என் எண்ணச் சிதறல்கள் ! (4) Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக் கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1. சாதனை! அனுபவங்களில் இருந்து பிறப்பவையல்ல! கற்பனைகளில் இருந்து பிறப்பவை! அனுபவத்திற்கு வயது தேவை! சாதனைக்கு வயது தேவையில்லை! 2. வலிகள்! நம் வாழ்வின் தொடர் கதைதான்! தொடர்கதையில் கிளைக்கதைப் போல் நமது மகிழ்ச்சியான தருணம்! வலிகள் நிறைந்த வாழ்வில் இளைப்பாறி ரசிப்பதற்கும் இனியவற்றை நுகர்வதற்கும் மடைமாற்றிக் கொண்டால் நம் வாழ்க்கை துயரங்களின் தொகுப்பாக இல்லாமல் ...
தொல் பழங்காலத்தில் மகளிர் ஒப்பனைகள் தொல் பழங்காலத்தில் தமிழ் மகளிர், பல்வேறு வகைகளில் ஒப்பனை செய்து கொண்டனர். · கூந்தல் - பல்வேறு கலை வடிவங்களில் பின்னப்பட்டது. ஒன்று சுறா மீன் வாய்போலும், சுறவுவாய், ஏனைய வகைகளாக, மயிர்முடி, உச்சி, கொண்டை, கொப்பு, சிகலிகை, தம்மிலம், மகளிர் முகத்திற்கு அழகுதரும் தலைமயிரின் ஏனைய பெயர்களாக, அளகம், ஐம்பால், ஓதி, குரல், குழல், கூரல், கூழல், கோதை, சுரியல், நெடுமை, மாட்டம், இலை, ஓரி, குஞ்சி, குடுமி, தளை, தொங்கல், நவிர், வித்தை, கதுப்பு, கோலி என்பனவாம். · உடலுக்குப் பூசப்படும் வாசனை பொடிகள் - உடல் பல்வேறு வண்ணங்களாலும், வண்ணப்பொடிகளாலும் அழகு செய்யப்பட்டது. தலையாய வண்ணக் குழம்பு, தேய்வை, சாந்து, கொயில், தொய்யில், முதலாயின. இறுதியில் கூறப்பட்ட தொய்யில், மார்பு, பாலூட்டி மற்றும் அடிவயிறுகள் மீது தடவப்பெற்று, அழகிய வண்ண ஓவியங்கள் தீட்டம் பெற்றன. தலைமயிருக்கான பூச்சு – தலைமயிறுக்கான பூச்சு தகரம் எனப...