Skip to main content

Posts

என் எண்ணச் சிதறல்கள்! (4)

  என் எண்ணச் சிதறல்கள் ! (4)              Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக்   கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும்   தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1.    சாதனை!      அனுபவங்களில் இருந்து      பிறப்பவையல்ல!      கற்பனைகளில் இருந்து      பிறப்பவை!      அனுபவத்திற்கு வயது      தேவை!      சாதனைக்கு வயது      தேவையில்லை! 2.     வலிகள்!      நம் வாழ்வின் தொடர் கதைதான்!      தொடர்கதையில் கிளைக்கதைப் போல்      நமது மகிழ்ச்சியான தருணம்!      வலிகள் நிறைந்த வாழ்வில்      இளைப்பாறி ரசிப்பதற்கும்      இனியவற்றை நுகர்வதற்கும்      மடைமாற்றிக் கொண்டால்      நம் வாழ்க்கை      துயரங்களின் தொகுப்பாக இல்லாமல் ...

தருமிக்குப் பொற்கிழி அளித்தது

  தருமிக்குப் பொற்கிழி அளித்தது             வங்கிய சூடாமணிப் பாண்டியன் இறைவன் வழிபாட்டிற்கு வேண்டி ஒரு நந்தவனத்தை நிர்மானித்தான். அத்துடன் சண்பக நந்தவனம் ஒன்றும் தனியாக அமைத்தான். சண்பக மலர்களை இறைவனுக்கு அணிவித்து வந்ததால் அவன் சண்பகப் பாண்டியன் என்று பெயர் பெற்றான். சோமசுந்தரக் கடவுளுக்குச் சண்பக சுந்தரர் என்ற திருப்பெயர் வழங்கப்பட்டது.         கோடை காலத்தில் சண்பகப் பாண்டியன் தன்தேவியுடன் சண்பகத் தோட்டத்தில் தங்கியிருந்தான். அப்போது வீசிய தென்றலில் நறுமணம் தவழ்ந்து வந்தது. இந்த மணம் சோலை மணமில்லை என்பதை அறிந்தான். காற்றுக்கும் மணமில்லை என்பது அவனுக்குத் தெரியும். ஆராய்ந்தான். முடிவில் தன் தேவியின் கூந்தலில் மணம் என்பதை அறிந்து, கூந்தலுக்கு இயற்கையில் மணம் உள்ளதா? அல்லது செயற்கை மணமா? என்று சந்தேகம் கொண்டான்.           பாண்டியன் அரண்மனைத் திரும்பியதும் தன் சந்தேக கருத்தை அறிந்து பாடல் செய்பவருக்கு ஆயிரம் பொன் அடங்கிய முடிப்பு அளிப்பதாக அறிவித்த...

Popular posts from this blog

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...