Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

கோயில், அருங்காட்சியகம் (USA) சென்ற அனுபவங்களாக …

 

இந்து கோயில், அமெரிக்க விமானப்படையின் தேசிய அருங்காட்சியகம் சென்ற அனுபவங்களாக … 

         நானும் என் மகள் குடும்பமும் ஞாயிற்றுக் கிழமை (18.05.2025) அன்று காலை பத்து மணிக்கு மேல் சின்சினாட்டியிலிருந்து கிளம்பினோம். முதலில் Dayton உள்ள பெருமாள் கோயிலுக்கும், பின் மதியம் 2.00 மணிக்கு மேல் அமெரிக்க விமானப்படையின் தேசிய அருங்காட்சியகத்திற்கும் சென்றோம். அதன் சிறப்பினை உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

டேட்டன் இந்து கோயில் (DAYTON – Hindu Temple)

               டேட்டனில் (Dayton) இருக்கும் இந்துக் கோயிலுக்கு முற்பகல் 11.30 மணியளவில் சென்றோம். அங்கு கோவில் மிகவும் அழகாக அமைந்திருந்தது. ஒரு பெண் பரத நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தார். அதைக் கண்டு அங்கு வந்த அனைவரும் ரசித்தனர். பின்பு கோயிலில் நம் தமிழ்நாட்டை போல் பிரசாதம் அளித்தார்கள். அன்று மதிய உணவு அளித்தார்கள். சாப்பிட்டு விட்டு வந்தோம். கோவிலுக்குச் சென்றது மனதிற்கு இதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அந்த கோவிலில் நமது இந்தியாவை சேர்ந்த மக்களும். நமது தமிழ் நாட்டில் மதுரை, காரைக்குடியைச் சேர்ந்தவர்களையும் காண முடிந்தது. அக்கோவிலில் இருந்தபொழுது எனக்கு தமிழ்நாட்டு கோவிலுக்குள் இருந்தது போல் உணர்ந்தேன்.



                                              

                                          

கோயிலின் சிறப்புகள்

               இந்த கோவில் டேட்டனின் இந்து சமூக அமைப்பு 1977 – ஆம் ஆண்டு கோவில் கட்டும் முயற்சியைத் தொடங்கியது. 1985 – ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 2009 – ஆம் ஆண்டில் பூஜை மண்டபத்தை விரிவுபடுத்தி கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. இந்த மண்டபம் கொண்டாட்டங்கள், வகுப்புகள், கலச்சார நிகழ்வுகள் என்று பல்நோக்கு பகுதியாக செயல்படுகிறது. இக்கோயிலில் பகவான் சந்திரமௌலி, திரிபுர சுந்தரி, பூதேவி, லட்சுமி மற்றும் நவக்கிரகங்களின் சன்னதிகள் உள்ளன.

               கோயிலின் முக்கிய தெய்வம் வெங்கடேஸ்வரர், சிலை இமயமலையிலிருந்து வந்த கருப்பு கிரானைட்டால் இந்திய கைவினைஞர்களால் செதுக்கப்பட்டது. கிருஷ்ணா மற்றும் ராமர், விஷ்ணுவின் வடிவங்களும் அடங்கும்.  இந்தச் சிலைகள் பளிங்குக் கோட்டைகளால் ஆன சுவர்களில் வைக்கப்பட்டுள்ளன.

National Museum United States Air Force

(அமெரிக்க விமானப்படையின் தேசிய அருங்காட்சியகம்)

            அமெரிக்க விமானப்படையின் தேசிய அருங்காட்சியகத்திற்குச் சென்று அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்தோம். மிகவும் வியப்பாக இருந்தது. அனைத்து இடங்களிலும் தூய்மையாகவும், எந்த கட்டணமும் இல்லாமல் உள்ளே அனுப்பினார்கள். அந்த அருங்காட்சியகத்திற்கு உள்ளே செல்லும் போது தண்ணீர் மட்டும் தான் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. 3 வயது குழந்தைகளை அழைத்துச் செல்ல (Stroller) தள்ளுவண்டி, வயதான பெரியவர்களுக்கும், கால் வளி உள்ளவர்களுக்கும் தள்ளுவண்டி அங்கே உள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ளலாம். மிகவும் அமைதியாக எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அருங்காட்சியகத்தைப் பார்த்தோம். நாம் சிறுவயதில் இதுபோன்ற அருங்காட்சியகத்திற்குச் செல்லும் பொழுது அதனைச் சுற்றிப் பார்க்க மிகவும் சலிப்பாக இருக்கும். ஆனால் நாம் ஓரளவு அனுபவம் முதிர்ந்த வயதிற்கு மேல் அருங்காட்சியகத்தை வியப்பாகப் பார்ப்போம். நம் முன்னோர்களின் அனுபவங்களைக் கண்டு வியக்கிறோம். அந்த நிலையில் நான் வியந்து நோக்கினேன்.

                                             


                                            

அமெரிக்க விமானப்படையின் தேசிய அருங்காட்சியகத்தின் சிறப்புகள்

            அமெரிக்க விமானப்படையின் தேசிய அருங்காட்சியகம் என்பது ஒஹியோவின் (OHIO) டேட்டனுக்கு வடகிழக்கு பகுதியில் ரைட் பேட்டர்சன் விமானப்படை தளத்தில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படையின் அதிகாரப் பூர்வ அருங்காட்சியகமாகும். NMUSAF உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய இராணுவ விமான அருங்காட்சியகமாகும், இதில் 360 க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் தேசிய விமானப் போக்குவரத்து பாரம்பரியப் பகுதியின் மைய அங்கமாகும். இந்த அருங்காட்சியகம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது, இது ஓஹியோவில் அடிக்கடி பார்வையிடப்படும் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். அக்டோபர் 2004 இல், யுனைடெட் ஸ்டேட்ஸ் விமானப்படை அருங்காட்சியகம் என்ற பெயர் அமெரிக்க விமானப்படையின் தேசிய அருங்காட்சியகம் என மாற்றப்பட்டது.

           இந்த அருங்காட்சியகம் தற்போதைய 1,120,000 சதுர அடி  கண்காட்சி இடத்திற்கு விரிவுபடுத்தியது. நான்காவது கட்டிடத்தில் விண்வெளி காட்சியகம், ஜனாதிபதி விமான காட்சியகம் மற்றும் உலகளாவிய ரீச் காட்சியகம் ஆகியவை உள்ளன.

                                         

            LEED (Leadership in Energy and Environmental Design) (ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பில் தலைமைத்துவம்) என்பது ஒரு பசுமை கட்டிட சான்றிதழ் திட்டமாகும், இது சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட கட்டிடங்கள், வீடுகள் மற்றும் சமூகங்களை அங்கீகரிக்கிறது. இது பரவலாக அங்கீகரிக்கப்பட்டத் தரநிலையாகும். இந்தச் சிறப்புமிக்கச் சான்றிதழ் இந்த அருங்காட்சியகம் பெற்றிருந்தது மிகவும் பெருமைக்குரிய நிலையாகும்.

நிறைவாக,

            நாங்கள் அன்று பார்த்து ரசித்த கோவில், அருங்காட்சியகம் இரண்டு இடங்களும் மிகவும் சிறப்புக்குரியது.

          டேட்டன் இந்து கோவில், அருங்காட்சியகம் என்ற இரண்டு இடங்களும் இயற்கையோடு இயைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வோடு அமைந்துள்ளது. நாமும் இயற்கையைக் காப்போம்.

              

 

 

 

 

 

 






Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...