இலக்கியங்களில் பொங்கல் திருநாள்! பொங்கல் திருநாளாம் இன்று நாம் அனைவரும் , ” உழுதுண்டு வாழும் தொழிலைக் காத்து உயர்வைக் கொடுக்கும் செல்வம் பெற்று உயிரினும் மேலான ஒழுக்கம் கொண்டு பாரோர் போற்றும் பண்பு பெற்று இடும்பை இல்லா இன்பம் போற்றி நிறைவான வாழ்வை நிலைபெற்று வாழ்வோம் ” என்ற வாழ்த்துக்களுடன் , நம் முன்னோர்கள் பொங்கல் திருநாளை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை இலக்கியங்கள் வாயிலாக நினைவுக் கூர்வோம் . இயற்கையை வணங்குதல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டு செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் . அவர்கள் , · அறிவியல் முதிர்ச்சியால் உலகத்திற்கே வழிகாட்டியவர்கள் , · விண்ணையும் , மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை உருவாக்கியவர்கள் , · வானிலைக் கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். · நட்சத்திரங்களைய...
அபிடேகத்திற்குரிய கருவிகள் இறைவனுக்கு அபிடேகம் செய்யக் கல், பித்தளை, செம்பு, வெள்ளி, பொன் முதலிய பொருள்களால் ஆனது. · பீடங்கள் – பல தலங்களில் கோமுகத்துடன் கூடிய அபிடேக உலோகப் பீடங்கள் இருக்கின்றன. தஞ்சைப் பெரிய கோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப் பெரிய அலங்காரமான அபிடேகப் பீடம் இருப்பது குறிக்கத்தக்கது. · ஏக தாரை – ஒரே துவாரமுடைய குவளை · சத தாரை – நூறு துளைகளைக் கொண்ட சல்லடை. · சகஸ்ர தாரை – ஆயிரம் துளைகளைக் கொண்ட சல்லடை. இதனைத் திருமால் ஆலயங்களில் ‘சோணாயிரம் கொண்டு’ என்பர். · சங்கு – 108 அல்லது 1008 சங்குகள். · மடி சங்கு – நீரொழுகும் சிறு சிறு தூம்புகளைக் கொண்ட பசுவின் மடி போன்ற சங்கு; அபூர்வமானது. · ...