Skip to main content

சின்சினாட்டியில் – நான் வியந்த அனுபவங்களாக...

 

சின்சினாட்டி – நான் வியந்த அனுபவங்களாக...


        சின்சினாட்டிக்கு (US) என்னுடைய மருமகன் software கம்பெனியிலும், என் புதல்வி Architecture பணியிலும் இருப்பதால் நான் மே மாதம் விடுமுறையில் வந்துள்ளேன். ஏப்ரல் 23.04.2025 புதன் கிழமை இரவு 1.00 மணி அளவில் வந்தடைந்தேன். அன்றிலிருந்து இன்று (01.05.2025) வரை நான் அறிந்து கொண்ட அனுபவங்களாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் பகிர்ந்து கொள்வது என்னுடைய பயண அனுபவங்களை நான் பதிவு  செய்து  கொள்ளும் வகையில் படைத்துள்ளேன்.

சின்சினாட்டியில் உள்ள நல்ல பழக்கங்களைக் கண்டு வியந்துப் பார்க்கின்றேன். அரசாங்கத்தின் விதிகளை  மக்கள் சிறப்பாகக் கடைப்பிடிக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு வியப்பாக இருக்கிறது.




·         இங்குள்ள அரசாங்கம் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்பாக வைத்து நன்கு சிறப்பாகப் பராமரிக்கிறார்கள்.

·   ஒரு மரத்தை வெட்டுவது என்றாலும் அனுமதி வாங்கி பின் தான் வெட்டுகிறார்கள்.

·         குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை யாரையும் சார்ந்து வாழாமல் தன் வேலையைத் தானே செய்து கொள்கிறார்கள். என் பெயர்த்தியும் ஆடை உடுத்திக் கொள்வது, சாப்பிடுவது, பிற வேலைகள் செய்வது என்று தானே செய்து கொள்கிறது. அதற்கு வேலை கடினமானதாக இருந்தால் அடுத்தவர்களிடம் உதவி கேட்கும்.

·         நான் காலனியில் வாக்கிங் சென்று வரும் போது எதிரில் யார் வந்தாலும் மொழி தெரியாமல் இருந்தாலும் ஒரு புன்னகை, ஹாய் என்று சொல்லி கொண்டு கடந்து செல்கிறார்கள். யார் வாக்கிங் சென்றாலும் காரில் செல்வோர் நமக்காகப் பொறுமையாகக் காத்திருந்து நாம் சென்றவுடன் செல்கிறார்கள். வாக்கிங் செல்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

            நாங்கள் காய் கனிகள் வாங்க குடியிருக்கும் காலனியின் பக்கத்தில் kroger என்னும் வணிக வளாகத்திற்குச் சென்றோம். அங்கு அனைத்துப் பொருள்களும் கிடைக்கின்றன. நாம் எடுத்துச் செல்லும் தள்ளு வண்டியில் நான்கு புறமும் scan வைத்துள்ளார்கள். நாம் எடுக்கும் பொருள்களை நாமே scan செய்து எடை மற்றும் பில் போட்டு நம் card மூலம் பணம் செலுத்திக் கொள்ளலாம். எனவே பில் போடுவதற்கு வரிசையில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு மிகவும் வியப்பானதாக இருந்தது.


·         மழை அதிகமாக பெய்தாலும் சாலைகளில் நீர் தேங்கி நிற்பதில்லை.

·         என் புதல்வி குடியிருக்கும் காலனியில் நன்கு பராமரிப்பு செய்கிறார்கள். புல் முதலியவற்றை ஒழுங்குப் படுத்துதல், மரங்களை பராமரித்தல், குப்பைகளை அகற்றுதல் என்று அனைத்து பராமரிப்புகளும் சிறப்பாக செய்கிறார்கள்.

·         பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் ஜிம், ஸிவிம்மிங், என்று அனைத்து நிலைகளையும் வளர்த்து அவர்கள் குறிப்பிட்ட வயதிற்கு மேல் பெற்றோர்களைச் சார்ந்து வாழாமல் அவர்கள் சுயமாகப் பொருளீட்டி வாழ வகை செய்கிறார்கள்.

·         அவர்களுக்கு  கல்வி கட்டணம் இல்லை. முதியோர்களுக்கும் பாதுகாப்பு எனவே பொருள் சேர்த்து வைக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் இல்லை. நாம் தான் பிள்ளைகளை கடைசி வரை வைத்து கொண்டு ஊதாரித்தனமாக வளர நாமே காரணமாக இருக்கிறோம்.

நான் இந்த ஒரு வாரத்தில் கேட்டு, பார்த்து கொண்ட அனுபவங்களைத்தான் உங்களிடம் பகிர்ந்துள்ளேன்.

நிறைவாக,

     ஒரு நாடு சிறப்பாக செயல்பட, முன்னேற்றம் அடைய அரசாங்கம் விதிக்கும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நாட்டில் தவறுகள் நடக்காமல் இருக்க தண்டனைகள் கடுமையானதாக இருக்க வேண்டும். தனி மனிதன், குடும்பம், என்று அவரவர் தங்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டால் சமுதாயம் நன்றாக இருக்கும். நாடு சிறப்படையும். எனவே நாட்டின் முன்னேற்றம் தனிமனிதர் கையில்.

Comments

Post a Comment

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...