வாழ்க்கையின்
வெற்றியில் தன்னம்பிக்கை
(புத்தக மதிப்புரை)
புத்தக மதிப்புரையில் முனைவர்
சி.
இலட்சுமணன் அவர்கள்
எழுதிய ‘வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை’ என்ற புத்தகத்தைப்
பார்ப்போம்.
இந்நூல் 2023 -ஆம் ஆண்டு,
குமரி மாவட்டம், தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம்
வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205, விலை 150
ரூபாய்.
முனைவர் சி. இலட்சுமணன் அவர்கள், தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக
இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார். பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக, பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்து ஓலைச்சுவடிகள்
பலவற்றைத் தொகுத்து, பல்கலைக்கழக நூலகத்துக்கு வழங்கியுள்ளார்.
‘வாழ்க்கையின்
வெற்றியில் தன்னம்பிக்கை’என்ற இந்நூலுக்கு
திருவாரூர், மத்தியப் பல்கலைக்
கழகம், தமிழ்த்துறையின்
பேராசிரியர், துறைத்தலைவர், முனைவர் ச. இரவி அவர்கள் சிறப்பானதொரு வாழ்த்துரையும், அகில இந்திய வானொலி, நிகழ்ச்சித் தலைவர், கீழ்ப்பாவூர். ஆ.சண்முகையா அவர்கள் அணிந்துரையும், தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகம், கையெழுத்துச் சுவடித்துறையில் இணைப்பேராசிரியர், முனைவர் த. ஆதித்தன் அவர்கள்
ஆய்வுரையும், சென்னை, இலயோலா கல்லூரி, தமிழ்த் துறைத்
தலைவர், முனைவர் சூ. அமல்ராஜ் அவர்கள் வாழ்த்துரையும், காந்தியன் ஊரக வளர்ச்சி அறக்கட்டளை, வட்டார வளர்ச்சி
அலுவலர், திரு.மிகு.கு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆசியுரையும், கவிஞன் கலியுகன்
கோபி அவர்கள் வாழ்த்துரையும் வழங்கி சிறப்பித்துள்ளார்கள்.
வாழ்க்கைப்
பாதையில் ஒவ்வொருவரும் வெற்றி மகுடத்தை சூட வேண்டும் என்ற வேட்கையில் இந்நூலைத் தந்துள்ளார். இவரது எழுத்துக்களும், கருத்துக்களும்
சுருண்டு கிடப்பவரை நிமிர்ந்தெழுந்து நடக்கச் செய்யும். வாசிப்போர் வாழ்வில் ஞானமழை பெய்யும். தன்னம்பிக்கை, தடைக்கற்கள், என பற்பல நிலைகளை
அறிவுப் பூர்வமாகக் கடக்கும் எளிய வழிகளை உரித்துக் காட்டுகிறார்.
இந்நூலில் வாழ்க்கையின் இலட்சியமும் தன்னம்பிக்கையும், தன்னம்பிக்கையும்
தனிமனித முன்னேற்றமும், தன்னம்பிக்கையும் வாழ்க்கையின் வெற்றியும், தனிமனித முன்னேற்றமே
நாட்டின் முன்னேற்றம், நம்பிக்கையின் பல்வேறு வகைகள், தன்னம்பிக்கையின்
தடைகற்கள், தன்னார்வம், தாழ்வு மனப்பான்மையைப் போக்குவோம், அச்சத்தை அறவே
ஒழிப்போம், மனமும்
எண்ணமும் என்று 16 தலைப்புக்களில் வாழ்வியல் தத்துவங்கள் சார்ந்தக் கட்டுரைகளைத்
தொகுத்து வழங்கியுள்ளார்.
1.
வாழ்க்கையின்
இலட்சியமும் தன்னம்பிக்கையும்
வாழ்க்கையில்
இலட்சியம் மிக முக்கியமானதாகும். திட்டவட்டமானக் குறிக்கோள் உடையவர்களுக்குப் பலவுண்டு என்பது
வலியுறுத்திக் கூறத்தக்கதாகும். அழகோடும், அறிவோடும், பொருளோடும், புகழோடும், மனஅமைதியோடும் நீண்ட நாட்கள் நோய் நொடியில்லாமல் வாழவேண்டும் என்பதே எல்லோருடைய
விருப்பமாகும். எண்ணிய எண்ணியாங்கு அடைவதற்குத் தக்க முயற்சியும்
உழைப்பும் வேண்டும். இளம் வயதில் உள்ளத்தில் குறிக்கோள் கொண்டவர்களே
வாழ்க்கையில் உயர்வடைந்துள்ளார்கள்.
உலகில் வெற்றி பெற்ற பெரியோர்களின்
வரலாறுகளை ஆராந்தால்,
அவர்கள் எந்தத் துறையில் எவ்விதம் வெற்றி பெற வேண்டுமென்று இளம் வயதில்
குறிக்கோள் கொண்டார்களோ அதே போன்று பிற்காலத்தில் உயர்வடைந்துள்ளதைக் காணலாம்
·
பன்னிரண்டு வயது சிறுவன் மார்ல் பெர்னாட்மண்ட்
கோமரி.
அவன் கொண்ட இலட்சிய வாழ்வுக்கு லண்டன் நகர மக்கள் எல்லோரும் பாராட்டு
விழா நடத்தினர். அவனுடைய இதயத்தை ஆட்கொண்ட இலட்சியம் ”என்னுடைய தகப்பனைப்
போன்று நான் பாதிரியாராக மாட்டேன். என்னுடைய பாட்டனைப் போன்று மாபெரும் தளபதியாக வருவேன். கொடிகள் மேலே அசைய மக்கள் மகிழ்ச்சியுடள் ஆரவாரம் செய்ய,
இலண்டன் தெருக்கள் வழியாக நானும் என்றாவது ஒருநாள் படை நடத்திச் செல்வேன்”. என்பதே மார்ல் கோமரியின் உள்ளத்தில் எழுந்த தீர்மானமான இலட்சியமாகும்.
இந்த இலட்சியத்தின் வீர முழக்க வெற்றியே
இரண்டாவது உலகப் போரில் ஜெர்மன் படைகளை வட ஆப்பிரிக்காவில் அல் அலபீனிலிருந்து, ட்யூனிணீயா வரை விரட்டியடிக்க செய்தவர் தான் மார்ல் கோமரி ஆவார்.
·
உலகம் போற்றும் மகான்களாக விளங்கியவர்கள்
சாக்ரட்டீஸ், மகாத்மா காந்தியைக்
குறிப்பிடலாம்.
·
கவிஞர்களாகத் திகழ்ந்த ஷேக்ஸ்பியர், ஷெல்லி, மகாகவி பாரதியார், மில்டன், இக்பால், தாந்தே, இரவீந்தரநா தாகூர் போன்றோரைக்
குறிப்பிடலாம்.
·
வணிக விற்பன்னர்களாகத் திகழ்ந்த ஹென்றி போர்ட், டாட்டா, பிர்லா,
ராக்பெல்லர் போன்றோரைக் குறிப்பிடலாம்.
·
துணைவேந்தர்களாகத் திகழ்ந்த வா.செ.குழந்தைசாமி,
மு.வரதராசனார், வ.சுப. மாணிக்கம்,
அகத்தியலிங்கம், க.ப.அறவாணன் போன்றோரைக் குறிப்பிடலாம்.
இவர்களைப் போல் மேலும் எத்தனையோ துறைகளில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள் பலர்
உண்டு. யார் நம்முடைய மனதில் இடம் பிடிக்கின்றார்கள் என்பதை எண்ணிப்
பார்க்க வேண்டும். அப்பெருமக்களின் வாழ்க்கை வரலாற்றை ஆழ்ந்து
படிக்க வேண்டும். அதன் அடிப்படையில் நமக்கென ஒரு குறிக்கோள் ஒன்றை
வகுத்துக் கொள்ள வேண்டும்.
2.
தன்னம்பிக்கையும்
தனிமனித முன்னேற்றமும்
தனிமனிதனின் ஆர்வம், துடிப்பு, முயற்சி, தொழில், கற்பனை, தியாகம், உழைப்பு இவற்றிலிருந்து தான் ஒவ்வொரு துறையிலும் சாதனைகள் மலர்ந்திருக்கின்றன.
சமுதாய முன்னேற்றத்தின் அடி நாதமாய் இருப்பது ஆர்வம், முயற்சி, செயல் இவை மூன்றும் சான்றாகும்.
ஒவ்வொரு துறையிலும் சாதனைகள் மலர்ந்து மணம் வீசுகின்றது என்று சொன்னால் அதற்கு முக்கியக் காரணம் தனிமனிதர்களே ஆகும். தனி மனிதர்கள் முன்னேறும் போது நாடும், வீடும், சமுதாயமும் முன்னேற்றம் அடைகின்றது. எனவே ”நாம் தனிமனிதர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களை சுதந்திரமாகச் செயல்பட ஏற்ற புதிய சூழ்நிலையை அமைக்க வேண்டும்” என்பார் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி.
எந்தவொரு
சூழலிலும் மனம் தளர்ந்து விடக் கூடாது. வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து முயற்சியைக் கைவிடாமல் செய்து கொண்டே வரவேண்டும். அவ்வாறு செய்து வந்தால் தனிமனித வாழ்கையில் வெற்றி உறுதியாகும்.
”எழுமின் விழிமின் கருதிய கருமம் கைகூடும் வரை சலியாது உழைமின்” என்னும் சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் ஈண்டு நினைவு கூரத்தக்கதாகும்.
3.
நம்பிக்கையின்
பல்வேறு வகைகள்
நம்பிக்கையின் அருமைபெருமைகளை வாழ்க்கையில் அனுபவம் பெற்றவர்களே நன்கறிவர். ”உடல்நலம் உள்ளவனுக்கு நம்பிக்கை
இருக்கும். நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்” என்னும் ஜேம்ஸ் ஆலனின் வாழ்வியல் சிந்தனைகள் குறிப்பிடத்தக்கதாகும். நம்மை நேசிக்க
வேண்டும். நம்முடைய வாழ்க்கையை
நாம் நேசிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நம்மேல் நம்பிக்கை இருத்தல் வேண்டும்.
நம்பிக்கை என்பது ஒரு வகை உணர்ச்சி நிலை என்பாரும் உண்டு. அவ் உணர்ச்சிகளை
ஆகும் உணர்ச்சிகள் என்றும், ஆகாத உணர்ச்சிகள் என்றும் இருவகைப்படுத்துவர்.
அன்பு, காதல், விருப்பம், திட நம்பிக்கை, உற்சாகம், இரக்கம் போன்றவற்றை ஆகும் உணர்ச்சிகள் என்பர்.
பயம், பொறாமை, வெறுப்பு, சந்தேகம், கோபம் பழிவாங்கும் மனப்பான்மை போன்றவற்றை ஆகாத உணர்ச்சிகள் என்பர்.
நல் உணர்ச்சிகள் ஏற்படும்போது மகிழ்ச்சியும் உடலில் ஒரு விதமான பரபரப்பும் உண்டாகும். கெட்ட உணர்ச்சிகள்
ஏற்படும் போது கவலையும் ஆத்திரமும் உண்டாகும். நம்பிக்கை நமது உடலிலும் உள்ளத்திலும் ஆக்க சக்தியை உருவாக்கும். நம்பிக்கை ஏற்படாவிட்டால்
நம் உடலில் உள்ள சக்தியெல்லாம் மாயமாய் மறைந்து தோல்வியையும் தளர்ச்சியையும் உருவாக்கும்
என்னும் தனிமனித மேம்பாட்டுச் சிந்தனை குறிப்பிடத் தக்கதாகும்.
வாழ்க்கையில் முன்னேற விரும்புவோர் ஒரு வாழ்வியல் தத்துவத்தை நினைவில் கொள்ள
வேண்டும். ”நாம்
பேசுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் பேசுவதைக் கவனிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும்” என்னும் சுயமுன்னேற்றச் சிந்தனை சுட்டத்தக்கதாகும்.
நம்பிக்கையின் வகைகளாக, 1. தன்னம்பிக்கை, 2. வெற்றியின்
நம்பிக்கை 3. இறை நம்பிக்கை 4. திட நம்பிக்கை என நான்கு வகைப் படுத்தலாம்.
1. தன்னம்பிக்கை
நம்பிக்கையின் இரண்டு பக்கங்கள் ஒன்று தன்னம்பிக்கை, மற்றொன்று அவ
நம்பிக்கை என்பார் தமிழ்வாணன்.
”தன்னம்பிக்கை என்பது நமது நண்பன், அவநம்பிக்கை
தான் நமது பகைவன்” என்று விளக்குகிறார்.
வாழ்க்கையில் ஒருவன் வெற்றியும் முன்னேற்றத்தையும் பெற வேண்டுமானால் அதற்குரிய
முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அம் முயற்சிகளில் ஈடுபடுவதற்குரிய ஊக்கத்தைப் பெறுவதற்குத்
தன்னுடைய கடவுள் நம்பிக்கையை முயன்று வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே தமிழ்வாணனின்
வாழ்வியல் தத்துவமாகும்.
2. வெற்றியின் நோக்கில் தன்னம்பிக்கை
வெற்றியின் நோக்கில் தன்னம்பிக்கை என்பது, தான் மேற்கொண்டுள்ள குறிக்கோளில் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புவதாகும். அளவு கடந்த
ஆர்வத்தினால் தான் குறிக்கோள் உருவாகும். அக் குறிக்கோள் நிறைவு பெறும், வெற்றி பெறும் என்று நம்பிக்கை
கொள்வது மிகவும் அவசியமாகும். இந் நம்பிக்கையே நம்மை செயல்படத் தூண்டும்.
3. திட நம்பிக்கை
நம்பிக்கை அரைகுறைவாக இருந்தால் அதனால் யாதொரு பயனும் ஏற்பட மாட்டாது. எனவே அந்நம்பிக்கை
திடமான நம்பிக்கையாகும். ”ஒரு காரியத்தைச் செய்ய உன்னால் முடியும் என்று நம்புவாயானால்
நீ அக்காரியத்தை நிச்சயமாகச் செய்து முடிக்கக் கூடும்” என்பார் பேராசிரியர் நெப்போலியன் ஹில்.
திடநம்பிக்கைதான் அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படையாகும். வலுவான நம்பிக்கைக்கு
மகத்தான ஆற்றல் உண்டு என்பதற்கு மாற்று கருத்து இருக்க இயலாது. அவ் ஆற்றலின்
உதவியைக் கொண்டு நாம் வெற்றியை மிக எளிதாக அடையலாம்.
தாமஸ் ஆல்வா எடிசன் ”மனிதர்களின் குரலை அரக்குத் தட்டுகளில் பதிவு செய்ய முடியுமென்று, அதனை ஓர் கருவியின்
மூலம் மீண்டும் அதே மாதிரி பேசவும் பாடவும் செய்யமுடியுமென்று நம்பினார்”.
பல்லாயிரம் தோல்விகளுக்குப் பின்னர் போனோகிராம் என்னும் கருவியைக் கண்டுபிடித்தார். தாமஸ் ஆல்வா
எடிசனின் இந்த கண்டுபிடிப்பால் தான் திரைப்படம், பேசும் படம் போன்றவை உருவாவதற்கு வழி கோலியது என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
4. இறை நம்பிக்கை
தம்முடைய குறிக்கோளில் வெற்றி
பெறுவதற்குக் கடவுளின் அருளைப் பெற வேண்டும் என்பதே நம் முன்னோர் கருத்தாகும்.
`கடவுளை நம்பினோர் கை விடப்படார்` என்பது
தமிழ்நாட்டின் முதுமொழியாகும்.
நமக்கு தன்னம்பிக்கையும்
வேண்டும். குறிக்கோளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் வேண்டும்
அவற்றுடன் கடவுள் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையும் நமக்கு இருத்தல் வேண்டும்.
இம்மூன்று வகை நம்பிக்கை இணைந்து செயல்படும் போது அளப்பரிய ஆற்றல் உண்டாகும்.
அதன் பயனாக நமது செயல்களில் தங்குதடை இல்லாமல் வெற்றியே கைகூடும் என்பதில்
சிறிதும் ஐயமில்லை.
மனம் எதனை முழுமையாக நம்புகின்றதோ
அதில் கண்டிப்பாக வெற்றி ஏற்படும். மனத்தின் ஆற்றல் மகத்தானது.
இவையெல்லாம் திடநம்பிக்கையின் இணைப்பினால் ஏற்படுவதாகும். திடநம்பிக்கையின் ஆற்றலுக்கு மூலாதாரமாக இருப்பது கடவுள் நம்பிக்கையே என்பதும்
அடிக்கோடிட்டு காட்டத்தக்கதாகும்.
4.
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை என்பதற்கு ‘தன்னால் முடியும் என்னும் மன உறுதி, தன்மீது உள்ள
நம்பிக்கை’ என்னும் விளக்கத்தின் மூலம் அறியலாம். தன்னம்பிக்கை
நம்மிடம் மறைந்துள்ள எல்லா திறமைகளையும் வெளிக்கொண்டு வருவதற்கு உதவுகின்ற திறவுகோலாகும். அந்நம்பிக்கை
நம்முடைய எண்ணத்திலும் செயலிலும் வெளிப்பட வேண்டும். தன்னம்பிக்கை நம்மை நேசிக்க செய்யும். அடுத்து நம்முடைய
வலிமையை உணரச் செய்யும். எதிர்மறை சிந்தனைகளுக்கு ஒரு போதும்
மனதில் இடமளிக்கக் கூடாது.
”தன்னம்பிக்கையின் அளவை
வைத்து உங்களது வெற்றியை நிர்ணயிக்க முடியும்” என்பார் ராபார்ட்
கொல்லியர்.
“நம்முள் இருக்கும் திறமைகள்
சூழ்நிலைகளைவிட சக்தி வாய்ந்தவை என்று எண்ணியவர்களே சாதனைகள் பல படைத்துள்ளனர்“என்பது
ஆராய்ச்சி அறிஞர் புரூஸ் பார்டன் கருத்தாகும்.
காலத்தை சரியாகத் தேர்ந்தெடுத்து,
மிகத் தெளிவாகத் திட்டமிட்டு, சோர்வின்றி விடாமுயற்சியுடன்
உழைப்பவர் எவரும் தோல்வி அடைவதில்லை என்னும் உண்மை உணரத்தக்கதாகும். வெற்றி என்பது அடுத்தவர் நமக்கு தருவது அல்ல.
”வெற்றி வெளியே எங்கும்
இல்லை. அது நமக்குள்ளே இருக்கின்றது. விதைக்குள்ளே மிகப் பெரிய மரம் உறங்கிக் கொண்டிருப்பது போல நமது முயற்சியும்
உற்சாகவும் உழைப்பும், ஊக்கமும் அந்த விருட்சத்தை வெளிப்படுத்துகின்றன”.
தோல்வியைக் கண்டு அஞ்சக்
கூடாது. தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். விடா முயற்சி செய்ய வேண்டும். வெற்றி கிடைக்கும் வரை
முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்னும்
உண்மை அப்போது புலனாகும்.
5.
தன்னார்வம்
தன்னார்வம் என்பது உள்ளத்தில் தானாக வரவேண்டிய ஒன்று. பிறரால் ஊட்டக்
கூடியதன்று என்பர். தன்னார்வத்துடன் செய்யும் செயலில் சிறப்பும், செம்மையும், செயல் நேர்த்தியும்
இருக்கும். ஆர்வமும் ஆற்றலும்
உடையோர் வாழ்க்கையில் வெற்றி அடைவர். ஆர்வம் என்பது ஒரு வகை உணர்ச்சியாகும். ”ஆர்வமில்லாத
மனிதன் இறக்கைகள் இல்லாதப் பறவைகளுக்கு ஒப்பாவான்” என்னும் ஆங்கிலப் பழமொழி ஆர்வத்தின் முக்கியத்துவத்தைப் புலப்படுத்தும்.
ஆர்வம் என்னும் தூண்டுதல் உணர்ச்சி இல்லாமல் போகுமானால் மனிதன் உலக வாழ்வில்
எவ்வகையிலும் உயர்வு பெறவும் முடியாது. வெற்றி பெறவும் முடியாது. பகற் கனவிற்கும் ஆர்வத்திற்கும் வேறுபாடு உண்டு. தெளிவில்லாத
விருப்பமும் வலுவில்லாத விருப்பமும் பகல் கனவில் பாற்படும். குறிக்கோளை
உடைய விருப்பமும் பெரு விருப்பமும் ஆர்வத்தின் பாற்படும்.
ஆர்வம் அளவோடு இருத்தல் வேண்டும். நம்முடைய சூழலுக்கும் தகுதிக்கும் ஒத்ததாக இருக்க வேண்டும்.
”ஆர்வத்தின் வளர்ச்சி நிலை என்பது ஒன்றை அடையாமல் முடியாது
என்ற நிலையை அடைவதாகும்”
குறிக்கோளை எப்பாடு பட்டேனும் அடைந்தே தீர வேண்டும் என்னும் உறுதி உள்ளத்தில்
பிறந்து விட்டால் இன்னல்களும் இடையூறுகளும் அவரிடம் மண்டியிட்டு சரணடையும் என்பதே மேனாட்டறிஞரின்
கருத்தாகும். நம் மீது ஆதிக்கம்
செலுத்தும் அளவுக்கு ஆர்வத்தின் தன்மை உயர்ந்து நிலைத்து விட்டால் குறிக்கோளை அடைவதற்கான
வாய்ப்புகள் தாமாக நம் முன் வந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
6.
அச்சத்தை அறவே
ஒழிப்போம்
அச்சம் என்பது உட்பகையுள்
ஒன்றாகும். உட்பகைகள் பலவுண்டு. முடிவெடுப்பதில்
தயக்கம், கவலை, சந்தேகம்,
அச்சம், துன்பம், எதிர்மறை
எண்ணம் போன்றவை சிலவாகும்.
”மனிதனைக் கட்டுப்படுத்தி
ஒரே நிலையில் நிறுத்திவிடும் ஒரு வகை உணர்ச்சியே அச்சம்” ஆகும்.
அச்சம் என்பது வேறு,
மரியாதை என்பது வேறு என்பதும் அறியத்தக்கதாகும். எனவே தான் பயப்படுவதை விட மரியாதை காட்டலாம் என்று கூறுவதும் உண்டு.
அச்சம் உணர்ச்சி வயப்பட்டதாகும். மரியாதை என்பது
அறிவின் பாற்பட்டதாகும்.
குறிக்கோள் அற்றும்,
பற்றற்றும் வாழ்கின்ற வாழ்க்கையில் அச்சம் தோன்றுதில்லை. அச்சத்தின் உச்சமாக உயிரையே இழக்க நேரிட்டாலும் அச்சத்தை துச்சமாக நினைத்து
விட்டால் அச்சமோ அகன்று விடும்.
மனம் தெளிவாக இருந்தால்
அச்சத்திற்கு இடம் இல்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கதாகும். செயல்திறன் படைத்தவர்களும் அச்சப்படுவதில்லை. குழந்தைகளும்
அச்சப்படுவதில்லை. பற்றறுத்தார் உள்ளத்தை பயம் ஒருபோதும் தொற்றுவதில்லை.
அச்சத்தினால்
விளையும் கேடுகளாக,
தன்னம்பிக்கையின் முதல்
எதிரி அச்சமாகும். அச்சம் தன்னம்பிக்கையைத் தலைதூக்காமல் செய்து
விடும். அச்சப்படுவதென்பது கோழையின் குணநலனாகும். துன்பத்தின் ஆணிவேர் அச்சமாகும். சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம்
அச்சம் உடையவர்களுக்குச் சமுதாயத்தில் வளர்ச்சியே இல்லை.
7. உழைப்பும் நன்முயற்சியும்
உழைப்பு என்றுமே வீணாகாது.
வாழ்க்கைப் பெற்றவர்கள், சாதனையாளர்கள்,
புகழ் பெற்றவர்கள், வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்
என்போரெல்லாம் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்பதற்கு மாற்றுக் கருத்து இயலாது.
உழைப்பினைக் கடின உழைப்பு, ஓய்வில்லா உழைப்பு,
சோர்வில்லா உழைப்பு, சலிப்பில்லா உழைப்பு,
எதிர்பார்ப்பில்லா உழைப்பு, என்றெல்லாம் உழைப்பின்
பண்பு நலன்களைப் பட்டியலிட்டுக் காட்டலாம்.
வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள்
வந்தாலும் விடாமுயற்சியுடன் உழைப்பவர்க்கே வெற்றி மீது வெற்றி வந்து சேரும்.
நம்முடைய குறிக்கோளுக்குரிய
செயல்களை மேற்கொண்டு, தொடர்ந்து விடாமுயற்சியுடன் உழைக்கின்றவர்களுக்கு
அவற்றுக்குரிய பலன்கள் கண்டிப்பாக கிடைக்கும் என்பது பட்டினத்தடிகளார் கருத்தாகும்.
”உழைப்பின் வாரா உறுதிகள்
உளவோ”
என்னும் கோட்பாடு
அடிகளாருக்கே உரித்தாகும்.
செயல்கள் எதுவும் செய்யாமல்
சோம்பலாய் இருந்து முயற்சிகளைச் செய்யாதவர்கள் மக்களால் இடித்துரைக்கப்படுவர்.
அதுமட்டுமல்ல மக்களால் இகழ்ந்து சொல்லும் சொற்களையும் கேட்பார்கள் என்பது
வள்ளுவருக்கு உரித்தான கோட்பாடாகும்.
”இடிபுரிந்து என்னும்
சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்று இலவர்”
என்பர் வள்ளுவர்
பெருந்தகை.
முன்னேற்றப் பாதையில் முக்கியமானது
உழைப்பு என்பதற்கு, ”உழைப்பு, பணம்,
அறிவு மூன்றும் இருந்தால் தான் முன்னேற்றம்
முனைந்து வரும்” என்பர்.
முயற்சி – ஒரு
இலட்சியமோ,
ஒரு காரியமோ, ஒரு தொழிலோ வெற்றி பெற வேண்டுமானால்
தேவையான மூன்றனுள் முயற்சியும் ஒன்றாகும்.
தனிமனித வாழ்க்கையில் வெற்றி
பெறுவதற்கு முயற்சி வேண்டும். வெற்றி பெறுவதற்கு முயற்சி உணர்வுகளைத்
தூண்டுதல் வேண்டும்.
”வெற்றியின் இரகசியம்
என்பது ஒரு காரியத்தில் தொடர்ந்து முயற்சி செய்து வருவதுதான்” என்பார் பெஞ்சமின் டிஸ்கேலி. இவர் இங்கிலாந்தின் பிரதம
மந்திரிகளுள் மிகப்பெரிய புகழ்பெற்றவர். இவர் இலட்சியத்தில் கொண்ட
ஈடுபாட்டாலும், உறுதிப்பாட்டாலும், பல்துறை
திறமையாலும் மிகச் சாதாரண நிலையிலிருந்து இங்கிலாந்து நாட்டின் பிரதம மந்திரியாக உயர்ந்து
விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
முயற்சியை ஆள்வினை உடமையுள் ஒன்றாகக் கூறகின்றார். முயற்சி தன்னுடைய
உடல் வருந்திய அளவு பயனைத் தரும் என்பது அப்பெருமானின் கருத்தாகும்.
”தெய்வத்தான் ஆகா தெனினும்
முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்”
முயற்சி செல்வத்தை வளர்க்கும்.
அது இல்லையேல் வறுமையில் புகுத்திவிடும் என்பது வள்ளுவர் கருத்தாகும்.
முயற்சியின் அடிநாதமாய் இருப்பது தன்னம்பிக்கையாகும்.
8.
மனமும் எண்ணமும்
பணத்தைப் பற்றி சிந்திக்கின்ற அளவுக்கு மனத்தைப் பற்றி எல்லோரும் அதிகம் சிந்திப்பதில்லை. பணத்தால் அடைய
முடியாததை மனத்தால் அடைய முடியும். பெருந்துன்பமும் துயரமும் மனத்தைப் புடம் போடும் பயிற்சி
பட்டறைகளாகும்.
”மனம் என்பது ஐம்புலன்களின் செயல்பாடுகளை உருவமில்லாது செலாற்றும் ஒரு நுண் பொருளாகும்”.
எண்ணம் தான் சொல்லாகவும், செயலாகவும் வெளிப்படுகின்றது. ஒவ்வொரு செயலும் சிந்தனையாகி பின் செயல்வடிவம் பெறும். எனவே திட்டமிடும்
செயல்களில் நமக்குள் பேசிக் கொள்ளலாம். அதுவும் அளவோடு பேசிக் கொள்ளலாம். சிந்தனைகளை
நெறிப்படுத்தவேண்டும். மனிதப் பிறவியில் மனமும் எண்ணமும் சிறப்பாகும்.
நிறைவாக,
·
தனிமனித வாழ்க்கையின்
வெற்றி என்பது குறிக்கோளில் வெற்றி அடைந்து மகிழ்ச்சியும், மன அமைதியும் பெற்று வாழ்வதாகும்.
·
இளைஞர்களும், மாணவர்களும், பெரியோர்களும், தாய்மார்களும்
எண்ணம் ஆராய்தல் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.
·
இந்நூலைப் படிக்கின்ற
ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையும் வாழ்க்கையில் வெற்றியும் அடைய வேண்டும். உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம், பெற்று ஓங்கி
வாழ வேண்டும் என்று வாழ்த்தி இந்நூலை நிறைவு செய்துள்ளார் நூலாசிரியர் அவர்கள். இந்நூல் அனைவரும்
வாசிக்க வேண்டிய நூலாக அமையும் என்று நம்புகின்றேன்.
”வெற்றி என்பது
குறிக்கோள் அன்று, அது ஒரு பயணமேயாகும். பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்” என்று இங்கர்சால்
Comments
Post a Comment