என் எண்ணச் சிதறல்கள் ! (4) Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக் கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1. சாதனை! அனுபவங்களில் இருந்து பிறப்பவையல்ல! கற்பனைகளில் இருந்து பிறப்பவை! அனுபவத்திற்கு வயது தேவை! சாதனைக்கு வயது தேவையில்லை! 2. வலிகள்! நம் வாழ்வின் தொடர் கதைதான்! தொடர்கதையில் கிளைக்கதைப் போல் நமது மகிழ்ச்சியான தருணம்! வலிகள் நிறைந்த வாழ்வில் இளைப்பாறி ரசிப்பதற்கும் இனியவற்றை நுகர்வதற்கும் மடைமாற்றிக் கொண்டால் நம் வாழ்க்கை துயரங்களின் தொகுப்பாக இல்லாமல் ...
கோத்தர் இனமக்களின் வாழ்வியல் நெறிகள் பழங்குடிகள் என்றால் பழமையானக் குடியைச் சார்ந்த குடிமக்கள் என்று பொருள். இன்று பழங்குடி மக்கள் என்றால் நாகரிகமற்ற , வெளியுலக மக்களோடு தொடர்பு கொள்ள விரும்பாத , கல்வியறிவில்லாத மக்கள் ; என்பது நம் கண்முன் நினைவுக்கு வருகின்றது. இந்நிலை இன்று அரசின் பெருமுயற்சியால் வெகுவாக மாறிக் கொண்டிருக்கிறது. `Tribe’ என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழில் ‘ பழங்குடி ’ என்று மொழி பெயர்த்துள்ளனர். பரிமேலழகர் ‘ பழங்குடி ’ என்னும் சொல்லுக்கு தொன்று தொட்டு வருகின்ற குடியின்கட் பிறந்தார் என்று குறிப்பிடுகிறார். ‘ பழங்குடி ’ என்ற சொல்லுக்கு இணையாகத் தமிழில் ‘ மலைவாழ் மக்கள் ’, ‘ இனக்குழு மக்கள் ’, ‘ ஆதிவாசிகள் ’ எனப் பல்வேறு சொற்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாய்வின் வழி நீலகிரி மாவட்டத்தில் வாழ்கின்ற கோத்தரின பழங்குடி மக்களின் வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைகின்றது. கோத்தர்கள் நீலகிரி மலைப் பகு...