வால்பாறை சென்ற அனுபவங்களாக... நானும் எங்கள் சம்பந்தி குடும்பமும் மற்றும் எங்கள் அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் குடும்ப நண்பர்கள் என்று 17 பேர் வேனில் வால்பாறைக்கு இரண்டு நாள் சுற்றுலா பயணம் சென்றோம். இந்த அனுபவம் மிகவும் புதிய அனுபவமாக இருந்தது. உறவினர்களுடன் செல்வதை விட நண்பர்களுடன் செல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மிகவும் நிதானமாகவும், அவசரம் இல்லாமலும் இந்த சுற்றுலா அனுபவம் இருந்தது. வால்பாறை (வியாழன் – 13.11.2025) கோவை மாவட்டத்தில் பெருமைசேர்க்கும் முக்கிய இடங்களில் வால்பாறையும் சிறந்த இடமாகும். ஏழாவது சொர்க்கம் என்று மாவட்ட நிர்வாகத்தால் பெயர் சூட்டப்பட்ட வால்பாறையில் மரங்கள், இயற்கை வளங்கள், தேயிலை மற்றும் காபி தோட்டங்கள், அணைகள் என்று சுற்றுலா தலமாக உள்ளது. வால்பாறை என்ற இடம் இருப்பதை 1880 ஆம் ஆண்டில் காரல்மார்க்ஸ் என்ற ஆங்கிலேயரால் வெளி உலகுக்கு தெரிய வந்தது. 1920 – ஆண்டில் ஆதிவாச...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!