திருவையாறு சென்ற அனுபவங்கள் ( நூல் வெளியீட்டு விழா ) திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் , ஔவை அறக்கட்டளை நடத்திய உலகத் தாய்மொழி நாள் – 2026 (21.02.2026) நாளை முன்னிட்டு நடத்திய நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் என்னுடைய நூல் ‘ சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள் ’ எனும் தலைப்பில் வெளியானது . அந்த நாளில் நடந்த நினைவைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் . திருச்சியிலிருந்து நானும் , முசிறி , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற இணைப்பேராசிரியர் முனைவர் பாக்கியரதி அவர்கள் , மற்றும் அவர்களின் மூத்தச் சகோதரி அவர்களும் திருவையாறு (21.02.2026) சனிக்கிழமை சென்றோம் . நூல் வெளியீட்டு விழா காலை 11.00 மணிக்கு என்பதால் நாங்கள் செல்லும் வழியில் உள்ள கோயில்களுக்குச் சென்று பார்த்து விட்டு சென்றோம் . திருமழப்பாடி தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் , கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருமழப்பாடி வைத்தி...
பழந்தமிழரும் விழாக்களும் ‘விழா’ என்று தோன்றியது என்பது வரையறைச் செய்ய இயலாது. தொழில் நுட்பம் வளர்ச்சி அடையாத நிலையில் இயற்கைச் சக்தி மற்றும் கருவிகளின் செயற்பாட்டை மட்டுமின்றி, கனவுகள் தோற்றம் குறித்தும், பண்டைய மனிதர்களால் புரிந்து கொள்ள இயலாத நிலையில் அப்பொருள்களுக்கு மிகுதியான ஆற்றல் இருப்பதாக புராதன மனிதன் எண்ணினான். அவ்வாற்றலை வழிபடும் வகையில் ‘புனிதப் பொருள் வழிபாடு தோற்றம் பெற்றது என்பர். காலப் போக்கில் வழிபடும் பொருட்டு இயற்கை சக்திகளுக்கு உருவம் அளித்தான். அதனை மனிதனின் உருவாக்கக் கற்பனை என்பார் மானிடவியலார். இவ்வாறு தன் தேவைக்கும், மகிழ்ச்சிக்கும், நன்றி தெரிவிக்கும் வகையிலும் விழா நம்பிக்கைக்குரிய செயலாக வழக்கில் இடம் பெற்றது. தமிழர் விழாக்கள் நோன்பும், சடங்கும் இணைந்து செயற்படும் நிலையில் அமைவதாகச் சுட்டுவர். விழாக்களில் நோன்புச் செயலும், சடங்கும் ஒருமித்து இலக்கியங்கள் உணர்த்துகின்றன. அந்நிலையில் ப...