என் எண்ணச் சிதறல்கள் ! (4) Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக் கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1. சாதனை! அனுபவங்களில் இருந்து பிறப்பவையல்ல! கற்பனைகளில் இருந்து பிறப்பவை! அனுபவத்திற்கு வயது தேவை! சாதனைக்கு வயது தேவையில்லை! 2. வலிகள்! நம் வாழ்வின் தொடர் கதைதான்! தொடர்கதையில் கிளைக்கதைப் போல் நமது மகிழ்ச்சியான தருணம்! வலிகள் நிறைந்த வாழ்வில் இளைப்பாறி ரசிப்பதற்கும் இனியவற்றை நுகர்வதற்கும் மடைமாற்றிக் கொண்டால் நம் வாழ்க்கை துயரங்களின் தொகுப்பாக இல்லாமல் ...
இந்து கோயில், அமெரிக்க விமானப்படையின் தேசிய அருங்காட்சியகம் சென்ற அனுபவங்களாக … நானும் என் மகள் குடும்பமும் ஞாயிற்றுக் கிழமை (18.05.2025) அன்று காலை பத்து மணிக்கு மேல் சின்சினாட்டியிலிருந்து கிளம்பினோம். முதலில் Dayton உள்ள பெருமாள் கோயிலுக்கும், பின் மதியம் 2.00 மணிக்கு மேல் அமெரிக்க விமானப்படையின் தேசிய அருங்காட்சியகத்திற்கும் சென்றோம். அதன் சிறப்பினை உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். டேட்டன் இந்து கோயில் ( DAYTON – Hindu Temple) டேட்டனில் (Dayton) இருக்கும் இந்துக் கோயிலுக்கு முற்பகல் 11.30 மணியளவில் சென்றோம். அங்கு கோவில் மிகவும் அழகாக அமைந்திருந்தது. ஒரு பெண் பரத நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தார். அதைக் கண்டு அங்கு வந்த அனைவரும் ரசித்தனர். பின்பு கோயிலில் நம் தமிழ்நாட்டை போல் பிரசாதம் அளித்தார்கள். அன்று மதிய உணவு அளித்தார்கள். சாப்பிட்டு விட்டு வந்தோம். கோவிலுக்குச் சென்றது மனதிற்கு இதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அந்த கோவிலில் நம...