Skip to main content

Posts

Showing posts from May, 2023

இளமையில் கல் நில்லாது செல்! (புத்தக மதிப்புரை)

  இளமையில் கல் நில்லாது செல் ! ( புத்தக மதிப்புரை ) இன்று புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் குரும்பலூர் இராஜீ மோகன் அவர்கள் எழுதிய இளமையில் கல் நில்லாது செல் ! என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை நவம்பர் 2022 ஆம் ஆண்டு , சென்னை , ரத்னா ஆப்செட் பிரிண்டர்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 116, விலை 200 ரூபாய் . ஐயா இராஜீமோகன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் பிறந்தவர் .    அரசுப்பள்ளியில் 7 வது வரை படித்தவர் .   ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன்   குருகுலத்தில் உயர்க்கல்வியும் , அண்ணா பல்கலைக் கழகத்தில் எந்திரவியலில் பொறியியல் படிப்பையும் , நிர்வாக மேலாண்மை என்ற முதுநிலை படிப்பையும் பயின்றவர் . 37 வருடங்கள் என்எல்சி இந்திய நிறுவனத்தில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றியவர் . மாணவர்களின் ஆற்றலை நெறிப்படுத்தும்   இந்நூலுக்கு   பெருமை சேர்க்கும் வகையில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் மாண்பமை முனைவர் இராம . கதிரேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார் . நெய்வேலி சவகர் கல்லூரி முதல்வர் முனைவர் வெ . தி . சந்திரசேகரன் அவர்கள் அணி...

இலுப்பை

  இலுப்பை           ‘இலுப்பை’ மரத்தைச் சங்க காலத்தில் ‘இருப்பை’ என்றழைத்தனர். ஊர்ப்புறங்களில் எண்ணெய் எடுப்பதற்காகத் தோப்பாக வளர்க்கப்படுவதுண்டு. கோயில்களில் விளக்கெரிக்க இதன் எண்ணெய் பயன்படுகிறது. இயற்கையில் இலுப்பை மரம் தென்னிந்தியக் காடுகளில் காணப்படுகிறது. வடஇந்தியாவிலும் கேரளத்திலும் மரம் சிறிது வேறுபட்டது.           இலுப்பை மரங்களைச் சங்க நூல்களில்,           ”நீடுநிலை யரைய செங்குழை யிருப்பை” (அகம்.331)         ”குதிர்க்கா லிருப்பைக் குவிகுலைக் கழன்ற”    (அகம்.321)         ”கருங்கோட் டிருப்பை பூவுறைக் குந்து”    (புறம்,384)         ”கருங்கோட் டிருப்பை வெண்பூ முனையிற்” (அகம்,247) இலுப்பை மரம் உயரமாக வளரும் என்பதையே ‘நீடு நிலையரைய’ என்ற அகநானூறு குறிக்கின்றது. இலுப்பை மரத்தின் அடிமரம் பெருத்துக் காண்பதால் ...

கருவிளம், கூவிளம்

  கருவிளம் , கூவிளம்             கருவிளம் என்ற மரத்தைப் பற்றியும் கூவிளம் என்ற மரத்தைப் பற்றியும் சங்க நூல்களில் சில செய்திகளே வருகின்றன . விளாமரம் என்பதே சங்க நூல்களில் விளவு , விளம் என்றும் , வெள்ளில் என்றும் அழைக்கப்படுகின்றது . விளவிற்குப் பந்துபோல் உருண்ட பழம் உண்டு . விளவ மரத்தை எளிதில் கண்டுணர இதன் பழம் உதவுகிறது .           ” பொரியரை விளவின் புன்புற விளைபுழல்           அழலெறி கோடை தாக்கலிற் கோவலர்           குழலென நினையும் நீரில் நீளிடை ” ( அகம் , 219)           ” பார்பக வீழ்ந்த வேருடை விடுக்கோட்டு           உடும்படைந் தன்ன நெடும்பொரி விளவின்           ஆட்டொழி பந்திற் கோட்டுமூக் கிறுபு           கம்பலத் தன்ன பைம்பயிர்த் தாஅம்...

புறநானூற்றில் வான நூலறிவுச் சிந்தனைகள்

  புறநானூற்றில் வான நூலறிவுச் சிந்தனைகள்             புலவர்கள் வானநூலறிவிலும் சிறந்து விளங்கினார்கள். ”தமிழரின் வான நூலறிவு மிகவும் சிறப்புமிக்கது என சிலேட்டர் போன்ற அறிஞர்கள் பாராட்டியுள்ளனர்.” (சிராஜ் உன்னிசா நாசர், தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்.ப.17) என்னும் கூற்று இங்கு சிந்திக்கத்தக்கது.           இயற்கையில் தோன்றும் மாற்றங்களை நன்குணர்ந்து வானத்தை நோக்கிப் பார்த்து மழை பெய்யும் காலம் முதலியவற்றைக் கண்டறிந்தனர். நாட்களில் சில நல்ல நாட்களென்றும் சில கெட்ட நாட்களென்றும் அறிந்தனர். ஒவ்வொரு நாளிலும் விண்மீன்களும் கோள்களும் நிற்கும் நிலைக் கண்டு இதனைக் கணித்தனர்.           ”செஞ்ஞா யிற்றுச் செலவும்           அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்           பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்           வளி திரிதரு திசையும் ...

பாரதியார் படைப்புக்களில் - விதவை மறுமணம், பால்ய விவாகம்

  பாரதியார் படைப்புக்களில் - விதவை மறுமணம், பால்ய விவாகம்           பெண் தன் குழந்தைப் பருவத்தில் தந்தைக்கும் , திருமணமான நிலையில் கணவனுக்கும் , கணவன் இறந்துவிட்டால் மகன்களுக்கும் அடங்கி நடக்க வேண்டும் என்ற கருத்தில் பாரதிக்குச் சற்றும் உடன்பாடில்லை . பெண்கள் தாம் விரும்பிய ஆடவரைத் திருமணம் செய்து கொள்வதை ஆதரிக்கும் பாரதி திருமணத்திற்கப் பின் இந்திய நாட்டில் புழக்கத்தில் இருக்கும் சமுதாய நடவடிக்கைகளோடு உடன்பாடு கொள்ளாமல் ‘ ஸ்தீரி அடிமையில்லை . உயிர்த்துணை , வாழ்க்கைக்கு ஊன்று கோல் ஜீவனிலே ஒரு பகுதி ( பாரதியார் கட்டுரைகள் ) என்று கூறுவதோடு மட்டும் நின்றுவிடாமல் இண்டும் பரிபூர்ணமான சமானம் . பெண்ணை அணுவளவு உயர்வாகக் கூறுதல் பொருந்தும் ( பாரதியார் கட்டுரைகள் ப .102) என்றும் விவாதிக்கிறார் . பாரதியின் இந்த விவாதங்களை அவ்வளவு எளிதில் புறந்தள்ள முடியாது . ஆணும் பெண்ணும் சமம் . அதுமட்டுமல்ல ஆணை விட அணுவளவு உயர்வானவள் பெண் என்றும் பார்ப்பது பாரதியின் பெண்ணுரிமைச் சிந்தனைக்கு வலுச் சேர்ப்பதாகும் . பாலிய விவாகமும் , முதியோர் மணமும்  ...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...