திருப்பதி சென்ற அனுபவங்களாக … நான் மற்றும் என் மகளின் மாமியார் என்று 50 பேர் திருநெடுங்குளநாதர் டிராவல்ஸ் , திருச்சி – 15 மூலம் இரண்டு நாள் (14.04.2026, 15.04.2026) பயணமாக ( திருப்பதி , அலமேலுமங்கபுரம் , காளகஸ்தி , திருத்தணி , காஞ்சிபுரம் ) சுற்றுலா சென்றோம் . எங்கள் பெற்றோருடன் , பள்ளி , கல்லூரி என்று சுற்றுலா சென்றுள்ளேன் . நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் சுற்றுலா சென்றேன் . இதுவும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது . பஸ்ஸில் அதிக நேரம் அமர்ந்திருந்தது கால் வலி , உடல் வலி , தூக்கமின்மை என்று இருந்தாலும் இதுவும் மகிழ்ச்சியாகவே இருந்தது . சுற்றுலா முடிந்தவுடன் அதன் களைப்பு தீர இரண்டு மூன்று நாட்கள் ஆனது . திருப்பதி (14.04.2026) நாங்கள் திருச்சியிலிருந்து ( திருவெறும்பூர் ) 13.04.2026 அன்று இரவு 10 மணிக்குக் கிளம்பினோம் . அடுத்த நாள் (14.04.2026) காலையில் திருப்பதி ( ஆந்திர மாநிலம் ) சென்று விட்டோம் . எனக்கு மலைப் பகுதி ஏறுவது என்றால் வா...
ஓவியங்கள் ஓவியக்கலை ஒரு சிறந்த கலை. அதன் மூலம் மக்களுக்குப் பல உண்மைகளை உணர்ந்த முடியும். ஓவியங்களின் வாயிலாக மக்களிடம் ஒழுக்கத்தை வளர்க்க முடியும். சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் கல்வி பயிற்சியும் கொடுக்க முடியும். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர். ஆகையால் அவர்கள் ஓவியக் கலையை வளர்த்து வந்தனர். இன்றும் பல கோயில்களிலே மண்டங்களிலே பல ஓவியங்கள் தீட்டியிருப்பதைக் காண்கின்றோம். அவ்வோவியங்கள் பெரும்பாலும் புராண வரலாறுகளைக் குறிப்பனவாகவே யிருக்கின்றன. பண்டைக் காலத்திலும், மக்கள் கூடும் கோயில் மண்டபங்களிலே ஓவியங்கள் தீட்டி வைக்கும் வழக்கம் இருந்தது. அக்காலத்து ஓவியங்களிலே தெய்வங்களைப்பற்றிய வரலாறுகளை நினைவூட்டும் ஓவியங்களும் இருந்தன. மக்களுக்கு அறிவூட்டும் இயற்கை நிகழ்ச்சிகளைக் காட்டும் ஓவியங்களும் இருந்தன. நல்லொழுக்கத்தைப் போதிக்கும் கதைகளை விளக்கும் ஓவியங்களும் எழுதப்பட்டிருந்தன. இவ்வுண்மையைப் பரிபாடலிலே பார்க்கலாம். சூரியனுடன...