Skip to main content

எழுதுகோல் கனவுகள் (புத்தக மதிப்புரை)

  எழுதுகோல் கனவுகள் ( புத்தக மதிப்புரை )         புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் .  இப்புத்தகத்தைத் திருச்சி , இராஜா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 170, விலை 130 ரூபாய் .          கவிஞர் மலர் மன்னன்   அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற இந்த கவிதைப் புத்தகம் மூன்றாவது படைப்பாகும் . பல பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதியுள்ளார் . கவிதை எழுத புலவர் பட்டம் தேவையில்லை என்பதை பட்டுக் கோட்டையார் , கவியரசு கண்ணதாசன் , கவிஞர் வாலி , போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு காட்டுகின்றது . கவிதை எழுத தேவை சிந்தனை , பயிற்சி , முயற்சி என்று தெரிந்து கொண்டேன் என்று நூலாசிரியர் தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் .         இந்நூலுக்குக் கவிஞர் மணமேடு குருநாதன் அய்யர் அவர்கள் இந்நூலைப் பாராட்டி அன்பான அணிந்துரை வழங்கியுள்ளார் . முசிறி , தலைமையாசிரியர் ( ஓய்வு ) பெ . முத்துகிருஷ்ணன் அவர்...

அமெரிக்கா (கொலம்பஸ்) சென்ற அனுபவங்கள்

 

அமெரிக்கா (கொலம்பஸ்) சென்ற அனுபவங்கள்

             இந்த ஆண்டும் ஏப்ரல், மே மாத விடுமுறையில் என் மகள் குடும்பம் அமெரிக்காவில் கொலம்பஸில் இருப்பதால் அவர்களைக் காண ஏப்ரல் 29 ந்தேதி செல்ல திட்டமிட்டேன்.  இந்த முறையும் அமெரிக்கா (கொலம்பஸ்) சென்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். நான் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா (சின்சினாட்டி) போன்ற  அயல்நாட்டுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளேன். விமானத்தில் பயணிக்கும் அனுபவம் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய  அனுபவமாக இருந்தது. இந்த முறை   Doha Hamad international என்னும் விமானத்தில் பயணம் செய்தேன்.


சென்னை விமான நிலையம் (மீனம்பாக்கம்)





திருச்சி- சென்னை - கத்தார்

            திருச்சியிலிருந்து செவ்வாய் கிழமை (28.04.2025) அன்று மாலை 5.00 மணிக்குக் கிளம்பினேன். இரவு 12.00 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தேன். நம் சென்னை விமானநிலையத்தில் ஒன்றும் பிரச்சனையில்லை. இரவு மணிக்கு 1.00 மணிக்கு check – in சென்றேன். இந்த முறை ஒவ்வொரு டிராலியிலும் 2 கிலோ 1 கிலோ என்று அதிகமாக இருந்தது. அவசர அவசரமாக இட்லி பொடி, மிளகாய் பொடி என்று 5 கிலோ வை எடுத்து எனது தம்பியிடம் கொடுத்து அனுப்பிவிட்டு எல்லா check in முடிந்து 3 மணிக்கு விமானத்திற்காக காத்திருந்தேன். இந்த முறை check பண்ணும்போது என்னுடைய mobile charge தொலைந்து விட்டது. ஏர்போட்டில் 1,400 ரூபாய் கொடுத்து Mobile charger வாங்கினேன். இந்த முறை எனக்கு எந்த பயமும் இல்லை. ஏற்கனவே போன வருடம் போன அனுபவம் இருந்ததால் எந்த வித பயமும் இல்லை. 3.30 மணியளவில் விமானத்தில் அமர்ந்து கொண்டேன். பிறகு விமான பணிப்பெண் உணவு கொடுத்தார்கள். இந்த முறை வெஜிடேரியன் உணவை தேர்வு செய்தேன். நன்றாக தான் இருந்தது.

கத்தார் -  MIAMI INTL (மெயாமி)

            கத்தார் விமானநிலையத்தில் காலை 7.00 மணியளவில் இறங்கினேன். எனக்கு வீல்சேர் என்று போட்டு இருந்ததால் அதற்கென தனி வரிசையில் நாங்கள் வந்தோம். கத்தார் விமான நிலையத்தில் அனைத்து அதிகாரிகளும் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் எந்த நாட்டிற்கு செல்கிறோம் என்பதைப் பார்த்து அதற்கு தகுந்தாற் போல ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார்கள். நல்ல அனுபவமாக இருந்தது. அதிக வயதானவர்கள் வீல் சேர் என்று போட்டு வந்தார்கள். நானும் அதில் ஒருத்தியாக இருந்தேன். வீல் சேர் என்று போடுவதற்குக் காரணம், ஒன்று மொழிப் பிரச்சனை, மற்றொன்று விமான நிலையத்தில் ஒரு விமானத்தில் இறங்கி மற்றொரு விமானத்தை அடைய குறிப்பிட்ட நேரத்திற்குள் நம்மால் அவ்வளவு தூரம் மொழி தெரியாத காரணத்தினால் நடந்து செல்வது என்பது இயலாத காரியம். அதனால் நானும் என் மகளிடம் வீல்சேரில் போடச் சொன்னேன்.

            MIAMI செல்லும் விமானத்தில் ஏற்றி விட்டார்கள். அரை மணி நேரம் கால தாமதம் என்று சொன்னார்கள். எனக்குத் தெரியவில்லை. கத்தார் - MIAMI விமான பயணம் 16 மணி நேரம் என்று சொன்னார்கள். விமானத்தில் செல்லும் போது எந்த வித பிரச்சனையும் இல்லை. தமிழ் சினிமா  பார்த்தேன். தொலைக்காட்சியில் விமானம் செல்லும் மேப்பைப் பார்த்துக் கொண்டேன். பின் கொஞ்சம் நடந்தேன். தூங்கினேன். குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை உணவு வழங்கினார்கள். விமானப் பணிப்பெண்கள் நன்கு கவனித்துக் கொண்டார்கள். இந்தியா நேரம், அமெரிக்க நேரம் என்று அந்தப் பிரச்சனை. எனக்கு அதனால் நேரமும் கணிக்க முடியவில்லை. பணிப்பெண்களிடம் டீ, பழச்சாறு என்று எதைக் கேட்டாலும் கொடுத்தார்கள். எந்தவொரு தொந்தரவும் இல்லை. குழந்தைகளின் அழுகுரல் சிறு சிறு உரையாடல் என்று இருந்ததே தவிர சிரிப்பு, நட்புடன் பேசுதல், நீண்ட உரையாடல் என்று எதுவும் இல்லை. எனக்கு மொழிப் பிரச்சனை. மற்றவர்கள் ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள். அவர்களும் அதிகம் உரையாடிக் கொள்ள வில்லை. புன்னகை ஒன்றே அதிகம் பரிமாறப்பட்டது.

இந்த முறை விமானம் செல்லும் மேப் பார்த்து கொண்டிருந்ததால் தரை இறங்குவதற்கு முன் Wash Room சென்று தயாராக இருந்தேன். ஏனென்றால் ஏர்போர்ட்டில் எப்படி நேரம் இருக்கும் என்று தெரியாது. ஒரு விமானத்திலிருந்து இன்னொரு விமானத்திற்கு செல்லவே நேரம் சரியாக இருக்கும். எனவே நான் விமானத்திலேயே Wash Room சென்று விட்டு வருவேன். MIAMI ஏர்போர்ட்டுக்கு இங்கு உள்ள நேரப்படி 10 மணிக்கு என்று நினைக்கிறேன் வந்தடைந்தேன்.

MIAMI – கொலம்பஸ்

            இந்த முறை MIAMI வந்தடைந்ததும் இந்த விமான நிலையத்தில் வீல் சேர் என்பதால் எங்களை ஒவ்வொரு நாட்டிற்குச் செல்பவர்களையும் தனித்தனியே பிரித்து எங்களை எங்கள் விமானம் இருக்கும் இடத்திற்கு வந்து விட்டார்கள். இந்த விமானத்தில் ஏறியதும் தூங்கினேன். விமான பயணம் 3 மணி நேரம் இருக்கும் என்று நினைக்கிறேன். என் மகள் வீட்டிற்கு வரும்போது இரவு 1 மணி என்று நினைக்கிறேன்.

நிறைவாக,

            திருச்சியிலிருந்து 28 - ந் தேதி மாலை 5 மணிக்குக் கிளம்பி சென்னை இரவு 12.30 மணி சென்று, 1 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையம் – என்று 25 மணிநேரம் பயண அனுபவம் (30.04.2026 இரவு 1மணி) நன்றாகவும், பல மொழி பேசும் மக்களுடன் சந்திக்கும் வாய்ப்பும், பேசமுடியவில்லை என்றாலும் புன்னகை மூலம் அன்பை பகிர்ந்து கொண்ட அனுபவமும் புதிய அனுபவமாக உள்ளது. வீட்டிற்கு வந்தவுடன் என் மகள், பெயர்த்தி சாரா என்று பார்த்த பிறகு இவ்வளவு நேரம் பயணம் செய்த களைப்பு தெரியாமல் மகிழ்ச்சி ஆட்கொண்டது.

           

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...