என் எண்ணச் சிதறல்கள் ! (4) Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக் கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1. சாதனை! அனுபவங்களில் இருந்து பிறப்பவையல்ல! கற்பனைகளில் இருந்து பிறப்பவை! அனுபவத்திற்கு வயது தேவை! சாதனைக்கு வயது தேவையில்லை! 2. வலிகள்! நம் வாழ்வின் தொடர் கதைதான்! தொடர்கதையில் கிளைக்கதைப் போல் நமது மகிழ்ச்சியான தருணம்! வலிகள் நிறைந்த வாழ்வில் இளைப்பாறி ரசிப்பதற்கும் இனியவற்றை நுகர்வதற்கும் மடைமாற்றிக் கொண்டால் நம் வாழ்க்கை துயரங்களின் தொகுப்பாக இல்லாமல் ...
சூதாட்டம் வாழ்க்கை முழுவதும் நம்மிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அதுவா? இதுவா? வாழ்க்கையை உன்னிப்பாக ஆய்ந்தால், இஃது உங்களுக்கு விளங்கும்! · துன்பப்பட்டுப் படிக்க வேண்டும் என்பது இல்லைதான்! ஆனால், வாழ்வில் முன்னேற முடியாது. அதுவா? இதுவா? நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். · உறவு என்று பார்ப்பதா! கடமை என்று பார்ப்பதா! அதுவா? இதுவா? உறவைப் பெரிதாக நினைத்தால், கடமை தவறியதாக ஆகும். கடமையைப் பெரியதாக மதித்தால் உறவு படுதாகும். நடக்கிறதா? இல்லையா? இப்படி எதை எடுத்தாலும் இதுவா? அதுவா? கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதில் தான் மனிதன் இழுபடுகிறான். இதில்தான் சின்னா பின்னப்படுத்தப் படுகிறான். இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததுதான் சூதாட்டம் (...