மயில் & கான மயில் இந்திய துணைக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பறவையினம் மயில். இவை இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆயினும் உலகில் பல நாடுகளிலும் இப்போது மயில் பரந்து விரிந்து காணப்படுகிறது. ஒரு காலத்தில் காடுகளில் மட்டுமே காணப்பட்டு வந்த மயில், தற்பொழுது கிராமங்களில் வீடுகளில் வளர்க்கப்படுகின்றது. பொதுவாக ஆண் மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால் பகுதியில் நீலமும் பச்சையும் கலந்த மிக நீண்ட கண் போன்ற சிறகுகளில் அமையப் பெற்றுக் காணப்படும். உடல் நீளத்தில் மூன்றில் இரண்டு பங்கு தோகையைக் கொண்டு இருக்கும். ஆண் மயில் வால் பகுதியில் மேலாகக் காணப்படும். நீண்ட வண்ண மயமான இறகுகளில் தொகுப்பு மயிற்பீலி, மயில் தோகை, மயிலிறகு என்ற வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பள்ளி பருவ மாணவர்களை இது மிகவும் கவர்ந்த ஒன்றாகும். இந்த அழகிய மயிலிறகு...
தமிழ் கற்பித்தலில் அவசியமும் தகவல் தொடர்பியலின் பன்முகபார்வையும் பண்டைக் காலத்தில் மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளாக உணவு , உடை , இருப்பிடம் என்ற மூன்றும் தேவைப்பட்டன . விஞ்ஞான உலகத்திலோ இம்மூன்றுடன் தொடர்பியல் சாதனமும் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது . தொடர்பியல் , உலகின் ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்தி , உலக நாடுகளை எல்லாம் ஒரு நாடு என்ற அளவில் சுருக்கி நெருங்க வைத்துள்ளது . மக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் பரிமாறிக் கொள்ள தொடர்பியல் கருவிகள் பயன்படுகிறது . ” காசிநகர்ப் புலவர் பேசுமுறைதான் காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவி செய்வோம் ” என்றார் பாரதியார் . ஆனால் , தீர்க்கதரிசியான அவர் நினைத்ததைவிட இன்று தொடர்பியல் பன்மடங்கு வளர்ச்சிப் பெற்றுள்ளது . தகவல் தொடர்பு ஒருவர் மற்றவரோடு பல்வேறு ...