என் எண்ணச் சிதறல்கள் ! (4) Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக் கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1. சாதனை! அனுபவங்களில் இருந்து பிறப்பவையல்ல! கற்பனைகளில் இருந்து பிறப்பவை! அனுபவத்திற்கு வயது தேவை! சாதனைக்கு வயது தேவையில்லை! 2. வலிகள்! நம் வாழ்வின் தொடர் கதைதான்! தொடர்கதையில் கிளைக்கதைப் போல் நமது மகிழ்ச்சியான தருணம்! வலிகள் நிறைந்த வாழ்வில் இளைப்பாறி ரசிப்பதற்கும் இனியவற்றை நுகர்வதற்கும் மடைமாற்றிக் கொண்டால் நம் வாழ்க்கை துயரங்களின் தொகுப்பாக இல்லாமல் ...
மணிமேகலை காப்பியத்தில் நம்பிக்கை , பழக்கவழக்கங்கள் மணிமேகலை காலத்திலே இந்நாட்டிலே பல தெய்வங்களை மக்கள் வணங்கி வந்தனர் . அந்தரி என்னும் பெயருள்ள துர்க்கை , சம்பாபதி , மதுராபதி , கன்னியாகுமரியில் உள்ள குமரித் தெய்வம் , சிந்தாதேவி ( சரஸ்வதி ), மணிமேகலா தெய்வம் , தீவதிலகை , விந்தா கடிகை , இந்திரன் , கந்திற்பாவை , சிவபெருமான் , திருமால் , பலதேவன் , பிரமன் , முருகன் , மன்மதன் , மகாப் பிரம்மா , சதுக்கபூதம் , அருவப் பிரம்மர் நால்வகையினர் , உருவப் பிரம்மர் பதினாறு வகையினர் ஆகிய தெய்வங்கள் மக்களால் வணங்கப்பட்டன . · மக்களால் வணங்கப்பட்ட தெய்வங்களுக்குக் கோயில்கள் இருந்தன . உருவச் சிலைகள் இருந்தன . அவைகளுக்குத் தினப் பூசைகளும் , ஆண்டு விழாக்களும் நடைபெற்று வந்தன . ஆண் தெய்வங்களை விடப் பெண் தெய்வங்களே மிகுந்த சக்தி படைத்தவைகளாக இருந்தன . மக்களும் பெண் தெய்வங்களையே மிகுதியாக வணங்கிவந்தனர் என்று ஊகிக்க இடம் உண்டு . இவைகளை மணிமேகலையிலிருந்து அறியலாம் . · நகரங்...