வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல் 2023 - ஆம் ஆண்டு , குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205, விலை 1 50 ரூபாய். முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் . நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக , பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...
விவேகானந்தரின் சிந்தனைகள் ! விவேகானந்தர் ஒரு துறவி ; வீரமும் விவேகமும் மனிதநேயமும் எதிர்கால இந்தியாவைப் பற்றிய தொலை நோக்குப் பார்வையும் கொண்டவர் . ஆசைகளை வென்றவர் . தவமுனிவராகத் திகழ்ந்தவர் . எனினும் விவேகானந்தரின் சொற்பொழிவுகளில் ஆசையின்மை , தவம் போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தியதைவிட அதிகமாக மக்கள் நல சிந்தனைகளை வெளிப்படுத்தினார் . ஏழைமக்களைப் பற்றிக் கவலைப்பட்டார் . அவர்களுக்கு உணவும் உடையும் இருப்பிடமும் கிடைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார் . ” சோறு வேண்டும் , சோறு வேண்டும் . இங்கே ஒரு பிடி சோறு தரமாட்டாராம் . சொர்க்கத்தில் நித்தியானந்தத்தைத் தருவாராம் – இத்தகைய ஒரு கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை ” என்று இதயம் குமுறினார் விவேகானந்தர் . விவேகானந்தரின் வாழ்க்கை நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஏழை எளிய , இன்னல் பல பெற்ற உழை...