மேட்டூர் அணை சென்ற அனுபவங்கள்! 22.02.2026 ந் தேதியன்று ஞாயிற்றுக் கிழமை ஈரோடு அருகில் அந்தியூரில் என் தோழி தேவியின் (தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இலக்கியத்துறையில் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்) மகளுக்கு ஆரா மஹாலில் திருமணம் நடைபெற்றது. நானும் என் தோழி நா. பிரியா (திருச்சி, தந்தைப் பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்) அவர்களும், அவர்களின் கணவரும் சேர்ந்து ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4.30 மணிக்குத் திருச்சியிலிருந்து கிளம்பினோம். காலை 8 மணிக்குத் திருமணம் நடைபெறும் அந்தியூருக்குச் சென்றோம். திருமணம் முடிந்தவுடன் காலை டிபன் சாப்பிட்டுவிட்டு நாங்கள் மேட்டூர் அணைக்குச் சென்றோம். அந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பல ஊர்களை விழுங்கிய அணை சேலம் மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியில் மைசூர் மாநிலத்தின் எல்லையிலிருந்த சாம்பள்ளி என்ற ஊருக்கு அருகில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைதான் மேட்டூர் ஸ்டேன்லி நீர்த்தேக்கம். காவிரிபுரம் என்ற ஊர்தான் அணைக்குள் மூழ்கியிருக...
மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...