Skip to main content

Posts

Showing posts from October, 2025

தீபாவளி திருநாள் வாழ்த்துகள்!

  தீபாவளி திருநாள் வாழ்த்துகள்!                     அனைத்து நண்பர்கள், மற்றும் தமிழ் சொந்தங்களுக்குத் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள். தீபாவளி பண்டிகையின் சிறப்பினையும் , நம் முன்னோர்கள் கொண்டாடிய விதத்தினையும்   உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .             ” வானம் பொய்யா வளத்தைப் பெற்று              அறநெறி வாழ்வை அன்புடன் காத்து                பற்றற்ற வாழ்வை பரிவுடன் வாழ்ந்து              இல்லற வாழ்வில் நல்லறம் கொண்டு             விருந்து போற்றி விருப்புடன் வாழ்ந்து              நன்றி மறவா நன்மொழி காத்து              எல்லா வளமும் இனிதுடன் பெற்று         ...

வெற்றி!

 வெற்றி! வெற்றியும் தோல்வியும் எதிரெதிரெதிதானது அல்ல அடுத்தத்தப் படிகள்! வெற்றியும் தோல்வியும் நிலையானதல்ல! தோல்விகளை ஆராய்ந்தால் வெற்றிக்கான வழி கிடைக்கும்!!!

சினம்!

 சினம்! சுடுசொல் பேசிப் பின் கடுமை நீங்கி கேட்கும் மன்னி்ப்பால்! மனம் சிதைந்த காயம் மாறாது எப்போதும்! கதிரவனைக் கண்டு களிக்கும் தாமரை உக்கிர அனலில் உருவொளி இழக்குமே! சேர்ந்தாரைக் கொல்லும் சினம் எனும் கொல்லிக்கு வாழ்வில் பலி கொடுக்காமல் வாழ்வோம்!!!

வாழ்க்கை!

 வாழ்க்கை! இருளும் ஒளியும் மாறும் தன்மையது! இருளில் தவித்தலும்; ஒளியின்றி அமிழ்தலும் நிரந்தரம் இல்லை! சுழலும் சக்கரத்தில் நிலையென இல்லை! உன் அமைதி குழைக்க உலகில் எவரும் இல்லை! தன்மதி தெளிய அடையும் ஆனந்த எல்லை!!!

தமிழக மலையின மக்கள் (புத்தக மதிப்புரை)

  தமிழக மலையின மக்கள் ( புத்தக மதிப்புரை )   புத்தக மதிப்புரை என்ற கட்டுரையில் முனைவர் கே . ஏ . குணசேகரன் அவர்கள் எழுதிய தமிழக மலையின மக்கள் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் .        இத்தகைய சிறந்ததொரு புத்தகம் முதல் பதிப்பாக செப்டம்பர் 1994 – ஆம் ஆண்டும் , இரண்டாம் பதிப்பாக செப்டம்பர் 2011 – ஆம் ஆண்டும் சென்னை , நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி ) லிட் .,   வெளியிட்டுள்ளார்கள் . விலை 100 ரூபாய் , பக்கங்கள் 135. நூலாசிரியர் கே. ஏ. குணசேகரன்   என அழைக்கப்படும்   கரு. அழ. குணசேகரன் , அவர்கள் சென்னை , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராக இருந்தவர் .  எழுத்தாளர் ,  நாட்டுப்புறவியல் - நாடகவியல்- தலித்தியல்   அறிஞர் , பாடகர் , மற்றும் திரைக் கலைஞர் ஆவார். நாடகத்தைப் பற்றியும் , நாட்டுப்புறவியலைப் பற்றியும் ஆய்வு நூல்களையும் , ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் , பதினான்குக்கும் மேற்பட்ட படைப்பு நூல்களையும் எழுதியுள்ளார். சமஸ்கிருத அரங்கவியலுக்கு ( theatre) மாற்றாக , தலித் அரங்கவியல் என்னும் கோட்ப...