என் எண்ணச் சிதறல்கள் ! (4) Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக் கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1. சாதனை! அனுபவங்களில் இருந்து பிறப்பவையல்ல! கற்பனைகளில் இருந்து பிறப்பவை! அனுபவத்திற்கு வயது தேவை! சாதனைக்கு வயது தேவையில்லை! 2. வலிகள்! நம் வாழ்வின் தொடர் கதைதான்! தொடர்கதையில் கிளைக்கதைப் போல் நமது மகிழ்ச்சியான தருணம்! வலிகள் நிறைந்த வாழ்வில் இளைப்பாறி ரசிப்பதற்கும் இனியவற்றை நுகர்வதற்கும் மடைமாற்றிக் கொண்டால் நம் வாழ்க்கை துயரங்களின் தொகுப்பாக இல்லாமல் ...
பெண் விடுதலைக்கு வித்திட்டவன் பாரதி! ஆணும் பெண்ணும் சமமாகத் தோன்றிய மனித இனத்தில் பெண்ணைப் பொருளாதாரக் காரணிகளுக்காக உருவாக்கப்பட்ட பெண்ணடிமைத்தனம் அரசியலால் வளர்த்தெடுக்கப்பட்டுப் பண்பாட்டால் பாதுகாக்கப்பட்டது. ஆண் மட்டுமே ஆளத்தகுதியுடையவன் என்ற கருத்துருவின் மூலம் முடிவெடுக்கும் அதிகாரங்கள் ஆணுக்குரியதாக வரையறுக்கப்பட்டன. இந்தியாவில் பெண்ணடிமைத்தனம் ஆண் மேலாதிக்க உணர்வுகளோடும், முதலாளித்துவ சமூக அமைப்போடும் மத சாதிய மரபுகளோடும் பின்னிப் பிணைந்து வளர்க்கப்பட்டது. ”தையல் சொற்கேளேல்” ”பேதமை என்பது மாதர்க்கணிகலம்” ”பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு” ”பெண்கள் சிரிச்சாப் போச்சு புகையிலை விரிச்சாப் போச்சு” ”அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு” ...