திருவையாறு சென்ற அனுபவங்கள் ( நூல் வெளியீட்டு விழா ) திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் , ஔவை அறக்கட்டளை நடத்திய உலகத் தாய்மொழி நாள் – 2026 (21.02.2026) நாளை முன்னிட்டு நடத்திய நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் என்னுடைய நூல் ‘ சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள் ’ எனும் தலைப்பில் வெளியானது . அந்த நாளில் நடந்த நினைவைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் . திருச்சியிலிருந்து நானும் , முசிறி , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற இணைப்பேராசிரியர் முனைவர் பாக்கியரதி அவர்கள் , மற்றும் அவர்களின் மூத்தச் சகோதரி அவர்களும் திருவையாறு (21.02.2026) சனிக்கிழமை சென்றோம் . நூல் வெளியீட்டு விழா காலை 11.00 மணிக்கு என்பதால் நாங்கள் செல்லும் வழியில் உள்ள கோயில்களுக்குச் சென்று பார்த்து விட்டு சென்றோம் . திருமழப்பாடி தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் , கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருமழப்பாடி வைத்தி...
கற்றல் நன்றே! கற்றல் நன்றே! புறநானூறு, பாடல் எண் -183 பாடியவர் – பாண்டியன் ஆரியப்படைக் கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் மேன்மை குறித்துப் பாடிய பாடல். துறை – பொதுவியல் மூத்தோன் அரசு கட்டில் ஏறுதல் என்ற முறைமையை நீக்கி அறிவுடையவனுக்குத்தான் அத்தகுதி உண்டு என்று குறிப்பிடப் பெற்றிருப்பதைக் காணலாம். ”உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் ...