அமெரிக்கா (சின்சினாட்டி) சென்ற பயணஅனுபவங்களாக ... நண்ப ர்களே! நீண்ட நாள் கழித்து அமெரிக்கா சென்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். நான் சிங்கப்பூர், மலேசியா போன்ற இரண்டு அயல்நாட்டுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளேன். விமானத்தில் பயணிக்கும் நேரம் 4 மணிநேரம் அல்லது 5 மணி நேரமாக இருக்கலாம். ஆனால் இந்த அனுபவம் எனக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. நான் Emirates என்னும் விமானத்தில் பயணம் செய்தேன். திருச்சி- சென்னை திருச்சியிலிருந்து செவ்வாய் கிழமை (23.04.2025) அன்று மாலை 5.00 மணிக்குக் கிளம்பினேன். இரவு 12.00 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தேன். நம் சென்னை விமானநிலையத்தில் ஒன்றும் பிரச்சனையில்லை. இரவு மணிக்கு 1.00 மணிக்கு check – in at முடிந்து 3 மணிக்கு விமானத்திற்காக காத்திருந்தோம். அங்கு அனைவரும் உதவியாக இருந்தார்கள். இந்த முறை தனியாக சென்றதால் எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. 3.30 மணியளவில் விமான...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!