Skip to main content

Posts

Showing posts from July, 2022

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

மங்கையர் பருவம்

          மங்கையர் பருவம் என்பது செல்லப் பருவம் தாண்டி, அறிவு வளர்ந்த மங்கைப் பருவம் . இனியும் குழந்தையல்ல . அனைத்துக் குணநலன்களையும் கொண்டு Maturity அடைந்து வாழ வேண்டும் . பொறுப்பு . கடமை , உரிமை இவைகளை உணர்த்தும் விதமாக இச்சடங்குகள் செய்யப்படுகின்றன . தாய்மாமன் மூலம் இக்கௌரவம் வழங்கப்படுவதாக அமைகிறது .        மஞ்சள் (Antiseptic), வேப்பிலையைப் போட்டு ஊறவைத்து அந்நீரால் குளிக்க வைப்பார்கள் . இலைகள் தலையில் விழாத வகையில் , ஆரோக்கியத்திற்கேற்ப செம்பு சல்லடை வைத்து அதன்வழி ஊற்றுவார்கள் . முதன்முதலில் ஊற்றும்போது அதில் நவமணிகளால் ஆன நகைகள் , தங்கம் , வெள்ளி என மருத்துவ குணங்கள் நிறைந்த நகைகளில் படுமாறு நீர் ஊற்றுவார்கள் . இதனை மஞ்சள் நீராட்டு விழா என்பர் .           மேலும் உடலில் உள்ள மாறுதல்களின் விளைவைச் சமன் செய்ய புரதச்சத்து உணவுவகைகளைக் கொடுப்பார்கள் . காலையில் வெறும் வயிற்றில் முட்டை , நல்லெண்ணெய் , கொடுப்பார்கள் .   உழுத்தங்களி . சிவப்பு புட்டரிசி , பருப்பு ...

பிள்ளைகளின் எதிர்காலம்?

             ஒரு நாட்டின் எதிர்காலம், சிறப்பாக இருக்கவேண்டுமானால், முதல் தேவை, வளரும் தலைமுறைகள், நாட்டின் வருங்காலத் தூண்கள். அவர்கள் ஒழுக்கத்துடனும், அனைத்துப் பண்பு நலன்களுடனும் இருக்க வேண்டும். அதற்கு அடிப்படை தேவை, ஒற்றுமையான, பொறுப்பான பெற்றோர்கள், கட்டுப்பாடான குடும்பம், அன்பான பிணைப்பு.       மருத்துவ ஆய்வில், குழந்தைகளின் நல்ல மனப்பான்மைக்கு முதலில் பெற்றோர் கவனம், இரண்டாவது, முதல் பெரிய குழந்தை, அடுத்தக் குழந்தைக்குப் பாதுகாப்பு, பராமரிப்புத் தருவது. ஆங்கிலத்தில் கூற வேண்டுமானால் “Parental Care, Child to Child Care” என்பதே. இதனால் பெற்றோரின் ஒற்றுமையான, கலாச்சார கட்டுப்பாட்டுடன், பாசம் கொண்ட பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் தான் தாம் தேவை என்பதை மேலைநாட்டு மக்கள் உணர்ந்து அதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைத்தார்கள்.           நம்மைக் கண்டு, பாடம் பெற்று வருகின்றன மேலைநாடுகள். ஆனால் நாம் இந்த முப்பது வருடத்தில் மேலைநாடுகளைப்போல நாகரிகம் பெற்...

சங்க இலக்கியத்தில் நோய்களும் மருத்துவமும்

              சங்க இலக்கியத்தில் நோய்களும் மருத்துவமும் சங்க காலப் புலவர்கள் நானூற்று எழுபத்து மூவருள் உறையூர் மருத்துவன் தாமோதரனார் மருத்துவத் தொழில் புரிந்தவர் என்பது அவர்தம் பெயரால் புலப்படும். சங்கப் பாடல்கள் இம்மருத்துவர்களின் இயல்பைப் பல அடிகளில் குறித்துள்ளன. பிணியுற்றவர்களுக்கு அவர் விரும்புவன கொடாது வேறாகிய மருந்து கொடுப்பது மருத்துவர் இயல்பு. இதனை நத்தங்கொற்றனார்,           ”அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாது           மருந்தாய்ந்து கொடுத்த அறவோன்” (நற்.136)    எனக் குறிப்பிடுவர். மருத்துவன் நோய்க்குரிய மருந்தை வாய்வழியாக ஊட்டுதல் மரபு. இதனைச் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ,                    ”... .. ...யாக்கையுண் மருத்துவ னூட்டிய                     மருந்து” (கலித்.17) எனச் சுட்டுவர். மேலும்...

இலக்கியத்தில் ‘கண்ணி’

          ”கண்ணி” என்பதற்குத் தமிழ்மொழியகராதி   ”தலையில் சூடும் பூமாலை, போர்ப்பூ, பூங்கொத்து. புள்ளைப் படுக்கும் முடிப்புக் கயிறு, முடிச்சு, கொழுந்து, இசைப்பாட்டு, கரிசலாங்கண்ணி” என்று பொருள் கூறுகிறது. இவற்றில் போர்ப்பூ, தலையில் சூடும் பூமாலை என்ற பொருள்களில் சங்க இலக்கியங்களில இச்சொல் ஆளப்பட்டுள்ளது.           இரு பக்கமும் பூக்கள் பொருந்தத் தொடுக்கும் ஒரு தொகுப்பு கண்ணி எனப்படும். தலையில் சூடப்படுவது ‘கண்ணி’ என்றும், மார்பில் அணியப்படுவது ‘மாலை, தார்’ என்றும் வழங்கப்படுகிறது. தலையில் அணியும் பூமாலையிலேயே ஆண்கள் அணிவது கண்ணி, என்றும் பெண்கள் அணிவது கோதை என்றும் தனித்தனிப் பெயர்களால் சுட்டப்படுகிறது. இவ்வேறுபாட்டினை,           ”மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்              மகளிர் கோதை மைந்தர் மலையவும்” (பட்டினப். 109-110) என்னும் அடிகள் உணர்த்துகின்றன.           தலைய...

கணவன் மனைவி உறவின் மகத்துவம்

  கணவன்   மனைவி உறவின் மகத்துவம்           கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்போதுதான் அவர்கள் நல்ல பெற்றோர்களாக இருக்க முடியும். இல்லற வாழ்க்கையில், இல்லற உறவில் மனைவியின் பங்கு அதிகம். மனைவி, தலைவியாக, அமைச்சராக, ஆலோசகராக, அடியாளாக, தோழியாக எனப் பலவிதப் பொறுப்புகளை வகித்து குடும்பத்தைக் கோயிலாக்கக் கூடிய சக்தி படைத்தவளாகிறாள். அத்தகைய மனைவியின் உணர்வினை மதித்தவர்கள் வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள் என்று வரலாறு கூறுகிறது. ·                        அமெரிக்க ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜாக்ஸன் திருமணமான போது கல்வி அறிவு இல்லாதவர். திருமணத்திற்குப் பிறகுதான் மனைவியின் ஊக்கம் அவரை உயர்பட்டம் பெறவைத்தது. ஜனாதிபதியாக உங்களால் முடியும் என்ற உணர்ச்சிமிக்க வார்த்தைகள் ஜனாதிபதியாக்கியது. ·                     ஷாஜஹான், மும்தாஜ் உள்ள காதலால் உலக அதிசய தாஜ்மகால் உருவானது என்று கூறப்படுகிறது. ஷாஜஹானுக்குக் குழப்பமான பல சூழ்நிலைகளில் காப்பாற்றிய...

சங்க இலக்கியத்தில் கட்டடக்கலை

  சங்க இலக்கியத்தில் கட்டடக்கலை           வரலாற்றுக்கு அடிப்படைச் சான்றாகிய கட்டடக்கலை சங்ககாலத்தில் சிறப்பாக இருந்தது . கட்டட அமைப்பிற்கு உதாரணமாக நிழலுக்காகவும் , விழாக்காலத்திலும் வீட்டில் முன் பந்தலிட்டு இருந்தன .           ” கொடுங்கால் புன்னைக் கோடுதுடித்   தியற்றிய              பைங்காய்த் தூங்கும் பாய்மணல் பந்தர் ”                                                                                    (பெரும்பாண்.266-267) எனப் புன்னை மரக்கொம்பைக் காலாக நட்டுப் புதுமணல் பந்தலிடப்பட்டது சொல்லப்படுகிறது . சிற்றில்கள்      சிற்றில்கள் என்பது குடில் என்றும் குரம்பை என்றும் அழைக்கப்படுகிறது . மீனவர் , வேடர் , பாணர் , உழ...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...