வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல் 2023 - ஆம் ஆண்டு , குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205, விலை 1 50 ரூபாய். முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் . நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக , பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...
விவசாயத்திற்குப் பயன்படும் பொருட்கள் ” உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் ” ( குறள் -1033) என்று உழவின் மேன்மையைத் திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார் . அவ்வகையில் விவசாயம் என்பது குறைந்துவரும் தொழிலாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றது . விளைநிலங்கள் எல்லாம் விலைநிலங்களாக மாறி வருகின்றன . நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் மனிதன் உணவின்றி வாழமுடியாது . நம் முன்னோர்கள் காலை எழுந்தவுடன் உடல் உழைப்பால் விவசாயம் செய்து வந்தார்கள் . அத்தகைய சிறப்பு மிகுந்த விவசாயத்திற்கு விவசாயிகள் பயன்படுத்திய பொருட்கள் குறித்து நினைவுக் கூறும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது . ஏர் ஏர் என்பது வயல்களை உழுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவியாகும் . இது மரத்தால் செய்யப்பட்டது . இது பெரும்பாலும் நுனாமரம் என்னும் ஓதியன் மரத்தினால் செய்வர் ...