Skip to main content

என் எண்ணச் சிதறல்கள்! (3)

  என் எண்ணச் சிதறல்கள் ! (3)             Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக்   கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும்   தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1.     தன் நம்பிக்கை! சந்தேகம்! மனநிம்மதியைக் கெடுக்கும் ஆயுதம்! சஞ்சலம்! செயல்திறனைக் குறைக்கும் பேராயுதம்! 2.     வாசிப்பு! அச்சுறுத்தும் வாழ்வின் இருண்ட பக்கங்கள் வாசிக்க வாசிக்க வெளிச்சம் அடைகிறது! தாகத்திற்குத் தண்ணீர்போல தரமான நூல்களைத் தேடித் தேடிப் படிப்பதால் வெளிபடும் வாழ்வு இனிக்கிறது! அறைக்குள் அடங்கிக் கிடந்த எண்ணச் சிறைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது! நல்ல நூல்களின் வாசிப்பு! வாழ்வின் அடையாளம் சுவாசிப்பதைப் போல் வாசிப்பை நேசிப்பது! 3.     படைப்பு! தற்புகழ்ச்சிக்காகவோ பிறரை மகிழ்விப்பதற்காகவோ எழுதப்படும் எழுத்துக்களை விட உய்த்துணர்வதற்கும் உட்பொருள் காண்பதற்கும் நல்வழி காட்டுவதற்கும் தெளிவான தேடலுடன் சொல்லும் செய்த...

திருப்பதி சென்ற அனுபவங்களாக…

 

திருப்பதி சென்ற அனுபவங்களாக

 

            நான் மற்றும் என் மகளின் மாமியார் என்று 50 பேர் திருநெடுங்குளநாதர் டிராவல்ஸ், திருச்சி – 15 மூலம் இரண்டு நாள் (14.04.2026, 15.04.2026) பயணமாக (திருப்பதி, அலமேலுமங்கபுரம், காளகஸ்தி, திருத்தணி, காஞ்சிபுரம்) சுற்றுலா சென்றோம். எங்கள் பெற்றோருடன், பள்ளி, கல்லூரி என்று சுற்றுலா சென்றுள்ளேன். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் சுற்றுலா சென்றேன். இதுவும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பஸ்ஸில் அதிக நேரம் அமர்ந்திருந்தது கால் வலி, உடல் வலி, தூக்கமின்மை என்று இருந்தாலும் இதுவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. சுற்றுலா முடிந்தவுடன் அதன் களைப்பு தீர இரண்டு மூன்று நாட்கள் ஆனது.

திருப்பதி (14.04.2026)

          நாங்கள் திருச்சியிலிருந்து (திருவெறும்பூர்) 13.04.2026 அன்று இரவு 10 மணிக்குக் கிளம்பினோம். அடுத்த நாள் (14.04.2026) காலையில் திருப்பதி (ஆந்திர மாநிலம்) சென்று விட்டோம். எனக்கு மலைப் பகுதி ஏறுவது என்றால் வாந்தி வந்துவிடும். எனவே அதற்குரிய மாத்திரையைப் போட்டுக் கொண்டேன். திருப்பதி கீழிலிருந்து திருமலைக்குச் செல்ல அங்குள்ள பஸ்ஸில் ஏற்றிக் கூட்டிச் சென்றார்கள். மலை ஏறியதும் அங்கு காலை உணவாக தோசையும், கடலை சட்னி, பூண்டி சட்னியும் ரூபாய் 50 கொடுத்து வாங்கி சாப்பிட்டேன். இதுவரை கடலைச் சட்னி இந்தளவு சுவையாக சாப்பிட்டது கிடையாது. மிகவும் அருமையாக இருந்தது.

            சாப்பிட்டு முடிந்தவுடன் நாங்கள் அனைவரும் குளித்துவிட்டுச் சென்றோம். நாங்கள் சாமியைத் தரிசனம் செய்யும் முன்னரே பதிவு செய்யாததால் காலதாமதம் ஆனது. காலை 11 மணிக்குச் சென்று இரவு 1.30 மணிக்குத் தான் சுவாமியைத் தரிசனம் செய்தோம். சுமார் 13 மணி நேரம் அறையில் வைத்து மதிய உணவு. மாலை பால், பிஸ்கட், இரவு ரவை உப்புமா என்று இலவசமாக உணவு கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டும், உறங்கி கொண்டும், பேசி கொண்டும் பொழுதைப் போக்கினோம். இதுவும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

            இதற்கு முன் திருப்பதிக்கு எங்கள் மகளின் திருமணத்திற்கு முன் 2016 – ஆம் ஆண்டு எங்கள் குடும்பத்துடன் சென்றோம். அப்பொழுது 7 மணிநேரம் தான் காத்திருந்து சாமியைத் தரிசனம் செய்தோம்.

         15.04.2026 அன்று விடியற் காலை 5 மணிக்குத் திருப்பதி மலையிலிருந்து பஸ் பயணமாக கீழே இறங்கினோம். அப்பொழுதும் நான் வாந்தி வராமல் இருப்பதற்கு மாத்திரை எடுத்துக் கொண்டேன். ஆனால் பஸ்ஸில் ஏறி அமர்ந்தவுடன் உறங்கி விட்டேன். பஸ் கீழே வந்தவுடன் நான் கண் விழித்தேன். திருப்பதி மலைக்கு ஏறும் போதும் இறங்கும் போதும் அதன் மலையின் இயற்கை அழகை இரசிக்க முடியவில்லை.

அலமேலுமங்காபுரம் (பத்மாவதி தாயார் கோயில்)

  திருப்பதிக்கு அருகில் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள (15.04.2026) அலமேலுமங்காபுரத்திற்கு காலை 8 மணிக்குச் சென்றோம். அங்கு பத்மாவதி தாயார் கோயிலில் தரிசனம் செய்தோம். பிரசாதமாக தயிர் சாதம் கொடுத்தார்கள்.

காளஹஸ்தி கோயில் (தென் கைலாயம்)

          அலமேலுமங்காபுரத்திலிருந்து காளகஸ்தி கோயிலுக்கு வந்தோம். அங்கு குளித்துவிட்டுக் கோயிலுக்குச் சென்றோம். கோயில் மிகவும் பெரியதாக இருந்தது. கோயிலில் பகல் 12 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை அன்னதானம் நடைபெறும்  என்று சொன்னார்கள். நாங்களும் வெயில் காரணமாக வெளியில் ரொம்ப நேரம் நடக்க முடியவில்லை. அதனால் அங்கே அன்னதானத்தில் மதிய உணவை சாப்பிட்டு முடித்து விட்டோம்.

          ஆந்திரப் பிரதேசத்தில் பொன்முகலி ஆற்றங்கரையில் பஞ்சபூத தலங்களில் வாயுவை பிரதிபலிக்கும் மிக முக்கியமான சிவ தலமாகும். இக்கோயில் ராகுகேது தோஷ நிவர்த்திக்கும், பாதாள விநாயகர் சந்நிதிக்கும், கண்ணப்பர் மலைக்கும் புகழ் பெற்றதாகும். 2000 ஆண்டுக்கும் மேலான பழமையான கோயிலாகும்.

திருத்தணி (சுப்பிரமணிய சுவாமி கோயில்)

                                   

            அறுபடை விடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. தமிழ்நாட்டில் திருவள்ளுவர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 365 படிகளைக் கொண்டது. இந்த மலைக்கோயில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடிய திருத்தலமாகும். நாங்கள் நடந்து சென்றோம். மிகவும் அருமையான அமைதியான கோயிலாக இருந்தது. குரங்குகள் அதிகமாக இருந்தது.

காஞ்சிபுரம்

            அடுத்ததாகக் காஞ்சிபுரம் மாலை 6 மணிக்கு வந்துவிட்டோம். அங்கு ஒவ்வொரு ஆட்டோவிலும் 8 பேர் என்று பிரிந்து சென்றோம். காமாட்சி கோயில், ஏகாம்பரநாதர் கோயில், சித்ரகுப்த கோயில், என்று நான்கு கோயில் மட்டும் தான் பார்த்தோம்.

காமாட்சி கோயில்

·         காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களையும் மையமாகக் கொண்ட ஒரே சக்தி ஆலயம் காமாட்சி அம்மன் கோயில் ஆகும்.

·         கோயிலின் உள்ளே பிரகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 

·         இக் கோயிலின் கருவறையில் காமாட்சியின் உருவம் அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ளது. காமாட்சி அம்பாள் இங்கே நான்கு கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறாள். முன் இருகைகளில் கரும்பு வில்லினையும், மலர்க் கணைகளையும், மேல் இருகைகளில் பாசம் மற்றும் அங்குசத்தை ஏந்தி இருக்கிறாள்.


ஏகாம்பரநாதர் கோயில்

காஞ்சிபுரம் கோயில் நகரம் என அழைக்கப்படும் மிக முக்கியமான இந்து சமய புனிதத் தலமாகும். ஏகாம்பரநாதர், காமாட்சி அம்மன், வரதராஜப் பெருமாள் ஆகிய முப்பெரும் கோயில்கள் இங்கு பிரபலம். பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைகுண்ட பெருமாள் கோயில் ஆகியவை வரலாற்றுச் சிறப்புமிக்கவை.

சித்ர குப்த கோயில்

இக்கோயில் இந்து மதக் கடவுள் சித்திரகுப்தரின் அரிய கோயிலாக விளங்குகிறது. இது ஒரு அரிதான கோயிலாகும். ஏனெனில் உலகில் காஞ்சிபுரத்தில் மட்டுமே சித்ரகுப்தனுக்கு ஆலயம் அமைந்துள்ளது. சித்திரை மாதத்தில் சித்ரகுப்தனுக்கு திருவிழா நடைபெறுகிறது.




உலகளந்த பெருமாள் கோயில்

          உலகளந்த பெருமாளின் வடிவமாக திருவுருவம் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற இத்தலம் விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. ஒரு அந்தணச் சிறுவனாக அவதரித்த விஷ்ணு மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானம் கேட்க, அதற்கு மன்னனும் தர இசைகிறான். நெடிய தோற்றம் கொண்டு விண்ணையும் மண்ணையும் இரு அடிகளால் அளந்துவிடுகிறார் மூன்றாம் அடி வைக்க இடமில்லாததால் அதனை மன்னனின் தலையில் வைக்கிறார். உலகளந்த வடிவத்தைக் காண இயலாமல் மன்னன் பாதாளத்தில் தள்ளப்படுகிறான். மன்ன்னின் வேண்டுதலுக்கு இணங்க விஷ்ணு வெவ்வேறு நிலைகளில் காட்சியளிப்பதே ஊரகம், காரகம், நீரகம் பாடகம் என வழங்கப்படுகிறது.

நிறைவாக,

          15.04.2026 அன்று இரவு காஞ்சிபுரத்தில் கோயில் சென்று முடித்தவுடன் புடவை கடைக்குச் சென்றோம். நான் ஒரு ஐந்து புடவைகள் எடுத்தேன். மிகவும் நன்றாக இருந்தது. அன்று விடியற்காலை 3 மணிக்கு திருச்சி வந்தடைந்தோம். எங்களை திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் இறக்கி விட்டார்கள். இரண்டு நாட்களும் மிகவும் மகிழ்ச்சியாகவும், புதிய அனுபவமாகவும் இருந்தது.  இந்தத் திருப்பதி இரண்டுநாள் சுற்றலாவை திருநெடுங்களநாதர் டிராவல்ஸ் மூலம் சென்றோம். அவர்கள் மிகவும் பாதுகாப்பாகவும், பொறுப்புணர்வோடும் அழைத்துச் சென்றார்கள். பெரியவர்கள் முதல் சின்ன குழந்தைகள் வரை 45 பேர் கொண்ட இச்சுற்றுலா மிக நன்றாக இருந்தது.     

      


 




 

 

 

         



Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...