தமிழ் நாடகங்களில் மொழிநடை ஆய்வுச் சுருக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாடகங்கள் பெரும்பாலும் பாடலும் உரைநடையும் கலந்தே எழுதப்பெற்றுள்ளது . நாட்டார் நாடகங்கள் முதல் முதலில் தெருக்கூத்துக்கள் நடத்தப்பெற்றன . ஆகையினால் , அவை அவற்றிற்குத் தகுந்த முறையில் தாம் எழுதப்பெற்றன . பின்னர் அவை அரங்கத்தில் நடிக்கப் பெற்றன . மாற்றங்கள் அதிகமின்றிப் பாடல்களாகவே அவை அமைந்து இடையிடையே சிறிய சிறிய உரைநடைப் பகுதிக் காணப்பெறும் . மேலும் நாடகங்களில் மக்களின் வாய்மொழிகள் வடமொழிக் கலப்பு மிக மிக அதிகமாகிக் கொண்டிருந்தது . அந்நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலம் அதிகம் கலந்து விட்டது . மேலும் பக்கத்து மாநில மொழிகளான தெலுங்கு போன்றவை...
பாபா சாகேப் அம்பேத்கார் அவர்களின் பொன்மொழிகள் அணைகளை உருவாக்கியது முதல் இந்திய ரூபாயின் பிரச்சனைகளை ஆராய்ந்தது வரை அம்பேத்காருக்குப் பல முகங்கள் இருந்தாலும், தலித் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டவர். இந்தியாவில் நிலவி வந்த சாதீயக் கொடுமைகளுக்கு எதிராகப் தனது இறுதி மூச்சு வரைப் போராடியவர் புரட்சியாளர் பாபா சாகேப் அம்பேத்கர் ஆவார். அவர் சட்ட மாமேதை மட்டுமல்ல. அரசியல் வித்தகர், பொருளாதார மாமேதை, தத்துவ ஞானி, சட்ட வல்லுநர், தலைசிறந்த எழுத்தாளர், சமூக நீதிச் சிந்தனையாளர் மற்றும் புரட்சியாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட மாமேதை எனலாம். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, குஜராத்தி, பிரெஞ்சு, பெர்ஷியன், ஜெர்மன், பாலி எனப் பல மொழிகளும் கற்றறிந்த வித்தகர். கல்வியே ஒருவருக்கு மதிப்பையும் வளத்தையும் அளிக்கும் என்று உறுதியாக அம்பேத்கர் கொண்ட எண்ணமே, ஒன்பது வெளிநாட்டு, பன்னிரண்டு இந்திய பட்டங்களை அவர் பெறக் காரணமாக இருந்தது. · ...