சின்சினாட்டி – நான் வியந்த அனுபவங்களாக...
சின்சினாட்டிக்கு (US) என்னுடைய மருமகன் software கம்பெனியிலும், என் புதல்வி Architecture பணியிலும் இருப்பதால் நான் மே மாதம் விடுமுறையில் வந்துள்ளேன். ஏப்ரல் 23.04.2025 புதன் கிழமை இரவு 1.00 மணி அளவில் வந்தடைந்தேன். அன்றிலிருந்து இன்று (01.05.2025) வரை நான் அறிந்து கொண்ட அனுபவங்களாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் பகிர்ந்து கொள்வது என்னுடைய பயண அனுபவங்களை நான் பதிவு செய்து கொள்ளும் வகையில் படைத்துள்ளேன்.
சின்சினாட்டியில் உள்ள நல்ல பழக்கங்களைக் கண்டு வியந்துப் பார்க்கின்றேன். அரசாங்கத்தின் விதிகளை மக்கள் சிறப்பாகக் கடைப்பிடிக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு வியப்பாக இருக்கிறது.
·
இங்குள்ள அரசாங்கம்
இயற்கையை அழிக்காமல் பாதுகாப்பாக வைத்து நன்கு சிறப்பாகப் பராமரிக்கிறார்கள்.
· ஒரு மரத்தை வெட்டுவது என்றாலும் அனுமதி வாங்கி பின் தான் வெட்டுகிறார்கள்.
·
குழந்தைகள்
முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை யாரையும் சார்ந்து வாழாமல் தன் வேலையைத் தானே செய்து
கொள்கிறார்கள். என் பெயர்த்தியும் ஆடை உடுத்திக் கொள்வது, சாப்பிடுவது, பிற வேலைகள்
செய்வது என்று தானே செய்து கொள்கிறது. அதற்கு வேலை கடினமானதாக இருந்தால் அடுத்தவர்களிடம் உதவி கேட்கும்.
·
நான் காலனியில்
வாக்கிங் சென்று வரும் போது எதிரில் யார் வந்தாலும் மொழி தெரியாமல் இருந்தாலும் ஒரு
புன்னகை, ஹாய் என்று சொல்லி கொண்டு கடந்து செல்கிறார்கள். யார் வாக்கிங் சென்றாலும்
காரில் செல்வோர் நமக்காகப் பொறுமையாகக் காத்திருந்து நாம் சென்றவுடன் செல்கிறார்கள்.
வாக்கிங் செல்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
நாங்கள் காய் கனிகள் வாங்க குடியிருக்கும் காலனியின் பக்கத்தில் kroger என்னும் வணிக வளாகத்திற்குச் சென்றோம். அங்கு அனைத்துப் பொருள்களும் கிடைக்கின்றன. நாம் எடுத்துச் செல்லும் தள்ளு வண்டியில் நான்கு புறமும் scan வைத்துள்ளார்கள். நாம் எடுக்கும் பொருள்களை நாமே scan செய்து எடை மற்றும் பில் போட்டு நம் card மூலம் பணம் செலுத்திக் கொள்ளலாம். எனவே பில் போடுவதற்கு வரிசையில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு மிகவும் வியப்பானதாக இருந்தது.
·
மழை அதிகமாக
பெய்தாலும் சாலைகளில் நீர் தேங்கி நிற்பதில்லை.
·
என் புதல்வி
குடியிருக்கும் காலனியில் நன்கு பராமரிப்பு செய்கிறார்கள். புல் முதலியவற்றை ஒழுங்குப்
படுத்துதல், மரங்களை பராமரித்தல், குப்பைகளை அகற்றுதல் என்று அனைத்து பராமரிப்புகளும்
சிறப்பாக செய்கிறார்கள்.
·
பெற்றோர்கள்
குழந்தைகளுக்கு சிறு வயது முதல் ஜிம், ஸிவிம்மிங், என்று அனைத்து நிலைகளையும் வளர்த்து
அவர்கள் குறிப்பிட்ட வயதிற்கு மேல் பெற்றோர்களைச் சார்ந்து வாழாமல் அவர்கள் சுயமாகப்
பொருளீட்டி வாழ வகை செய்கிறார்கள்.
·
அவர்களுக்கு
கல்வி கட்டணம் இல்லை. முதியோர்களுக்கும் பாதுகாப்பு
எனவே பொருள் சேர்த்து வைக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் இல்லை. நாம் தான் பிள்ளைகளை
கடைசி வரை வைத்து கொண்டு ஊதாரித்தனமாக வளர நாமே காரணமாக இருக்கிறோம்.
நான் இந்த ஒரு
வாரத்தில் கேட்டு, பார்த்து கொண்ட அனுபவங்களைத்தான் உங்களிடம் பகிர்ந்துள்ளேன்.
நிறைவாக,
ஒரு நாடு சிறப்பாக செயல்பட, முன்னேற்றம்
அடைய அரசாங்கம் விதிக்கும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நாட்டில் தவறுகள் நடக்காமல்
இருக்க தண்டனைகள் கடுமையானதாக இருக்க வேண்டும். தனி மனிதன், குடும்பம், என்று அவரவர்
தங்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டால் சமுதாயம் நன்றாக இருக்கும். நாடு சிறப்படையும்.
எனவே நாட்டின் முன்னேற்றம் தனிமனிதர் கையில்.
Excellent Mam👌👌
ReplyDelete