திருவையாறு சென்ற அனுபவங்கள் ( நூல் வெளியீட்டு விழா ) திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் , ஔவை அறக்கட்டளை நடத்திய உலகத் தாய்மொழி நாள் – 2026 (21.02.2026) நாளை முன்னிட்டு நடத்திய நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் என்னுடைய நூல் ‘ சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள் ’ எனும் தலைப்பில் வெளியானது . அந்த நாளில் நடந்த நினைவைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் . திருச்சியிலிருந்து நானும் , முசிறி , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற இணைப்பேராசிரியர் முனைவர் பாக்கியரதி அவர்கள் , மற்றும் அவர்களின் மூத்தச் சகோதரி அவர்களும் திருவையாறு (21.02.2026) சனிக்கிழமை சென்றோம் . நூல் வெளியீட்டு விழா காலை 11.00 மணிக்கு என்பதால் நாங்கள் செல்லும் வழியில் உள்ள கோயில்களுக்குச் சென்று பார்த்து விட்டு சென்றோம் . திருமழப்பாடி தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் , கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருமழப்பாடி வைத்தி...
‘கவிஞாயிறு தாரா பாரதி’ அவர்களின் பிறந்த தினம் (26.02.2025) இன்று அவரைப் பற்றி பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். கவிஞர் தாரா பாரதி பிறந்த ஊர் மற்றும் பெற்றோர்கள் கவிஞர் தாராபாரதி அவர்கள் 1947- ஆம் ஆண்டு , பிப்ரவரி மாதம் 26- ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குவளை என்ற சிற்றூரில் பிறந்தார் . பெற்றோர் - துரைசாமி - புஷ்பம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கவிஞர் தாரா பாரதியின் இளமைப் பருவம் மற்றும் பள்ளிப்படிப்பு · தொடக்கக் கல்வியை குவளையில் பயின்றார் , உயர் கல்வியை கீழ்க்கொடுங்காலூரில் நிறைவு செய்தார். · இளங்கலை வரலாறு , முதுகலையில் தமிழிலும் பட்டம் பெற்றார். · ஆசிரியர் பயிற்சியினை ராணிப்பேட்டைய...