பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்னும் நூலில் பெண்ணியச் சிந்தனைகள் ஆண் , பெண் என்ற இருவரில் உயர்வு தாழ்வு இல்லை . பெண்களுக்கு முதன்மை வழங்கவேண்டும் என்பது அறிவும் அன்பும் வாய்ந்தோர் கருத்து . பெண்களுக்கு இயல்பாக அமைந்துள்ள குணம் , தொண்டு , கடமை முதலியவற்றை நோக்கும் போது முதன்மை பெற்று விளங்குவது நன்கு புலனாகும் . ஆண்களின் பேற்றிற்கும் , வளத்துக்கும் , நலத்துக்கும் , பிற ஆக்கத்திற்கும் நிலைக்களனாயிருப்பது பெண்ணுலகம் என்பது எவரும் அறிந்த ஒன்று . ஆகையால் முதன்மை வழங்கினால் நேரும் இழுக்கென்ன ? நமது நாடும் பெண்மையும் நம் முன்னோர்கள் கல்வியைக் ‘ கலைமகள் ’ என்றும் , திருவைத் ‘ திருமகள் ’ என்றும் , ஞானத்தைப் ‘ பரை ’ என்றும் கொண்டது ஆராயத்தக்கது . நாட்டைப் பலவழிகளிலும் காட்டைக் காக்கும் காட்டுக் கன்னியை ‘ வனதேவதை ’ என்று வாழ்த்துவதும் , பல்லுயிர்களைத் தாங்கும் நாட்டைத் ‘ தாய் நாடு ’ என்றும் வாழ்த்துவதும் எண்ணவேண்டும் . மாணிக்கவாசகரு...
எழுதுகோல் கனவுகள் ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் . இப்புத்தகத்தைத் திருச்சி , இராஜா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 170, விலை 130 ரூபாய் . கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற இந்த கவிதைப் புத்தகம் மூன்றாவது படைப்பாகும் . பல பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதியுள்ளார் . கவிதை எழுத புலவர் பட்டம் தேவையில்லை என்பதை பட்டுக் கோட்டையார் , கவியரசு கண்ணதாசன் , கவிஞர் வாலி , போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு காட்டுகின்றது . கவிதை எழுத தேவை சிந்தனை , பயிற்சி , முயற்சி என்று தெரிந்து கொண்டேன் என்று நூலாசிரியர் தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் . இந்நூலுக்குக் கவிஞர் மணமேடு குருநாதன் அய்யர் அவர்கள் இந்நூலைப் பாராட்டி அன்பான அணிந்துரை வழங்கியுள்ளார் . முசிறி , தலைமையாசிரியர் ( ஓய்வு ) பெ . முத்துகிருஷ்ணன் அவர்...