தஞ்சை சரசுவதிமகால் நூலகம் ‘ தஞ்சை மராட்டிய மன்னர்களின் நூலகப் பணிகள் ’ புதுகைப் பண்பலை 91.2 சமுதாய வானொலி (புத்தக மதிப்புரை) நிகழ்ச்சியில் உரையாற்றிய கட்டுரை இன்று நாம் புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சிக்காக , தஞ்சை சரசுவதி மகால் நூலகம் ‘ தஞ்சை மராட்டிய மன்னர்களின் நூலகப் பணிகள் ’ என்னும் தலைப்பில் முனைவர் ஆ . குணசேகரன் அவர்கள் எழுதிய புத்தகத்தைப் பார்ப்போம் . இப்புத்தகத்தைத் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளார்கள் . நூலாசிரியர் முனைவர் ஆ . குணசேகரன் அவர்கள் நூலகப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் . சென்னை மறைமலையடிகளார் நூலகத்தில் பல்லாண்டுகளாகப் பணியாற்றி பின்னர் , தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகத்தில் முதுமுனைவர் வ . அய் . சுப்பிரமணியம் நூலகத்தில் சிறப்புநிலை நூலகராக 21 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து சிறப்பான நூலகர் என்ற பெயர் பெற்றுள்ளவர் . இத்தகைய சிறப்புடைய நூலாசிரியர் ‘ தஞ்சை மராட்டிய மன்னர்களின் நூலகப் பணிகள் ’ என்னும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் . இதற்காக இவர் பலதரப்பட்ட தரவுகளை தேடித் ...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!