இளமையில் கல் நில்லாது செல் ! ( புத்தக மதிப்புரை ) இன்று புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் குரும்பலூர் இராஜீ மோகன் அவர்கள் எழுதிய இளமையில் கல் நில்லாது செல் ! என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை நவம்பர் 2022 ஆம் ஆண்டு , சென்னை , ரத்னா ஆப்செட் பிரிண்டர்ஸ் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 116, விலை 200 ரூபாய் . ஐயா இராஜீமோகன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் பிறந்தவர் . அரசுப்பள்ளியில் 7 வது வரை படித்தவர் . ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் குருகுலத்தில் உயர்க்கல்வியும் , அண்ணா பல்கலைக் கழகத்தில் எந்திரவியலில் பொறியியல் படிப்பையும் , நிர்வாக மேலாண்மை என்ற முதுநிலை படிப்பையும் பயின்றவர் . 37 வருடங்கள் என்எல்சி இந்திய நிறுவனத்தில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றியவர் . மாணவர்களின் ஆற்றலை நெறிப்படுத்தும் இந்நூலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் மாண்பமை முனைவர் இராம . கதிரேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார் . நெய்வேலி சவகர் கல்லூரி முதல்வர் முனைவர் வெ . தி . சந்திரசேகரன் அவர்கள் அணி...
மாளிகைகள் நம் முன்னோர்கள் மாட மாளிகைகள் வானுயர ஓங்கிய வண்ணம் எழுப்புவதில் கைவண்ணம் பெற்றிருந்தனர். கட்டப்பெறும் மாளிகைகளின் வாசல் வடக்கு நோக்கியோ, கிழக்கு பார்த்தோ இருக்குமாறு அமைத்தார்கள். இதனை, ”மாளிகை தனக்கம் மாநகர் வடகுணபால் கண்டு” என்று திருவிளையாடற்புராணத்தில் குறிப்பிடுகின்றார். மாளிகைகளால் காற்றும் வெளிச்சமும் புழங்கும் வகையில் காலதர்களும் பருவத்திற்கு ஏற்ற வேனிற்பள்ளி கூதிப் பள்ளிகளும், நிலவுப் பயன் கொள்ளும் வேயா மாடங்களும் வைத்து வடிவமைக்கப்பட்டன. காலதர் என்பற்கு சாளரம், நேர்வாய்க்கட்டளை, புழை எனப் பல பெயர்கள் உள்ளன. சாளரங்களில் மணிமாலைகள் தொங்கவிடப்பட்டு எழிலுற அமைக்கப்பட்டிருந்ததை, ”மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த கோலச் சாளரக் குறுங்கண்” (சிலம்பு-2:22-23) சி...