இளமையில் கல் நில்லாது செல் ! ( புத்தக மதிப்புரை ) இன்று புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் குரும்பலூர் இராஜீ மோகன் அவர்கள் எழுதிய இளமையில் கல் நில்லாது செல் ! என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை நவம்பர் 2022 ஆம் ஆண்டு , சென்னை , ரத்னா ஆப்செட் பிரிண்டர்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 116, விலை 200 ரூபாய் . ஐயா இராஜீமோகன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் பிறந்தவர் . அரசுப்பள்ளியில் 7 வது வரை படித்தவர் . ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் குருகுலத்தில் உயர்க்கல்வியும் , அண்ணா பல்கலைக் கழகத்தில் எந்திரவியலில் பொறியியல் படிப்பையும் , நிர்வாக மேலாண்மை என்ற முதுநிலை படிப்பையும் பயின்றவர் . 37 வருடங்கள் என்எல்சி இந்திய நிறுவனத்தில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றியவர் . மாணவர்களின் ஆற்றலை நெறிப்படுத்தும் இந்நூலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் மாண்பமை முனைவர் இராம . கதிரேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார் . நெய்வேலி சவகர் கல்லூரி முதல்வர் முனைவர் வெ . தி . சந்திரசேகரன் அவர்கள் அணி...
தமிழே அறிவு மொழி! தமிழரில் ஒவ்வொருவரும் தமிழ் மொழியிலும் ஆங்கிலத்திலும் சம அளவில் பயிற்சி பெற வேண்டுமென்பதும் தமிழுக்குப் பெருமை தேடுவது ஆகாது. உலகிலுள்ள அறிவு நூல்களெல்லாம் தமிழில் வெளிவர வேண்டுமானால், எல்லோரும் ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக ஏற்றுக் கற்கும் நிலை கைவிடப்பட வேண்டும். ஜெர்மனியன் ஜெர்மன் மொழியின் மூலமாகத்தான் உலகியல் அறிவைப் பெற்று அறிவாளியாகின்றான். அவன் ஜெர்மனியையும் ஆங்கிலத்தையும் இரு கண்களாகக் கொண்டு உலகத்தைப் பார்ப்பதில்லை. அப்படியே பிரான்ஸ், கிரேக்கம், இத்தாலி, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிலெல்லாம் அந்தந்த நாட்டு மொழியின் மூலந்தான் மக்கள் உலகியல் அறிவைப் பெற்று அறிவாளிகளாகிறார்கள். அற்புதங்கள் புரியும் விஞ்ஞானிகள் கூட இதற்கு விலக்கல்லர். உலகப் புகழ் பெற்ற ருஷ்ய ஞானியான டால்ஸ்டாய்க்கு ஆங்கிலம் தெரியாது. வள்ளுவரை இன்றும் உலகம் போற்றுகிறதே. அவருடைய திருக்குறள் உலக மொழிகளிலெல்லாம் வெளியாகியிருக்...