கீழடிப் புதையல் இந்நூல் கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய முழுமையான ஒரு புரிதலை அளிக்கும் ஆய்வு நூலாகும் . கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள் , சுடுமண் சிற்பங்கள் , பகடைக்காய்கள் , செங்கல் கட்டுமானங்கள் இவைகளைக் கொண்டு கீழடி நாகரிகம் , பண்பாடு , தொழில் , வாணிகம் , பொருளாதாரம் , விளையாட்டு எனப் பல தலைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை உள்ளடக்கியுள்ளது . இக்கருத்தை மையமாகக் கொண்டு கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் இந்நூலை எழுதியுள்ளார் ஆசிரியர் . இவர் சென்னையில் நடைபெற்ற 11- ஆம் உலக தமிழ் மாநாட்டில் அளித்த ஆய்வுக் கட்டுரை ‘ கீழடி அகழாய்வுகள் – மீளுருவாகும் சங்கத் தமிழர் பண்பாட்டு வரலாறு ’ என்ற தலைப்பில் வெளியிட்டக் கட்டுரையைக் கீழடிப் புதையல் என்னும் தலைப்பில் நூலாக உருவாக்கியுள்ளார் . இந்நூலில் அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களின் புகைப்படங்களையும் , கீழடி அருங்காட்சியகம் குறித்தச் செய்திகளையும் இந்நூலில் முன் வைத்துள்ளார் . இந்நூலில் கீழடி புதையல் , கலைகள் , வணிகம் , வேளாண்மை , நானோ தொழில் நுட்பம் , புவியியல் , வைகை ஆற்றுச் சமவெளி ...
‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற் போல்’ ஆறுகளில் வற்றாத ஜீவ நதிகளும் உண்டு. கோடையில் மிகுந்த வெப்பத்தால் நீர் வரண்டு மணல் திட்டுக்களாக காணப்பெறும் ஆறுகளும் உண்டு. மண் திட்டு – அதாவது குதிர் என்பதற்கு குன்று, திடல் என்பது பொருள். இப்போது மணல் குன்றானது மழை பொய்த்த காலங்களிலோ, கோடையிலோ வரண்டிருக்கும் போது சில ஆறுகளில் இவ்வாறு மணல் குன்றுகள் ஆங்காங்கே நீரினூடே காணக் கிடைக்கும். இப்படிப்பட்ட மண் குதிரை மணல் குன்றை நம்பி தைரியமாக இறங்கி நடப்போமானால் திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுக்கும்போது நீர் ஆழம் நம்மைத் திணற அடிக்கும். எனவே இத்தகைய மணல் குன்றை நம்பி இறங்கித் துன்பப்படக் கூடாது என அறிவுறுத்த இயற்கையின் யதார்த்தத்தைப் புரிய வைத்த மொழியே ‘மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கினாற் போல்’ என்பது! பார்வை நூல் 1. மாணவர்களுக்கான பழமொழி கட்டுரைகள் – ஹேமா ராமானுஜம் , பாவை பப்ளிகேஷன்ஸ் , சென்னை - 14. ...