவை ஏற்பட்டால் ஒவ்வொரு பெண்ணும் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார். அதற்கு அடிப்படையாக நல்ல கல்வி கொடுக்கப்பட வேண்டும். நல்ல கல்வி அறிவை வளர்க்கும். அந்த அறிவைக் கொண்டு தானும் வளர்ந்து தன்னைச் சார்ந்தவர்களையும் வாழ வைப்பார்கள்.

          எந்தச் சூழலிலும் பெண் பலவீனமானவள், பாவம், பரிதாபம், தவறே செய்தாலும் பெண் என்பதால் விட்டு விடலாம் கொடுக்கப்படும் சலுகைகளும், பரிதாபங்களும் பெண்களின் பலத்தைப் பலவீனமாக்கும் என்ற கருத்து சிறு வயதிலேயே என் மனதில் வேரூன்றிப் போனதால், அந்தக் கருத்தில் இன்றளவும் நான் உறுதியாக இருக்கிறேன். என்று நூலாசிரியர் தன் கருத்தையும் பதிவு செய்துள்ளார்.

4. வேலையை சுலபமாக்கும் மந்திரம் எனும் தலைப்பில்,

            அந்த காலத்தில் கதை ஒன்றைச் சொல்வார்கள் அக்கதையில் மந்திரவாதியின் உயிர் ஏழு கடல், ஏழு மலை தாண்டி  உயிர் கண்டறிவது போல் தான் வேலைக் கிடைப்பதும் இருந்து வந்தது.

          வேலை தேடலிலும் இது போன்றதொரு நெடும் பயணம் இருந்து வந்ததை அக்காலக் கட்டத்தில் வாழ்ந்தவர்கள் நன்கறிவார்கள். இப்படி ஒரு வேலையில் கிடைத்து விட்டால் ஓய்வு பெறும் வரை அந்நிறுவனத்திலேயே வேலை செய்வார்கள். அதுவும் அரசு வேலை கிடைத்தால் வீட்டிலும், சமூகத்திலும் இரட்டிப்பு மரியாதை.

          நூலாசிரியரும் தம் அனுபவத்தை இங்கு குறிப்பிடுகிறார். கம்ப்யூட்டர் சயின்ஸின் முதுகலை பட்டம் பெற்று 1992- ஆம் ஆண்டில் சொந்தமாக நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். தனது இலட்சியங்களுக்கு ஊறு விளைவிக்கும் அடுத்தவர்களின் கருத்துகளைக் காதுகளில் வாங்காமல் தனது செயலை செய்ய வேண்டும் என்று ஒரு கதையைக் கூறுகிறார் ஆசிரியர்.

          ஐந்து பல்லிகள் இமயமலை உச்சியை அடையப் பெருமுயற்சி செய்தன. ஒவ்வொரு பல்லியாக உச்சியை அடைவதற்குள் வெயிலிலும் மழையிலும் துன்பம் தாங்காமல் பின்வாங்கியது. ஐந்தாவது பல்லி யாருடைய அச்சுறுத்தல்களையும் காதில் வாங்காமல், எதையும் பொருட்படுத்தாது இமயமலை உச்சியை அடைந்தது. எப்படி இவன் முன்னேறினான் என்று மற்றப் பல்லிகளுக்கு ஆச்சிரியம். அதில் ஒரு பல்லி, அவனுக்குக் காது கேட்காது என்று சொன்னது. இதுதான் வெற்றியின் இரகசியம். என் வெற்றிக்கான சூத்திரமும் இதுதான் என்று நூலாசிரியரும் கூறுகிறார்.

          வெற்றிப் பெற நினைப்பவர்கள் தங்கள் இலட்சயத்தில் உறுதியாக இருக்க வேண்டும். குறிப்பாக அனுபவமில்லாத பிறரது கருத்துக்களை காதால் கேட்டு, மனதி்ல் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

          தான் விரும்புகின்ற வேலையாக இருந்தால், எந்த முட்டாளும் அதைச் செய்து முடிப்பான். எந்த வேலையாக இருந்தாலும் அதனைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளி. எந்த வேலையும் அற்பமானதல்ல.

5.  உடலும் மனமும்

          உடலுக்கும் மனதுக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது. உடல் தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் சதா வேலை செய்து கொண்டே இருக்கிறது. உடலுடன் மனமும் சேர்ந்து வேலை செய்கிறது. உறக்கத்திலும் மனம் தன்னிச்சையாக ஏதேதோ சிந்திக்கிறது. அவை கனவுகளாக வெளிப்படுகின்றன. இப்படி ஓய்வே இல்லாமல் இயங்குகின்ற மனதோடு தொடர்புடைய உடலையும் சரிசமமாகப் பாவிக்க வேண்டும். உடலுக்குப் பயிற்சி கொடுப்பது என்றால் உடற்பயிற்சியைச் சொல்லலாம். மனதை ஒருமுகப் படுத்துகின்ற தியானம் செய்தல், கோயில்களுக்குச் சென்று கடவுளைத் தரிசித்து இறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றை மனதுக்குக் கொடுக்கின்ற பயிற்சியாகக் கொள்ளலாம்.

          அக்கால குழந்தைகள் ஓடிவிளையாடுதல், ஸ்கிப்பிங், மூச்சு விளையாட்டு, நொண்டி பிடித்து  விளையாடுதல் என்று தினமும் விளையாட்டுக்கென்று 1/2 மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை ஒதுக்கினார்கள். ஆனால் இன்றைய குழந்தைகள் பள்ளி விட்டால் வீடு, மறுபடி டியூசன், ஹோம் ஒர்க் என்று வெறும் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக வளர்க்கப்படுகிறார்கள்.

          பெரியவர்களும் வயதுகேற்ற உடல் உழைப்பு இருக்கும். விடியற் காலையில் எழுந்து கூழ் அல்லது கஞ்சி குடித்துவிட்டு மோர் விட்டுப் பிசைந்த முந்தைய நாள் பழைய சாதத்தை மதியத்துக்காக எடுத்துக் கொண்டு வயல்வெளிக்கு செல்வார்கள். கடும் வெயிலில் வியர்க்க வியர்க்க வேலை செய்வார்கள். இருட்டுவதற்கு முன் வீடு திரும்புவார்கள். நன்றாக குளித்துவிட்டு சுடச் சுட சமைத்து சாப்பிடுவார்கள். காலை முழுவதும் உழைத்தக் கழைப்பு நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். உழைப்பிலேயே நேரம் போவதால் வீண் வம்பு வெட்டிப் பேச்சு  இவற்றுக்கு இடம் இருக்காது.  அவர்களுக்குள் மனதாபிமானம், மனித நேயம் போன்றவை வற்றாமல் இருந்து வந்தது.

          இயற்கை நமக்கு இலவசமாக கொடுத்த விஷயங்களை இன்று நாம் காசு கொடுத்து நேரத்தையும் செலவழித்துப் புதுமையாக்கிக் கொள்கிறோம். தற்பொழுது உடல் உழைப்புக் குறைந்து, நிம்மதியற்ற பரபரப்பான மனநிலையிலேயே வாழ வேண்டிய கட்டாயச் சூழலில் எல்லோரும் இருந்து வருவதால் உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும் அனைவருக்குமே அத்தியாவசியமாகிறது.

          பழையன கழிதலும் புதியன புகுதலும்என்ற நன்னூல் வாசகத்திற்கேற்ப நித்தம் தன்னுள் சேருகின்ற கசடுகளைத் தூர எறிந்து. உணர்வுகளைப் புதுப்பித்துக் கொள்ளவும் நாம் நமக்காக காலையோ, மாலையோ நமக்கே நமக்காக அரைமணிநேரம் ஒதுக்க வேண்டும்.  

7.  தன்னம்பிக்கை

          நாம் ஓர் இலட்சியத்தை வைத்துக் கொண்டு அதனை நோக்கி நகரும்போது எத்தனை இடையூறுகள் வந்தாலும் அயராமல் போராடி முன்னேறாமல் தோல்வியே உண்டாகாது என்பதுதான் சுவாமி விவேகானந்தரின் கூற்று.

            அது எத்தனை உண்மை என்பதை இந்நூலாசிரியர் தமது வாழ்க்கை அனுபவங்களை தமது நூலில் பதிவிட்டுள்ளார்.

            ஆசிரியர் அவர்கள் பெரிய எழுத்தாளராக, படைப்பாளராக ஆக வேண்டும் என்பது தான் தனது சிறுவயது இலட்சியம். தினமும் எழுதுவதற்காக விடியற்காலை மூன்று மணிக்கு எழுந்து ஐந்து மணி வரை எழுதுவேன். ஐந்து மணி முதல் ஆறு மணி வரை தூக்கம். பிறகு படிப்பு இப்படி வெறித்தனமாக நான் கொண்ட இலட்சியத்துக்காகத் தூக்கத்தைத் துறந்தேன்.

            பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிப்கும் போது ஐசக் நியூட்டன், சர்.சி.இராமன், கணித மேதை ராமானுஜர் போன்றவர்களின்  கண்டுபிடிப்புகளும், ஆப்ரகாம்லிங்கன், இந்திராகாந்தி போன்றவர்களின் சாதனைகளும் எனக்குள் இருந்த இலட்சியத்துக்கு எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல அமைந்தன. அவர்களின் புகைப்படங்களையும், சாதனைகளையும் கண்டுபிடிப்புகளையும் படிக்கின்ற போது, நானும் இவர்களைப் போல வரவேண்டும் என்கின்ற உத்வேகம் எனக்குள் யாகத் தீயாய் எரிந்து கொண்டே இருந்தது.

            இலட்சியம், அதை அடைய எடுத்துக் கொண்ட கடுமையான முயற்சி, உழைப்பு ஆகியவற்றால் 12 வயதில் நூலாசிரியர் அவர்கள் முதல் கதையை சிறுவர்களுக்கான பத்திரிக்கையில் வெளியானது. அதுவே  நூலாசிரியருக்கான தூண்டுகோலாகவும் அமைந்தது. அதன்பிறகு ஏராளமாக எழுத ஆரம்பித்துள்ளார். அந்த காலத்தில் பிரசுரம் செய்ய இயலாததைத் திரும்பப் பெற நம் முகவரி எழுதிய கவரை வைத்தனுப்ப வேண்டும். அப்படி அனுப்புகின்ற படைப்புகளில் 10 அனுப்பினால் 9 தபாலில் திரும்பி வரும். பல சமயங்களில் எல்லாமே திரும்பி வந்து விடும்.

            அவர் எதற்கும் அசராமல்,

            எழுதிச் செல்லும் விதியின் கை

          எழுதி எழுதி மேற்செல்லும்

          தொழுது கெஞ்சி நின்றாலும்

          சூழ்ச்சி பலவும் செய்தாலும்

          வழுவிப் பின்னால் நீங்கியொரு

          வார்த்தையேனும் மாறிடுமோ?

          அழுத கண்ணீர் ஆறெல்லாம்

          அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?

என்னும் கவிமணி தேசிக விநாயகத்தின் பாடல் வரிகளில், விதியின் கை யாருடைய அழுகைக்கும், வேண்டுதலுக்கும் செவி செய்க்காமல் எழுதி கொண்டே செல்வதைப் போல, சதா சர்வகாலமும் எழுதிக்கொண்டே இருந்தேன். நான் எம்.எஸ்.எஸி முடிப்பதற்குள் கலைமகள், அமுதசுரபி, கல்கி, மங்கையர்மலர், சாவி, வாரமலர் போன்ற முன்னணிப் பத்திரிக்கைகளின் பல படைப்புகள் வெளி வந்ததோடு, விருதுகளையும் பெற்று வந்தன.

        என் சொந்தமான நிறுவனம் தொடங்கும் உத்வேகத்தைக் கொடுத்தது என்று கூறியுள்ளார். நிறுவனத்தைத் தொடர்ந்து அந்த பேனரில் புத்தகங்கள், அனிமேஷன் சிடிகள், சாஃப்ட்வேர்கள் என்று என் தயாரிப்புகளை உருவாக்கி வெளியிட்டு வருகிறேன். தொடர்ந்து வெளியிட்டும் வருகிறேன்.

            என் நிறுவனத் தயாரிப்புகளுக்கு முதல் விளம்பரமே என் பெயரும், என் எழுத்தும் தான் என்று இந்நூலாசிரியர் தமது நூலில் பதிவிட்டுள்ளார்.

8.  நில்! எதிர்த்து நில்! வெற்றிக் கொள்! எனும் தலைப்பில்,

          சில முன் அனுபவங்களை அடி மனதிலும் போட்டு வைத்திருக்கக் கூடாது என்பது என் வாழ்க்கை அனுபவம். கம்ப்யூட்டரில் shift + Delete கீக்களை அழுத்தித் தேவையில்லாத ஃபைல்களை அழிக்கும் போது, அவற்றைத் திரும்ப எடுக்க இயலாததைப் போல, நம் மனதில் இருந்தும் தேவையில்லாத பயத்தை, நாமே நினைத்தாலும், அது நம் நினைவுக்கு வராத அளவுக்கு, முற்றிலும் துடைந்தெறிந்து விடவேண்டும்.

            அப்படிப் பயத்தை முற்றிலும் போக்குவது என்பது சற்றுக் கடினமான செயல்தான். ஆனாலும் பயத்தின் வீரியத்தைக் குறைக்க முடியும். அதற்கு எந்த ஒரு விஷயத்தில் பயம் இருக்கிறதோ, அது குறித்த தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு கம்ப்யூட்டரைப் பார்த்தாலே அலர்ஜியா, அதில் கேம்ஸ் விளையாடிப் பழகினால் போதும். நாளடைவில் அதைக் கையாள்வதற்கு ஆவலைத் தூண்டும். அதுபோல நாய்ப் பயத்தைப் போக்கிக் கொள்வதற்கு, அதைக் கண்டு பயந்து ஓடாமல், கொஞ்சம் கொஞ்சமாகத் தோழமையாகப் பழக ஆரம்பித்தால், அது நம்முடன் கொஞ்சி விளையாட ஆரம்பித்து விடும்.

     இவ்வாறாக நம்மை நாமே பதப்படுத்திக் கொண்டால், நம்மால் எதையும் சாதிக்க முடியும்.         

9.  மனதை ஒருமுகப்படுத்துவோம்

            கல்வியின் அடிப்படையான இலட்சியமே மனதை ஒருமுகப் படுத்துவதுதான். மனதை ஒருமுகப்படுத்துகிற அளவுக்கு அறிவு வளர்ச்சியும் அதிகமாகும். நான் மறுபடியும் கல்வி கற்பதாக இருந்தால் வெறும் புள்ளி விவரங்களை மட்டுமே படிக்க மாட்டேன். முதலில் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலையும், நல்ல பண்பாட்டையும் வளர்த்துக் கொள்வேன். அந்தக் கருவியைக் கொண்டு, நினைத்த நேரத்தில் விவரங்களைச் சேகரித்துக் கொள்வேன் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

            எந்த ஒரு பிரச்சனைக்கும் ஏதேனும் ஒரு தீர்வு இருக்கும். அந்தத் தீர்வுக்கான வழியைக் கண்டுபிடிப்பதற்குப் பதற்றமான மனநிலையைத் தவிர்த்து விட்டு, மனதை ஒருமுகப்படுத்தி யோசித்தால், நல்ல பலன் கிடைக்கும்இதையே மகாபாரதத்தில் ஏகலைவன் நிரூபத்திருக்கிறான். பாண்டவர்களும், கவுரவர்களும் தங்களது குரு துரோணாச்சாரியாரிடம் வில் வித்தையை சாஸ்திர முறையாகப் பயின்று வந்தனர். அப்போது அந்தக் காட்டில் வசித்து வந்த ஏகலைவன் வில் வித்தை கற்றுத்தரும் துரோணரிடம் வில் பயிற்சி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், துரோணர் பாண்டவ கவுரவர்கள் மீதிருந்த ஆழமான பாசப் பிணைப்பினாலும், ஏகலைவன் வேடர் குலம் என்பதாலும் வில் பயிற்சியைக் கற்றுத் தருவதற்கு விரும்பவில்லை.

            ஏகலைவன் துரோணர் போன்ற மண் பொம்மையைச் செய்து அதையே குருவாக்க் கருதி நாள்தோறும் வழிபட்டு கவுரவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்ற வித்தைகளைத் தூரத்தில் இருந்தே கவனித்து, பயிற்சி செய்து வந்தான். தான் விரும்பிய வில் வித்தையைக் குருவின் நேரடிக் கண்காணிப்பும் பயிற்சியும் இல்லாமல் கற்றுக் கொண்டான். வில்வித்தையை மனதை ஒருமுகப்படுத்திச் செயலாற்றியதால் தான், குருவே வியக்கும்படி வில் வித்தையில் சிறப்புற்றான் என்பதே உண்மை.

            நூலகங்கள், கம்ப்யூட்டர் இண்டர்நெட் என்று எந்த வசதிகளும் இல்லாத காலத்திலேயே விரும்பியதைக் கற்கவும், அதற்குச் செயல் வடிவம் கொடுக்கவும் முடிந்திருக்கின்றபோது, நினைத்தால் நினைத்த மாத்திரத்தில் அத்தனையும் நமக்கு கிடைக்கின்ற தொழில் நுட்ப வசதிகள் இருக்கின்ற இக்காலத்தில் நம்மால் செய்ய முடியவில்லை என்றால், அதற்கு முயற்சி செய்ய மறுக்கும் சோம்பலான மனநிலைதான் மிக முக்கிய காரணமாகும்.

            மனதை ஒருமுகப்படுத்துவோம். எண்ணியதை முடிப்போம்.

10. இருளும் வெளிச்சமும் எனும் தலைப்பில்

          ஓர் அறை நூறு ஆண்டுகளாக இருள் மூடிக் கிடந்தால், அந்த அறை அருகே சென்று, , இது இருட்டாக இருக்கிறது! இருட்டாக இருக்கிறது! என்று அழுதால் இருள் போய் விடுமா? விளக்கை அதற்கு அருகில் கொண்டு செல்லுங்கள். உடனே இருள் மறைந்து போகும். சீர்திருத்தத்தின் இரகசியம் இதுதான்!

            சுவாமிஜி சொல்வதைப் போல இருட்டின் அருகே வெளிச்சம் வராதவரை இருட்டு இருட்டாகவேதான் இருக்கும். இருள் விலக, ஒரு துளி வெளிச்சம் கிடைத்தால்போதும். அதுபோல மக்கள் தங்கள்அறியாமையில் இருந்து விலக, ஒரு துளி விழிப்புணர்வு கிடைத்தால் போதும்.

          மனிதன் நன்றாகப் படித்தவனாக இருந்தாலும் சரி, ஒன்றும் படிக்காதவனாக இருந்தாலும் சரி, அவனிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அவனிடம் குறைகள் இருந்தால் அவன் தவறுகள் செய்தால், அவன் காட்டுத்தனமான கொடூரக் கொள்கைகளைப் பின்பற்றினால், அவை அவனுடைய உண்மையான இயல்பிலிருந்து வந்தவை என்று எண்ணாதீர்கள். அதைவிட உயர்ந்தவை கிடைக்காததால் அதைச் செய்கிறான் என்று நம்புங்கள்.

       கண்ணாடிக் குடுவைக்குள் அழுக்கு இருந்தால், அதன் வெளிப்புறம் தூய்மையாக இருந்தாலும், உள்ளுக்குள் இருக்கும் அழுக்கு அக்குடுவையை அழுக்காகத்தானே காட்டும். குடுவையின் உட்பகுதி பளிச்சென்றிருந்தால், வெளிப்பகுதியில் படிந்திருக்கும் தூசு, தும்பு இவற்றையெல்லாம் மீறிக்கொண்டு, கண்ணாடி குடுவை பளப்பளப்பதுதானே இயல்பு.

நிறைவாக,

       தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை உள்ளே இருக்கும் தெய்வீகத்தை வெளியே வரவழைக்கிறதுஎன்பதற்கிணங்க தம் வாழ்வின் நிகழ்வுகளை சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளுடன் ஒப்பிட்டு இருபது கட்டுரைகளைப் படைத்துள்ளார் . நூலாசிரியர் அவரகள் பெண்களுக்காகவே நான்கு தலைப்புகளை ஒதுக்கி, அவர்களின் பிரச்சனைகளைக் குறித்தும், தம் வாழ்வின் அனுபவங்களையும் விரிவாகக் கூறுகிறார். இதன் மூலம் பெண்களின் மீதான சிறப்பு, அக்கறையும் அவர்களின் நிலை உயரவேண்டும் என்ற ஆதங்கமும் வெளிப்படுகின்றன. இந்நூலானது மிகச் சிறந்த படைப்பு. வாழ்க்கையின் முன்னேற துடிக்கும் அனைவருக்கும் நூலாசிரியரின் வாழ்க்கையே ஒரு சிறந்தச் சான்றாக அமையும் என்றால் சிறிதும் ஐயமில்லை.

          நூலாசிரியர் ஒரு நிறுவன இயக்குநர் என்ற அளவில் நின்றுவிடாமல், தான் உயர்வதோடு தன்னை சார்ந்தோரையும் உயர்த்தும் எண்ணம் கொண்ட நூலாசிரியருக்கு நல் வாழ்த்துகள் கூறி, புத்துலகம் படைக்கப் புத்தகம் படிப்போம்.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...