தமிழ் நாடகங்களில் மொழிநடை ஆய்வுச் சுருக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாடகங்கள் பெரும்பாலும் பாடலும் உரைநடையும் கலந்தே எழுதப்பெற்றுள்ளது . நாட்டார் நாடகங்கள் முதல் முதலில் தெருக்கூத்துக்கள் நடத்தப்பெற்றன . ஆகையினால் , அவை அவற்றிற்குத் தகுந்த முறையில் தாம் எழுதப்பெற்றன . பின்னர் அவை அரங்கத்தில் நடிக்கப் பெற்றன . மாற்றங்கள் அதிகமின்றிப் பாடல்களாகவே அவை அமைந்து இடையிடையே சிறிய சிறிய உரைநடைப் பகுதிக் காணப்பெறும் . மேலும் நாடகங்களில் மக்களின் வாய்மொழிகள் வடமொழிக் கலப்பு மிக மிக அதிகமாகிக் கொண்டிருந்தது . அந்நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலம் அதிகம் கலந்து விட்டது . மேலும் பக்கத்து மாநில மொழிகளான தெலுங்கு போன்றவை...
மனஅமைதிக்குச் சில வழிகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் பி . சி . கணேசன் அவர்கள் எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகம் 2017 - ஆம் ஆண்டில் , ஏழாம் பதிப்பாக , சென்னை , வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 108, விலை 40 ரூபாய் . நூலாசிரியர் பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல் விமர்சகர். சிறுகதை மன்னர் , வரலாற்றுப் பேராசிரியர் , சிறந்த நாவலாசிரியர் , திரைப்பட இயக்குநர் , நல்ல மொழிப் பெயர்ப்பாளர் , பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது . வெளியில் எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ விட்டுவிடுகிறான் . அந்த இடம் எது ? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல் எடுத்து இயம்புகிறது . அத்தியாயத் தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . ...