Skip to main content

தமிழ் நாடகங்களில் மொழிநடை

                                                                             தமிழ் நாடகங்களில் மொழிநடை ஆய்வுச் சுருக்கம்           பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாடகங்கள் பெரும்பாலும் பாடலும் உரைநடையும் கலந்தே எழுதப்பெற்றுள்ளது . நாட்டார் நாடகங்கள் முதல் முதலில் தெருக்கூத்துக்கள் நடத்தப்பெற்றன . ஆகையினால் , அவை அவற்றிற்குத் தகுந்த முறையில் தாம் எழுதப்பெற்றன . பின்னர் அவை அரங்கத்தில் நடிக்கப் பெற்றன . மாற்றங்கள் அதிகமின்றிப் பாடல்களாகவே அவை அமைந்து இடையிடையே சிறிய சிறிய உரைநடைப் பகுதிக் காணப்பெறும் . மேலும் நாடகங்களில் மக்களின் வாய்மொழிகள்   வடமொழிக் கலப்பு மிக மிக அதிகமாகிக் கொண்டிருந்தது . அந்நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலம் அதிகம் கலந்து விட்டது . மேலும் பக்கத்து மாநில மொழிகளான தெலுங்கு போன்றவை...

என் எண்ணச் சிதறல்கள்! - (2)

 

என் எண்ணச் சிதறல்கள்! (2)

 

          Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக்  கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன். அந்தக் கவிதைகளை அனைத்தையும்  தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன்.

1.   சேவை! தேவை!
முகம் பார்த்து செய்வது சேவை!
அகம் பார்த்து செய்வது தேவை!

 

2.   சோதனை! சாதனை!
சங்கடம் இல்லாத சோதனை இல்லை!
சவால் இல்லாத சாதனை இல்லை!

 

3.   புத்தகத்தின் பலன்களாக!
நம் வாழ்நாளில்

படிக்கும் புத்தகங்கள் சில கிலோ எடைதான்
பலன்?
பல டன்களாக இருக்கும்!

 

4.   ஆலோசனை!
பலரிடம் ஆலோசனை கேட்கலாம்-முடிவு

உனதாக இருக்க வேண்டும்!

 

5.   மெளனம்!
மெளனம் - என்பது

பேச்சில்லாமல் இருப்பது என்பதல்ல!
நினைவுகள் -என்ற
சப்தம் இல்லாமல் இருப்பது!

 

6.   அனுபவப் பாடம்!
நம் வாழ்க்கை அனுபவத்தில்
கற்றுக் கொள்வதை விட
அடுத்தவர்களின்
வாழ்க்கை அனுபவத்தைப் பாடமாக
நெறிப்படுத்திக் கொள்பவனே
சாதனை மனிதனாக ஒளிர்கிறான்!

7.   நிம்மதியான வாழ்விற்கு!
தவறுகள்
நம்மை பின் தொடரும்
நிழல்களல்ல!
நாமாக விரும்பி
அணிந்து கொள்ளும்
அணிகலன்கள்!
தவறுகளை உணர்ந்து
மனம் திருந்தினால் போதும்
வாழ்வில் நிம்மதி பெறலாம்!

8.   ஓய்வு!
ஓய்வு என்பது
வேலை இல்லாமல் இருப்பதல்ல!
வேலையை மாற்றி
உற்சாகப் படுத்திக் கொள்வது!

9.   குழப்பம்!
சில சந்தர்ப்பங்களில்

நிஜம் ஏற்படுத்துகின்ற
குழப்பங்களை விட
கற்பனைகள் ஏற்படுத்துகின்ற
குழப்பங்களே அதிகம்!

10.            மனநிம்மதியுடன் வாழ!
தவறுகள் அனைத்தும்

குற்றங்கள் அல்ல!

தவறுகள் என்று

உணர்ந்தாலே போதும்! - அவை

குற்றங்கள் என்ற நிலைக்கு

செல்லாமல் வழிவகுக்கும்!

மனநிம்மதியைக் கொடுக்கும்!

11.            நூல்!
நல்ல நூலிலுள்ள

சிறிய வாசகம்!

ஒருவர் வாழ்வில்

வரலாற்றைப் புரட்டிப் போடும்

பெரிய ஆயுதம்!

12.            தேடல்!
உயிருக்காகவா?

உணர்வுக்காகவா?

தெளிவு நோக்கியா?

தெரியாத ஒன்றிற்காகவா?

தேடல் ஒரு கலையே!

எல்லா உயிருக்கும் உண்டு

தேடல் முற்றுமாக முடிவதில்லை!

அது ஒரு தொடர்கதையே!

13.            வெற்றி!
விரக்தியை விரட்டுங்கள்!

விபரீத எண்ணங்களைக் கைவிடுங்கள்!

மனக் கலக்கமின்றி

சிந்தனையில் தெளிவும்

தன் நம்பிக்கையும்

கொண்டு செயல்பட்டால்

வெற்றி நம் கையில்!

Comments

Popular posts from this blog

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...