என் எண்ணச் சிதறல்கள் ! (4) Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக் கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1. சாதனை! அனுபவங்களில் இருந்து பிறப்பவையல்ல! கற்பனைகளில் இருந்து பிறப்பவை! அனுபவத்திற்கு வயது தேவை! சாதனைக்கு வயது தேவையில்லை! 2. வலிகள்! நம் வாழ்வின் தொடர் கதைதான்! தொடர்கதையில் கிளைக்கதைப் போல் நமது மகிழ்ச்சியான தருணம்! வலிகள் நிறைந்த வாழ்வில் இளைப்பாறி ரசிப்பதற்கும் இனியவற்றை நுகர்வதற்கும் மடைமாற்றிக் கொண்டால் நம் வாழ்க்கை துயரங்களின் தொகுப்பாக இல்லாமல் ...
மதுரை சென்ற அனுபவங்களாக... தூங்கா நகரமாகிய மதுரைக்கு (12.06.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம். நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம். இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம். இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும், புது அனுபவமாகவும் இருந்தது. இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில், ப்ரத்தியங்கரா தேவி, முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருமோகூர் காளமேக பெருமாள் கோவில், பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள கூடல் அழகர் கோவில் ஆகிய கோவில்களுக்குச் சென்றோம். சூன் 12 –ம் தேதி காலை 7.30 மணிக...