Skip to main content

திருப்பதி சென்ற அனுபவங்களாக…

  திருப்பதி சென்ற அனுபவங்களாக …               நான் மற்றும் என் மகளின் மாமியார் என்று 50 பேர் திருநெடுங்குளநாதர் டிராவல்ஸ் , திருச்சி – 15 மூலம் இரண்டு நாள் (14.04.2026, 15.04.2026) பயணமாக ( திருப்பதி , அலமேலுமங்கபுரம் , காளகஸ்தி , திருத்தணி , காஞ்சிபுரம் ) சுற்றுலா சென்றோம் . எங்கள் பெற்றோருடன் , பள்ளி , கல்லூரி என்று சுற்றுலா சென்றுள்ளேன் . நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் சுற்றுலா சென்றேன் . இதுவும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது . பஸ்ஸில் அதிக நேரம் அமர்ந்திருந்தது கால் வலி , உடல் வலி , தூக்கமின்மை என்று இருந்தாலும் இதுவும் மகிழ்ச்சியாகவே இருந்தது . சுற்றுலா முடிந்தவுடன் அதன் களைப்பு தீர இரண்டு மூன்று நாட்கள் ஆனது . திருப்பதி (14.04.2026)           நாங்கள் திருச்சியிலிருந்து ( திருவெறும்பூர் ) 13.04.2026 அன்று இரவு 10 மணிக்குக் கிளம்பினோம் . அடுத்த நாள் (14.04.2026) காலையில் திருப்பதி ( ஆந்திர மாநிலம் ) சென்று விட்டோம் . எனக்கு மலைப் பகுதி ஏறுவது என்றால் வா...

‘இளமையில் கல்’

 

‘இளமையில் கல்’

 

·        இளமை என்பது வளர்ந்து வரும் இளமைப் பருவமாகும். எனவே  இளமைப் பருவத்தில் அறிவு என்னும் செல்வத்தைத் தேடி பெறுதல் வேண்டும்.

·        பசுமையான காலத்தில் பார்வைக்கு அழகும் அதன் இயல்பும் நம் மனதில் மாறாமல் பதியும்.  அப்பொழுது உலகில் அறிய வேண்டியவற்றை அறிவதற்கு ஏற்ற மன இயல்பு இருக்கும்.

·        வீட்டுக் கவலை, பணப்பிரச்சனை என்று கவலை இல்லாது மாசற்று விளங்கும் பருவம். அக்காலத்தில் கற்க வேண்டியவற்றை தெரிந்து பதியச் செய்து கொள்வதால் அக்கல்வி, அதனால் வரும் நல்லொழுக்கம் நீங்காது முழுப் பயனையும் பெற முடியும்.

·        ‘இளமையில் கல்’ என்ற ஔவையார் கூறிய அறமொழி இளமைப் பருவத்தைக் கற்பதற்கே செலவிடு என்று அறிவுறுத்துகின்றது.

·        கல்விச் செல்வம், அறிவுச் செல்வம், அறச் செல்வம், பொருட்செல்வம் என்று எல்லாவற்றையும் இளமைப் பருவத்தில் பெறுதல் வேண்டும்.

 

”நரைவரு மென்றெண்ணி நல்லறிவாளர்

குழவியிடத்தே துறந்தார் – புரைதீரா

மன்னா விளமை மகிழ்ந்தாரே கோலூன்றி

யின்னாங் கெழுந்திருப்பார்” (நாலடியார் – 11)

 

        இளமை காலத்தில் தேட வேண்டியனவற்றை தேடி, கற்று உணர வேண்டியவற்றையும் அடைதல். முதிர்ந்த காலத்தில் ஆன்ற துணையாக இருக்கும். கோல் ஊன்றி நடக்கும் காலத்தில் அனுபவித்தல் என்பது இயலாது.

          இளமையில் கல்வி என்பது  இன்றியமையாதக் கடமையாகும்.

 

 

 

 

       

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...