மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...
தொல்தமிழர் உணவுமுறைகள் தமிழ் மக்கள் அனைவரும் ஒரே வகையான உணவை உண்டார்கள் என்பதற்கு எவ்விதச் சான்றுகளும் இல்லை . இயற்கையாக அமைந்த நிலப்பாகுபாடுகளில் ஆங்காங்குக் கிடைத்தப் பொருள்களையும் , தங்கள் முயற்சியால் தட்பவெப்ப நிலைக்கேற்ப உற்பத்தி செய்தப் பொருள்களையும் கொண்டு தங்கள் உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டார்கள் என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன . உணவுப் பொருள்களை அப்படியே உண்ணாமல் நல்ல முறையில் பக்குவம் செய்து சுவையேற்றி உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள் . குறிஞ்சி நில மக்களின் உணவுமுறைகள் சோழநாட்டுக் குறிஞ்சி நில மக்கள் கிழங்கையும் தேனையும் மகிழ்ந்து உண்டார்கள் . இவ்விரண்டு பொருள்களையும் பிறருக்கு விற்று அவற்றிற்குப் பதிலாக மீன் , நெய்யையும் நறவையும் வாங்கிப் போய் உண்டுள்ளார்கள் . சில சிறப்பான நாள்களில் நெய் மிகுதியாகப் பெய்த உணவு அவர்களால் உண்ணப்பட்டது . மலை அடிவாரத்தில் வாழ்ந்த சிற்றூர் மக்கள் தினைச் சோறு சமைத்து நெய்யில் இறைச்சியை வேகவைத்து இரண்டையும் சேர்த்து உண்டார்கள் . ...