தமிழ் நாடகங்களில் மொழிநடை ஆய்வுச் சுருக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாடகங்கள் பெரும்பாலும் பாடலும் உரைநடையும் கலந்தே எழுதப்பெற்றுள்ளது . நாட்டார் நாடகங்கள் முதல் முதலில் தெருக்கூத்துக்கள் நடத்தப்பெற்றன . ஆகையினால் , அவை அவற்றிற்குத் தகுந்த முறையில் தாம் எழுதப்பெற்றன . பின்னர் அவை அரங்கத்தில் நடிக்கப் பெற்றன . மாற்றங்கள் அதிகமின்றிப் பாடல்களாகவே அவை அமைந்து இடையிடையே சிறிய சிறிய உரைநடைப் பகுதிக் காணப்பெறும் . மேலும் நாடகங்களில் மக்களின் வாய்மொழிகள் வடமொழிக் கலப்பு மிக மிக அதிகமாகிக் கொண்டிருந்தது . அந்நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலம் அதிகம் கலந்து விட்டது . மேலும் பக்கத்து மாநில மொழிகளான தெலுங்கு போன்றவை...
சதுரங்கக் காய்கள் ( கவிதைத் தொகுப்பு ) பாவலர் வையவன் நாம் புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் சதுரங்கக் காய்கள் என்ற தலைப்பில் பாவலர் வையவன் அவர்கள் எழுதிய புத்தகத்தைப் பார்ப்போம் . இப்புத்தகத்தை ஜுலை 2015 - ஆம் ஆண்டு திருவண்ணாமலை - சுபம் பிரிண்டர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 160 , விலை 125 ரூபாய். பாவலர் வையவன் அவர்கள் தமிழக எழுத்தாளர்களுள் ஒருவர். மேடைகளில் அரிமா வென முழங்கும் ஆற்றல் மிக்க பேச்சாளர். அவரது படைப்புக்களில் நாடு, மொழி, மக்கள், தன்மானம், கல்வி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாவல்கள், சிறுகதைகள், கவிதைத் தொகுப்புகள், ஆங்கில நூல்கள், கட்டுரை நூல்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டப் படைப்புக்களைப் படைத்தவர். சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும், மொழிப் பெயர்ப்பாளராகவும் விளங்கியவர் . தனது மகள் பெயரில் அமைந்த ‘தாரணி பதிப்பகம் ’ மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை வெளியிட்டு வருகிறார். படைப்பிலக்கியத்திற்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சதுரங்கக் காய்கள் எனும் தலைப்பில் அமைந்த இந...