Skip to main content

காப்பியங்களில் நீர் விழா

 

காப்பியங்களில் நீர் விழா

 

        நீராடல்அல்லது புனலாடல்என்ற செயல் தமிழரின் தொன்று தொட்டு வந்த நம்பிக்கையாக அமைகிறது. தமிழர் ஆறு, குளம், கடல், கழிமுகம், போன்ற நீர் நிலைகளைத் தெய்வமாக வழிபட்டனர்.தங்களது வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கும், நீரை வாழ்த்தி வழிபடுவதும், வரம் வேண்டுவதும், வளமை வேண்டிச் செய்யப்பட்ட ஒன்றாகவே காட்சி தருகின்றது. இவ்விழா இன்றைய ஆடிப்பெருக்கினை நினைவுப்படுத்தும்.

நீர் விழா

          புனல் நிழா, நீ நீர் விழா, முந்நீர் விழா, புதுப்புனல் விழா என பல பெயரில் நீர் விழா இடம் பெறுகிறது. இவ்விழாக்களின் முக்கியச் செயலாக நீராடல் அமைகிறது. இவ்விழாவைச் சமுதாய விழாவாகச் சுட்டவார். இன்றும் தமிழர் கடல், ஆறுகளில் நீராடி வருதலைப் புண்ணியச் செயலாக எண்ணும் நம்பிக்கையுடையவராயிருத்தலைக் காணலாம். இவ்வியற்கை வழிபாட்டை விரும்பி ஏற்றனர். சான்றாக, ‘அருந்ததிறற் கடவுள் அல்லல் பெருந்துறைக் கண்டு அவன் அணங்கியோனேஎனக் கூறப்படுதலால் அறியலாம்.

       கடல் தெய்வத்திற்கு விழா எடுத்தல் செய்தியைப் பாண்டியன் பண்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைமுந்நீர் விழவின் நெடியோன்என புறநானூற்றுப் பாடல் சுட்டுவதில் காணலாம். கொற்கைத் துறையிலே நெய்தல் நிலமகளிர் பணித்துறைக் கடவுளுக்கு முத்தும், வலம்புரிச் சங்கும் சொரிந்து வழிபாடு இயற்றியமையைப் பரிபாடல் விளக்குகிறது.

          ஆற்றில் புதுநீர் வருகையை வரவேற்கும் முகத்தால் மகிழ்ச்சியால் நீரை வழிபடுவது புதுப்புனலாடலின் நோக்கமாகும். காப்பியங்களில் புனலாடலின் பொழுது இறைவழிபாட்டையும், அறச்செயலையும் மேற்கொண்டனர். வேள்விகளிடம் பெற்றன. மன்னரும், மக்களும் ஒருங்கிணைந்து புனல் விழா நிகழும் இடத்தில் தங்கியிருந்து விழாச் செயல்களை நிறைவேற்றியமை தெரிகிறது.

          நீர் விழா ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்தது. அவ்வாறு நிகழாது, தடங்கல் ஏற்படுமாயின், அந்த ஊர் அழிந்து போகும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். சான்றாகச் சென்ற ஆண்டில் நீர் விழாவை இந்நகரத்தார் செய்யாமல் நிறுத்தி விட்டமை காரணமாக்க் கோபமுற்று, முன்பு நளகிரி என்னும் யானையை வெளிகொள்ளித்து ஊரை அழிக்கும் படி செய்த தெய்வம் யான், இப்பொழுதும் அவ்விழா நிகழாமல் போயின்,

          பிணக்குறை படுத்துப் பிளிறுபு சீறிய

         இன்றுஞ் சென்றியான் குஞ்சரம் புகுவலென்

எனப் பகீரதி எனும் பெண்மனி ஆவேச முற்றவள் போல் பொய் வேடம் பூண்டு கூறியதனால் அது கேட்ட மன்னவன் பிரச்சோதன்ன் நீர் விழாவை நடத்தும்படி கட்டளை இட்டதுடன், ‘நாளை நீராட்டல்என்ற முரசறைந்து ஊரெல்லாம் அறிவித்த செய்தி காட்டப்படுதலைக் கொண்டு அறியமுடிகிறது. எனவே நீரணி விழாவின் நோக்கம் பழந்தமிழர் கொண்டாடிய நிலையினின்றும், மாறுபட்டு விளங்கியமைப் புனலாகிறது. இந்திர விழாவை நிகழ்த்தியமையால் பூம்புகார் அழிந்து விட்டது என்னும் சிந்தனையும் இங்குத் தொடர்புப்படுத்தப்பட்டது.

நீர் விழாவிற்குத் தேவையான பொருள்கள்

        நீர் விழாவுக்குச் செல்லும் நகர மக்கள் பல பொருட்களை எடுத்துச் சென்றனர் என்பதை பெருங்கதைப் பாடலில்,

          தோனியு மரமுந்துறை நாவாயும்

         நீரியன் மாமுட நீந்தியற்புணையும்

         சுண்ணமுஞ் சூட்டுஞ் சுவை நறுஞ் தேறலும்

         செண்ணச் சிவிகையுந் தேரும் வையமும்

         கண்ணார் பிடிகையுங் கட்டமையூர்தியும்

         பன்னிரும்பிடியும்” (பெருங்.1:37:266-271)

நீர் விளையாட்டிற்கு வேண்டிய தோணியும், கட்டுமரமும், நீர்த்துறையிற்றங்கும் ஓடமும், நீரிலே இயங்கும் மாடங்களும் நீந்து மியல்பினையுடைய தெப்பமும், சுண்ணமும், மலர்ச்சூட்டும் சுவையுடைய நறிய கள் வகையும், ஒப்பனை செய்யப்பட்ட சிவிகையும், தேரும், வண்டியும் கண்ணுக்கு நிரம்பிய அழகுடைய பிடிகையும், ஆகிய இன்னோரன்ன கட்டுதல் அமைந்த ஊர்தி வகைகளும், ஒப்பனை செய்த கரிய பிடியானையும் என எடுத்துச் சென்றனர்.

          சேரிகளில் சங்கு, கொம்பு முதலியவைகள் முழங்கின. முரசுகள் அதிர்ந்தன. யாழும், சூழல்களும் இயம்பின. பல வகைக் கொடிகள் அசைந்தன. அவற்றின் இருகரையும் நிறைந்துள்ள பொழில்கள் முதலிய தோட்டங்களில் மரங்களின் அடிகள் தோறும் பல மாடங்களை அமைத்துப் பலவகைப்பட்ட நுகர் பொருட்களுடன் தனித்தனியே தங்கினர். பல பண்டங்கள் விற்கப்படும் கடைகள் அமையப்பெற்றன. விழாக்காலத்து மன்னர் தன் மெய்காப்பாளரையன்றி, மற்றவீரர் யாவரும் அந்த விழா நடைபெறும் இருபத்தியொரு நாட்களிலும் ஆயுதங்களைக் கைக்கொள்ள வேண்டாம் என ஆணைபிறப்பித்தச் செய்தியும் காணலாம்.

          மன்னன் தன் உரிமை மகளிரோடு நீர்த் துறைக்கு வந்த பின்னரே விழா துவங்கிய செய்தி இடம்பெறுகிறது. நீர் விழாவில் பொழுது போக்குச் செயலாக நீர் விளையாட்டு இடம்பெறும். எனவே, நீர் விளையாட்டுக் கருவிகளை யானைகள் மீது கொண்டு சென்றனர். இவ்வாறாக விழாவின் பொழுது பல நாட்கள் தங்கியிருத்தல் வேண்டி, தேவைக்குரியப் பொருட்களை உடன் கொண்டு சென்றனர்.

விழாச் செயல்

          நீராடுவதற்குச் சென்ற மக்கள் தங்கள் சுற்றாத்தாருடன் நீர் மாடங்களில் தங்கினர். கணி, நல்ல வேளை கணித்துக் கூறியதும் அரசன் முதலிலும், மக்கள் அவரைத் தொடர்ந்தும் நீராடச் சென்றனர். அரசன் இருபது யானைகள், எண்பது புரவிகள், ஐம்பது தேர்கள் நூறாயிரத்து ஒன்று கழஞ்சு மாசையும் (பொற்காசு) தானம் செய்தான். பெரியோர்களை வணங்கினான். காளிகோயிலுக்குப் பொற்பூ ஆயிரம் சேர்ப்பித்தான். நெற்கதிர் சூட்டி வெந்துகிலிட்ட விசயமுரசத்தை முன்னே அனுப்பிய பின்னர், நீராடப் புறப்படும் படி ஏனையோருக்கும் உணர்த்தி, மன்ன்னும் நீராடப் புறப்பட்டச் செய்தியினைக் காணலாம். அவரவுருக்குக்கென ஒதுக்கப்பட்ட நீர்த்துறையில் பொதுமக்களும், மற்றவரும் நீராடினர்.

விழாவும் வேள்வியும்

          புனல் விழாவின் போது வேள்வி இடம் பெற்றது. இதனை,

          முழவுஞ் சங்கமு மூன்றின் முழங்குவ

         விழவும் வேள்வியும் வீடுத்தலொன்றின்மையாற்” (சீவக.136)

என்று சிந்தாமணி சுட்டுகிறது.

  விழாவில் வேள்வி வேட்பித்தல், இறைவழிபாட்டு நிலையிலும், அறச்செயல்புரிதல் என்ற வகையிலும் இடம் பெற்றது. கம்பராமாயணத்திலும் விழாவும் வேள்வியும் இணைந்து செய்யப்பட்டதைக் காணலாம்.

          கூறு பாடலும், சூழலின் பாடலும்

         வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்

         ஆறும் ஆறும் வந்து எதிர்த்த ஆம்என

        சாறும் வேள்வியும் தமை மயங்குமே” (கம்ப.பாலகாண்டம் 56)

மேலும்,

          விழவொலியும் வேள்வியொலியுமானான்” (பெரிய..28:11)

என திருநாவுக்கரசர் தேவராத்தில் வேள்வியும் விழவும் இணைந்து செய்யப்பட்ட நிலை சுட்டப் பெறுகிறது.

புனல் விளையாட்டு

          புதுப்புனல் விழாவில் முக்கிய நோக்கமான இன்பம் நுகர்தலை நீர் விளையாட்டில் காணமுடிகிறது. ஆடவர், மகளிர் இருபாலரும் நீர் விளையாட்டினை மேற்கொண்டனர். சுண்ணத்தால் கோலமிட்டனர். மேலும், மட்டத்துருத்தி, நெடுந்துருத்தி ஆகியவற்றைக் கொண்டு, சுண்ணத்தைச் சிதறச் செய்தனர். இதனை,

          சிந்துரப் பொடிகளுஞ் செம்பொற் சுண்ணமும்

         சந்தன நீரொடு கலந்து தையலார்

         பந்தொடு சிவிறியிற் சிதறப் பார்மிசை

         இந்திர வில்லெனக் கிடந்த வீதியே” (சீவக.86)

என்பார். செல்வமிக்கோர் சேவல் போர் நிகழ்த்தி ஆரவாரித்தனர். பெண்கள் நீராடிய பின்னர் குலுக்கி உருட்டியாடும் தாயம் ஆடி மகிழ்ந்தனர்.

விழாவில் மலர் காட்சி

        புதுப்புனல் விழாவின் முக்கிய நோக்கமான இன்பம் நுகர்தலை நீர் விளையாட்டில் காணமுடிகிறது. ஆடவர், மகளிர் இருபாலரும் நீர் விளையாட்டினை மேற்கொண்டனர். சுண்ணத்தால் கோலமிட்டனர். மேலும் மட்டத்துருத்தி, நெடுந்துருத்தி ஆகியவற்றைக் கொண்டு, சுண்ணத்தை சிதறச் செய்தனர். இதனை,

          ”சிந்துரப் பொடிகளுஞ் செம்பொற் சுண்ணமும்

         சந்தன நீரொடு கலந்து தையலார்

         பந்தொடு சிவிறியிற் சிதறப் பார்மிசை

         இந்திர வில்லெனக் கிடந்த வீதியே”

என்பர். மன்னன் தன் உரிம மகளிரோடு நீர்த் துறைக்கு வந்த பின்னரே விழா துவங்கிய செய்தி இடம் பெறுகிறது. நீர் விழாவில் பொழுது போக்குச் செயலாக நீர் விளையாட்டு இடம்பெறும். எனவே, நீர் விளையாட்டுக் கருவிகளை யானைகள் மீது கொண்டு சென்றனர். இவ்வாறாக விழாவின் பொழுது பல நாட்கள் தங்கியிருத்தல் வேண்டி, தேவைக்குரியப் பொருள்களை உடன் கொண்டு சென்றனர்.

விழாச் செயல்

        நீராடுதற்குச் சென்ற மக்கள் தங்கள் சுற்றாத்தாருடன் நீர் மாடங்களில் தங்கினர். கணி, நல்லவேளை கணித்துக் கூறியதும் அரசன் முதலிலும்,  மக்கள் அவரைத் தொடர்ந்தும் நீராடச் சென்றனர். அரசன் இருபது யானைகள், எண்பது புரவிகள், ஐம்பது தேர்கள் நூராயிரத்து ஒன்று கழஞ்சு மாசையும்(பொற்காசு) தானம் செய்தான். பெரியோர்களை வணங்கினான். காளிகோயிலுக்குப் பொற்பூ ஆயிரம் சேர்ப்பித்தான். நெற்கதிர் சூட்டி வெந்துகிலிட்ட விசயமுரசத்தை முன்னே அனுப்பிய பின்னர், நீராடப் புறப்படும் படி ஏனையோருக்கும் உணர்த்தி, மன்னனும் நீராடப் புறப்பட்டச் செய்தியினைக் காணலாம். அவரவருக்கென ஒதுக்கப்பட்ட நீர்த்துறையில் பொதுமக்களும் நீராடினர்.

விழாவும் வேள்வியும்

          புனல் விழாவின் போது வேள்வி இடம் பெற்றது. இதனை,

          ”முழவுஞ் சங்கமு மூன்றின் முழங்குவ

           விழவும் வேள்வியும் வீடுத்த லொன்றின்மையாற்” (சீவக.138)

என்று சிந்தாமணி சுட்டுகிறது.

          விழாவில் வேள்வி வேட்பித்தல், இறைவழிபாட்டு நிலையிலும், அறச்செயல் புரிதல் என்ற வகையிலும் அறச்செயல்புரிதல் என்ற வகையிலும் இடம்பெற்றது.

          விழவொலியும் வேள்வியொலியுமானான்” (பெரிய.ப.28:11)

என திருநாவுக்கரசர் தேவராத்தில் வேள்வியும் விழவும் இணைந்து செய்யப்பட்ட நிலை சுட்டப் பெறுகிறது.

புனல் விளையாட்டு

          புதுப்புனல் விழாவின் முக்கிய நோக்கமான இன்பம் நுகர்தலை நீர் விளையாட்டில் காணமுடிகிறது. ஆடவர், மகளிர் இருபாலாரும் நீர் விளையாட்டினை மேற்கொண்டனர். சுண்ணத்தால் கோலமிட்டனர். மேலும் மட்டத்துருத்தி, நெடுந்துருத்தி ஆகியவற்றைக் கொண்டு, சுண்ணத்தை சிதறச் செய்தனர். இதனை,

          ”சிந்துரப் பொடிகளுஞ் செம்பொற் சுண்ணமும்

         சந்தன நீரொடு கலந்து தையலார்

         பந்தொடு சிவிறியிற் சிதறப் பார்மிசை

         இந்திர வில்லெனக் கிடந்த வீதியே” (சீவக.86)

என்பார். செல்வமிக்கோர் சேவல் போர் நிகழ்த்தி ஆரவாரித்தனர். பெண்கள் நீராடிய பின்னர் குலுக்கி உருட்டியாடும் தாயம் ஆடி மகிழ்ந்தனர்.

விழாவில் மலர் காட்சி

          மருத நிலப் பகுதியில் மலரும் பல்வகைப் பூக்களைக் கொண்டு எடுக்கப்பட்ட விழா பல் பூ விழா,

          ”அரிகால வித்து பல்பூ விழாவிற்

          றேம்பாய் மருத முதல்படக் கொன்று” (பதிற்.30.15-16)

என்ற குறிப்பால் தெரிகிறது. இந்திர விழா மருதநில மக்கள் கொண்டாடிய விழா எனக் கருதலாம். இதற்கும் இந்திர விழாவிற்கும் மலரைப் பயன்படுத்திய நிலையில் ஒற்றுமை காண முடிகிறது. விழாக் காலத்தில் மலர் கண்காட்சியிடம் பெற்றமையைக் காப்பியங்கள் இயம்புகின்றன.

          பத்திப் பெருங்கொடியும், சிற்பவேலைப் பொருள்களும் இடம்பெற்றன. பூங்கொடி, பல்வகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூக்களின் கண்காட்சி இடம் பெற்றதனைப் பெருங்கதை காட்டுகிறது.

          ”பத்திப் பாடகையும் பல் பூங்கொடியும்

           சித்திரித் தெழுவிய வித்தக விமானமும்

           இருநிலத் தியங்கு மியந்திரப் பாவையும்

           அருவினை நுட்பத்தியவனகுப் புணர்ப்பும்

           பொத்தகை யானையும் பொங்குமயிர்ப் புரவியும்

           சித்திரமாலையு மக்கட் தொட்டிலும்

           .....   ........   ...............    .............

           .........   ............ ............  ............

           கைநிமிர் விளக்கும்

           எண்ணரும் பல் பொறி யெந்திரப் பொறுப்பும்

           வண்ண     ........... களும்

           கண்ணுளாளர் கைபுனைகிடுகும்

           நாடு நகரமு மாடுநர் பாடுநர்

            ஆடலும் பாடலு மன்னவை பிறவும்” (பெருங்.5.9:19-33)

என விரிவாகக் கண்காட்சியில் பூக்கள் அழகுப்படுத்தப்பட்ட நிலை சுட்டப்படுகிறது.

          விழா நடைபெறும் பொழுது பலவகையானப் பொருள்கள் விற்பனைக்கும் அழகு படுத்தவும் வந்து குவிந்தன. கைவினைப் பொருள்கள், கண்ணுள் வினைஞர், கைவினை முற்றிய நுன்னினைப் பொருள்கள், யவனத் தேயத்தார் செய்த மரச்சாமான்கள் ஆகியவை வந்து குவிந்தன. பிறநாட்டுப் பொருள் மேல் மோகம் கொண்டு, அன்றே, தமிழர் அப்பொருட்களையும் பண்டமாற்று முறையில் வாங்கும் சந்தையாக விழாக்கோலம் பூண்ட இடம் திகழ்ந்தது என்ற செய்தி தெளிவாகிறது.

          விழா நடைபெறும் காலமான  இருபத்தியொரு நாட்களிலும் தானம் அளித்தல்  இடம் பெறுதலுண்டு. அவற்றுடன் மன்னன் தானம் அளித்தலில் அந்தணர்க்கு அளித்தமையும் சுட்டப்படுகிறது. இச்செய்தி,

          ”படிவ குழுவினு ளடிமுதல் வணங்கி

         ஆசை மாக்களொடந்தணர் கொள்கென

         மாசைவாரி மன்னவ னாடி

         அறிஞர் தானத் தாயிரம் பொற்பூக்

         கருவி நிலைப் பள்ளிக்குத் தொழுதனன் போக்குக”

பள்ளிக்கு எனக் கூறப்படுதலால் நீராட்டு விழாவில் அந்தணர்க்குத் தானம் அளித்தமை சிறப்பிடம் பெற்றதென்பது உணரமுடிகிறது.

          புனலாடுவோர் தாகம் அளித்தல் இன்றும் வழக்கிலிடம் பெறுகிறதெனலாம். திருவனந்தபுரத்து அரச பரம்பரை முதலியவற்றில் இக்காலத்தும், இவ்வகைத் தானம் வழக்கில் இடம் பெறுகின்றதாக சுட்டப் பெறுகிறது.

          இன்றைய நிலையில் விழாக்கள் முடிவு பெறும் நாட்களுக்கு முன்னர் மலர்க்கண்காட்சியும் அவ்விழாவில் ஒரு முக்கிய அங்கமாக இடம் பெறுதலைக் காணலாம். மேலும் மலர் விழா என்ற பெயரில் சமுதாய விழாவாகச் சில தினங்கள் இடம் பெறுதலையும் காண்கிறோம். சான்றாக உதக மண்டலத்தில் ஆண்டுக்கொரு முறைச் சிறப்பாக மலர் விழா நடைபெறுகிறது.

நிறைவாக,

          இவ்விழாக் காலத்தில் மண்ணுலகம், விண்ணுலகப் போன்று அழகு மிக்கத் தோற்றத்தில் காணப்படும். அந்நிலையில் தேவர்கள், விஞ்ஞையர்கள் விழாக்காண மண்ணுலகிற்கு வருகை புரிந்தனர். இவர்கள் விழாவின் பார்வையாளராக வந்தமை இந்திர விழாவில் இடம் பெறுகின்றது.

           ”தேவ கணமும் வேரவிழிதர

          விறல் கெழு சிறப்பின் விச்சாதரரும்

          இறை கொண்டிழிதரவிப் பாற் சேடியின்”

என்கிறது பெருங்கதை. விழாக் கோலம் மிகச் சிறப்பாக அமைந்திருந்த திறத்தைக் காட்ட உணர்வு நவிற்சியாகப் புலவர் அமைத்துள்ளார்.

 

 

       

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...