என் எண்ணச் சிதறல்கள் ! (4) Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக் கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1. சாதனை! அனுபவங்களில் இருந்து பிறப்பவையல்ல! கற்பனைகளில் இருந்து பிறப்பவை! அனுபவத்திற்கு வயது தேவை! சாதனைக்கு வயது தேவையில்லை! 2. வலிகள்! நம் வாழ்வின் தொடர் கதைதான்! தொடர்கதையில் கிளைக்கதைப் போல் நமது மகிழ்ச்சியான தருணம்! வலிகள் நிறைந்த வாழ்வில் இளைப்பாறி ரசிப்பதற்கும் இனியவற்றை நுகர்வதற்கும் மடைமாற்றிக் கொண்டால் நம் வாழ்க்கை துயரங்களின் தொகுப்பாக இல்லாமல் ...
என் எண்ணச்
சிதறல்கள்! (4)
Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக் கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன். அந்தக் கவிதைகளை அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன்.
1.
சாதனை!
அனுபவங்களில் இருந்து
பிறப்பவையல்ல!
கற்பனைகளில் இருந்து
பிறப்பவை!
அனுபவத்திற்கு வயது
தேவை!
சாதனைக்கு வயது
தேவையில்லை!
2.
வலிகள்!
நம் வாழ்வின் தொடர் கதைதான்!
தொடர்கதையில் கிளைக்கதைப் போல்
நமது மகிழ்ச்சியான தருணம்!
வலிகள் நிறைந்த வாழ்வில்
இளைப்பாறி ரசிப்பதற்கும்
இனியவற்றை நுகர்வதற்கும்
மடைமாற்றிக் கொண்டால்
நம் வாழ்க்கை
துயரங்களின் தொகுப்பாக இல்லாமல்
இனிமையின் கையேடாக இருக்கும்!
3.
எளிமை!
ஆடம்பரத்தின்
ஆணவத்தின்
எதிர்ச்சொல் எளிமை!
4.
கல்வி!
நாம் பயிலும் கல்வி
நம் வாழ்வை செம்மைப்படுத்தி
வளம் பெருக வைக்கும்!
முதிர்ந்த வயதிலும்
கைத்தடியாகவும் ஊன்றுகோலாகவும்
துணையாய் நிற்கும்!5. புகழ்!
நீ தேடிச் செல்வதாக
இருக்கக் கூடாது!
உன்னைத் தேடி வருவதாக
இருக்க வேண்டும்!
6. நேர்மை!
உண்மையைக் காட்டிலும்
மேன்மையானது!
7. கோபம்!
கோபம்!
தோல்வி அடையும் போது
அன்பு வெற்றி அடைகிறது!
8. சிற்பம்!
கல்லிலிருந்து
தேவையற்ற பகுதிகளை
நீக்குவதில் வருவது
அழகிய சிற்பம்!
9. ஓவியம்!
வண்ணங்களைக் குழைத்துச்
சேர்ப்பதில் வருவது
அழகிய ஓவியம்!
10. சோம்பல்!
சோம்பல்
சுற்றி இருப்பவர்களையும்
பலவீனப்படுத்தும்!
11. விலைவாசி!
சுகவாசிகளுக்கு
விலைவாசியின் அருமை தெரிவதில்லை!
12. அனுபவ அறிவு!
இரவின் வெளிச்சம்
பகலில் தொலைந்து போகும்!
புத்தக வாசிப்பின் அறிவுமட்டும்
வாழும் வாழ்வுக்கு உதவாது!
அனுபவத்துடன் கொண்ட அறிவுதான்
வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவும்!
13. விழிப்புணர்வு!
விலை கொடுத்தாலும்
வாங்க முடியாதது
ஒன்று தன்னம்பிக்கை!
மற்றொன்று விழிப்புணர்வு!
14. மௌனம்!
சொற்களுக்கு ஆற்றல்
பயன்படுத்துவதில் இல்லை!
மௌனத்தில் இருக்கிறது
சொற்களுக்கு ஆற்றல்
பயன்படுத்துவதில் இல்லை!
மௌனத்தில் இருக்கிறது!
15. சொல்!
நாம் பேசும் சொற்கள்
கேட்கும் ஒருவரை
ரணப்படுத்தவும் செய்யும்
குணப்படுத்தவும் செய்யும்!
16. நட்பு!
முகமாக இருக்க வேண்டும்
முகமூடியாக இருக்கக் கூடாது!
17. மன உறுதி!
தூக்கி எறிந்த பொருளையும்
தூக்கிக் கொடுத்தப் பொருளையும்
திரும்பப் பெறக் கூடாது!
18. வாழ்க்கைப் பயணம்!
பொருள் குறைவாக இருக்கும் பொழுது
பயணம் சுகமாகிறது!
பொருள் அதிகம் கூடக் கூட
பயணம் சுமையாகிறது!
பொருளைப் பாதுகாக்கும் எண்ணத்தில்
நம் பயணத்தையே
தொலைத்து விடுகிறோம்!
19. கல்வி!
உண்பதாக இருக்க வேண்டும்
ஊட்டுவதாக இருக்கக் கூடாது!
20. அன்பு!
குழந்தைகளுக்கு
அளவுக்கு அதிகமாகத்
தண்டனைகள் மட்டுமல்ல
அதீத அன்பும்
மனதளவில் ஊனமாக்கிவிடும்!
21. சொற்கள்!
சொற்களுக்கு ஆற்றல்
பயன்படுத்துவதில் இல்லை!
மௌனத்தில் இருக்கிறது!
15. சொல்!
நாம் பேசும் சொற்கள்
கேட்கும் ஒருவரை
ரணப்படுத்தவும் செய்யும்
குணப்படுத்தவும் செய்யும்!
16. நட்பு!
முகமாக இருக்க வேண்டும்
முகமூடியாக இருக்கக் கூடாது!
17. மன உறுதி!
தூக்கி எறிந்த பொருளையும்
தூக்கிக் கொடுத்தப் பொருளையும்
திரும்பப் பெறக் கூடாது!
18. வாழ்க்கைப் பயணம்!
பொருள் குறைவாக இருக்கும் பொழுது
பயணம் சுகமாகிறது!
பொருள் அதிகம் கூடக் கூட
பயணம் சுமையாகிறது!
பொருளைப் பாதுகாக்கும் எண்ணத்தில்
நம் பயணத்தையே
தொலைத்து விடுகிறோம்!
19. கல்வி!
உண்பதாக இருக்க வேண்டும்
ஊட்டுவதாக இருக்கக் கூடாது!
20. அன்பு!
குழந்தைகளுக்கு
அளவுக்கு அதிகமாகத்
தண்டனைகள் மட்டுமல்ல
அதீத அன்பும்
மனதளவில் ஊனமாக்கிவிடும்!
21. சொற்கள்!
நாம் பேசும் சொற்கள்
கேட்பவரின் இதயத்திற்கு
விதையாக விழ வேண்டும்!
விடமாக இறங்கக் கூடாது
நாம் பேசும் சொற்கள்
கேட்பவரின் இதயத்திற்கு
விதையாக விழ வேண்டும்!
விடமாக இறங்கக் கூடாது!
22. பதற்றம்!
ஒழுங்கு முறையற்ற
வாழ்வை வாழ்பவர்கள்
செய்யும் செயலில்
பதற்றம் ஆட்கொள்ளும்!
பதற்றம்
மூளையின் செயலைப்
பாதியாகக் குறைக்கவல்லது!
23. ஆன்மீகம்!
சாமி கும்பிடுவதில் இல்லை!
எந்த உயிரையும்
துன்புறுத்தாமல் இருப்பதில் இருக்கிறது!
24. துணிவு!
நெருக்கடியான நேரத்தில்
எதிர் கொள்ளும்
துணிவைப் பொறுத்தும்
செயலைக் கொண்டும்
நம்மையடைய வெற்றி
தீர்மானம் கொள்ளும்!
25. கட்டுப்பாடு!
கட்டுப்பாடுகள்
தேவைக்கு அதிகம்
இருக்கும் இடத்தில்
தவறுகள் அதிகம்
தவழ்ந்து விளையாடும்!
26. இரவல்!
மகிழ்ச்சியை இரவல்
வாங்க இயலாது!
இரவல் வாங்கும் எதுவும்
மகிழ்ச்சியைத் தர இயலாது!
27. மேலான வாழ்வு!
நாம் பேசும் சொற்கள்
கேட்பவரின் இதயத்திற்கு
விதையாக விழ வேண்டும்!
விடமாக இறங்கக் கூடாது!
22. பதற்றம்!
ஒழுங்கு முறையற்ற
வாழ்வை வாழ்பவர்கள்
செய்யும் செயலில்
பதற்றம் ஆட்கொள்ளும்!
பதற்றம்
மூளையின் செயலைப்
பாதியாகக் குறைக்கவல்லது!
23. ஆன்மீகம்!
சாமி கும்பிடுவதில் இல்லை!
எந்த உயிரையும்
துன்புறுத்தாமல் இருப்பதில் இருக்கிறது!
24. துணிவு!
நெருக்கடியான நேரத்தில்
எதிர் கொள்ளும்
துணிவைப் பொறுத்தும்
செயலைக் கொண்டும்
நம்மையடைய வெற்றி
தீர்மானம் கொள்ளும்!
25. கட்டுப்பாடு!
கட்டுப்பாடுகள்
தேவைக்கு அதிகம்
இருக்கும் இடத்தில்
தவறுகள் அதிகம்
தவழ்ந்து விளையாடும்!
26. இரவல்!
மகிழ்ச்சியை இரவல்
வாங்க இயலாது!
இரவல் வாங்கும் எதுவும்
மகிழ்ச்சியைத் தர இயலாது!
27. மேலான வாழ்வு!
எத்தனைக் குறள் படித்தாய்
என்பது முக்கியம் அல்ல!
ஒரு குறளைக் கசடற கற்று
அதன் வழி நடந்தால்
அதுவே மேலான வாழ்வு
அதன் வழி நடந்தால்
அதுவே மேலான வாழ்வு
எத்தனைக் குறள் படித்தாய்
என்பது முக்கியம் அல்ல!
ஒரு குறளைக் கசடற கற்று
அதன் வழி நடந்தால்
அதுவே மேலான வாழ்வு!
28. அறிவு!
அறியாமை நீங்கினால் போதும்!
அன்பு!
வெறுப்பை நீக்கினால் போதும்!
Comments
Post a Comment